குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 விருச்சிகம் ராசி..!!
குரு பெயர்ச்சி பலன்கள்..!!
💝 வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 01.05.2024 முதல் 11.05.2025 வரை. எதிலும் துடிப்புடன் செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே..!! இதுவரை சத்ரு ஸ்தானமான ஆறாம் ராசியில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 18ம் (01.05.2024) நாள் முதல் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.💝 களத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குரு தான் நின்ற ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியான லாப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியான ராசி ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியான சகோதர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார். விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) அன்பர்களே! வரன் தேடிக் கொண்டுள்ளீர்களா? மனதிற்கேற்ற மணவாளன்/மணமகள் அமைய நித்ரா மேட்ரிமோனியில் இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்.
குருவின் பார்வை பலன்கள்:
💝 குரு ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் சார்ந்த துறைகளில் பொறுப்புகளும், அதிகாரங்களும் மேம்படும். சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். இணையம் தொடர்பான துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.💝 குரு ஏழாம் பார்வையாக ராசி ஸ்தானத்தை பார்ப்பதால் மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்புகள் உயரும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
💝 குரு ஒன்பதாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வித்தியாசமான வாய்ப்புகள் ஏற்படும். இளைய உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மனதளவில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும்.
குரு நின்ற பலன்:
💝 விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-ன் படி, குரு களத்திர ஸ்தானத்தில் நிற்பதால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். தோற்றப்பொலிவு மேம்படும். பேச்சுக்களில் கனிவு உண்டாகும். குழந்தைகளை பற்றிய புரிதல் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும்.குருபகவானின் நட்சத்திர பாத சஞ்சார பலன்கள்:
குரு 01.05.2024 முதல் 11.06.2024 வரை கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,💝 குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். தொழில் சார்ந்த கூட்டாளிகளின் ஒத்துழைப்பு தாமதமாக கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
குரு 12.06.2024 முதல் 18.08.2024 வரை மற்றும் 12.02.2025 முதல் 04.04.2025 வரை ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,
💝 சுபகாரியங்களின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதிய தொடர்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள்.
குரு 19.08.2024 முதல் 14.10.2024 வரை மற்றும் 05.04.2025 முதல் 10.05.2025 வரை மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால்,
💝 மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வெளிநாட்டு தொடர்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கடன் சார்ந்த சில உதவிகளின் மூலம் மேன்மை ஏற்படும்.
குருவின் வக்ரகால சஞ்சார பலன்கள்:
குரு 15.10.2024 முதல் 11.02.2025 வரை வக்ர சஞ்சாரம்:💝 சுபகாரிய செயல்களில் அலைச்சலும், தாமதமும் ஏற்படும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் பக்குவங்கள் பிறக்கும். வியாபார ரீதியான பயணங்களால் சில விரயங்களுக்குப் பின்பு ஆதாயம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும்.
குரு பெயர்ச்சியால் உண்டாகும் பொதுவான பலன்கள்:
பெண்கள்:💝 மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைக்குண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகளும், உயர்வும் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள்.
மாணவர்கள்:
💝 மாணவர்கள் தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். கட்டுரை மற்றும் இலக்கியம் சார்ந்த பிரிவுகளில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். உயர்நிலைக் கல்வியில் புரிதலும், தெளிவும் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள்:
💝 உத்தியோகத்தில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட ஊதிய உயர்வுகள் சிலருக்கு சாதகமாகும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் அலுவலகத்தில் நட்பு வட்டம் விரிவடையும். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். வெளியூர் சென்று வேலை செய்வதற்கான எண்ணங்கள் கைகூடிவரும்.
வியாபாரிகள்:
💝 வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். வாகன பயணங்களின் மூலம் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். மறைமுகப் போட்டிகளால் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பொருட்களின் தேக்கம் உண்டானாலும் லாபங்களில் குறைவு ஏற்படாது. வேலையாட்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை கொடுக்கும்.
கலைஞர்கள்:
💝 கலைத்துறையில் இருப்பவர்களுக்கு தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். திறமைக்குண்டான மதிப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் புதிய படைப்புகளை வெளிப்படுத்தி ஆதரவுகளை பெருக்கிக் கொள்வீர்கள். நுட்பமான சில கலை சார்ந்த விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள்:
💝 பேச்சுக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கட்சி நிமிர்த்தமான பயணங்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். சில எதிர்ப்புகளால் நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும்.
நன்மைகள்:
💝 நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகளும், சிந்தனைகளில் தெளிவும், ஒத்துழைப்பான சூழல்களும் உண்டாகும்.
கவனம்:
💝 நடைபெற இருக்கின்ற குரு பெயர்ச்சியில் தம்பதிகளுக்கிடையே மனம் விட்டு பேசுவது புரிதலையும், அன்யோன்னியத்தையும் ஏற்படுத்தும். தேவையற்ற விரயங்களை தவிர்க்கும்.
வழிபாடு:
💝 திங்கட்கிழமைதோறும் வில்வ இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர தடைபட்ட சுபகாரியங்கள் யாவும் கைகூடிவரும்.
முடிவுரை:
💝 விருச்சிக ராசி அன்பர்களே..! இந்த குரு பெயர்ச்சியில் 70/100 மதிப்பெண்களை பெறுவதால் புதுமையான சில விஷயங்களில் ஆர்வமும், தேடலும் உண்டாகும். மேலே கூறப்பட்ட பலன்கள் யாவும் பொதுப் பலன்கள். அவரவர்களின் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும். விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-ல் குருவின் ராஜயோகத்தால் திருமண வாழ்க்கை நல்ல படியாக அமைய நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்யுங்கள்!