விருச்சிகம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2023 - 2025
சர்ப்ப கிரகம், நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் ஒன்றரை வருடங்களில் சஞ்சரிக்கக் கூடுயவை. இந்த ஆண்டு ராகு-கேது பெயர்ச்சி விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை கொடுக்கப்போகிறார் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். ராகுபகவான்! இப்பொழுது விருச்சிகம் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். குரு வீட்டில் அமர்வதால் கெட்டபலன்களை குறைத்து நல்லதையே செய்வார். எதிரில் இருப்பவர் பேசத் தொடங்கும் போதே அடுத்ததாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிவதில் கில்லாடிகளான விருச்சிகம் ராசி அன்பர்களே திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டுள்ளீர்களா? அப்போ உங்கள் தேடலுக்கான சிறந்த தளம் நித்ரா மணமாலை! இன்றே பதிவு செய்யுங்கள்..!!
ராகு-கேது பார்வை
💓 சூழ்நிலைக்கு ஏற்ப தனது வியூகங்களை மாற்றி அமைத்து கொள்ளும் விருச்சிக ராசி அன்பர்களே..! இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டுகாலம் போக சுகத்திற்கு அதிபதியான ராகு பகவான் விருச்சிகம் ராசிக்கு புத்திர ஸ்தானம் என்னும் ஐந்தாம் பாவகத்திலும், ஞானத்தை கொடுக்கக்கூடியவரான கேது பகவான் ராசிக்கு லாப ஸ்தானம் என்னும் பதினொன்றாம் பாவகத்திலும் சஞ்சாரம்செய்ய இருக்கின்றார்கள்.
💓 ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் எதிலும் வேகத்தை விட விவேகத்தை கடைபிடிக்கவும். புதுவிதமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். லாபத்தை மேம்படுத்தும் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதுமையான செயல்களில் ஆர்வம் மேம்படும். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். மறைமுக தகவல்களை புரிந்து கொள்வீர்கள். பிரபலமானவர்களின் தொடர்பு உண்டாகும். போட்டி, பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும்.
💓 ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். தொழிற்சங்க பணிகளில் பொறுப்புகள் மேம்படும். முதலீடு தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். ஆன்மிக பணிகளில் தெளிவு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வமின்மை ஏற்படும். அயல் நாட்டு பயணங்கள் கைகூடும். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். மூத்த சகோதரர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உறவுகளின் வழியில் எதிர்பார்த்த சில காரியங்கள் தாமதமாகலாம்.
உடல் ஆரோக்கியம்
💓 உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் அமையும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் மற்றும் புத்துணர்ச்சி உண்டாகும். இடது காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணுக்கால் வலிகள் குறையும்.
பொருளாதாரம்
💓 பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வரவுகளை மீட்பதற்கான சூழல் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். விளையாட்டு செயல்களில் கவனத்துடன் இருக்கவும். இணைய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். சிறு சிறு முதலீடுகளின் மூலம் சேமிப்பை மேம்படுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்
💓 உத்தியோகம் தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். பணி மாற்றம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நன்மையை உண்டாக்கும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். சக ஊழியர்களை பற்றிய புரிதல் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் முன்னேற்றம் உண்டாகும். வணிகம் தொடர்பான முதலீடுகளை ஆலோசித்து முடிவு செய்யுங்கள்.
வியாபாரிகள்
💓 வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வீடு, மனை தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். புதிய யுக்திகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும்.
அரசியல்வாதிகள்
💓 அரசியல்வாதிகள் வாக்குறுதி அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவதால் செல்வாக்கும், நம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கட்சி சார்ந்த பணிகளில் வாரிசுகளை ஈடுபடுத்துவீர்கள்.
கலைஞர்கள்
💓 கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் மூத்த கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத வெளியூர் பயண வாய்ப்புகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஒப்பந்த விஷயங்களில் முடிவெடுக்கும் முன் இருமுறை யோசியுங்கள். புதுமையான சிந்தனைகளின் மூலம் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செய்கின்ற முயற்சிக்கான அங்கீகாரங்கள் சிலருக்கு சாதகமாக அமையும்.
பெண்கள்
💓 பெண்களுக்கு மனதில் புதுமையான சிந்தனை மற்றும் ஆசைகள் மேம்படும். ஆடம்பரமான பேச்சுக்களை நம்பி முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். மறைமுகமான சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பு மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் விஷயத்தில் சிந்தித்து முடிவு எடுக்கவும். அன்புக்குரியவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படுவது அவசியம்.
மாணவர்கள்
💓 மாணவர்கள் உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் மெத்தன போக்கின்றி செயல்படவும். தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகளும், வாய்ப்புகளும் உண்டாகும். ஆராய்ச்சி கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் உண்டாகும்.
நன்மைகள்
💓 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் புதுமையான செயல்களில் ஆர்வமும், மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள்.
தீமைகள்
💓 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் சிந்தனைகள் மற்றும் உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும்.
வழிபாடு
💓 குலதெய்வ வழிபாடு செய்துவர எண்ணங்களில் தெளிவும், சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.
💓 திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபாடு செய்துவர செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள்.
பரிகாரம்
💓 துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமை பூஜை செய்து வழிபட்டால் எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.
மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுவான பலன்கள். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும். அன்பான விருச்சிகம் ராசிக்காரர்களே!! இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை வழங்கி உங்கள் வாழ்வில் ஒளியேற்றப் போகிறார். இன்னும் உங்களுக்கு நல்ல வரன் அமைவில்லையா? வரன் பார்க்க நீங்கள் அங்கேயும் இங்கேயும் அலைய வேண்டாம்!! உங்கள் சொந்த மாவட்டங்களில் உள்ள வரன்கள் கூட நமது நித்ரா மணமாலையில் உள்ளன. இப்பவே பதிவு செய்யுங்கள்!!