விளக்கு ஏற்றும் முறை
முன்னுரை:
💐 நாள்தோறும் நம் வீட்டில் தீபம் ஏற்றுவது நல்லது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். வீட்டில் எந்த சுபகாரியங்கள் நடந்தாலும் தீபம் ஏற்றுவது தமிழக மக்களின் வழக்கம் ஆகும். தீபம் ஏற்றுவது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. திருமணம் முடிந்து வீட்டுக்குள் வரும் மருமகளும் முதலில் தீபம் ஏற்ற வேண்டும் என்பார்கள். திருமணமாகாதவர்கள் உங்கள் வரன்களை காண நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! உங்களுக்கான வரன்களை காணுங்கள்!! விளக்கு ஏற்றும் முறைகளை பற்றி இங்கு காண்போம்.
விளக்கு ஏற்றுவதற்கு உகந்த நேரம்:
💐 பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. இந்த நேரத்தில் அனைத்து தெய்வங்களும் தேவர்களும் வாசம் புரிவார்கள் என்பர். பிரம்ம முகூர்த்த நேரமானது அதிகாலை 3 - 5.30 மணி வரை ஆகும். அதிகாலையில் தீபம் ஏற்ற முடியாவிட்டாலும், குறைந்தது 6 மணிக்கு முன்னதாகவே தீபம் ஏற்ற வேண்டும். காலை மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றுவது நல்லது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னும் விளக்குகளை ஏற்ற வேண்டும்.
எத்தனை முகம் விளக்கேற்றலாம்? அதனால் என்ன பலன்கள்?
💐 ஒரு முகம் - சுமாரான பலன் தரும், இரு முகம் - குடும்ப ஒற்றுமை, மூன்று முகம் - மகன்கள் சம்பந்தமான இன்பங்கள், நான்கு முகம் - அஷ்டலக்ஷ்மியின் அருளால் சகல நன்மைகளையும் தரும், ஐந்து முகம் - வீட்டில் எப்போதும் செல்வம் செழிக்கும்.
எத்தனை விளக்குகள் ஏற்றலாம்?
💐 செல்வம் பெருக ஐந்துமுக தீபம் ஏற்ற வேண்டுமென்றால் குத்து விளக்கு ஏற்றினால் போதுமா? என்ற சந்தேகம் பலருக்கும் வரும். குத்துவிளக்கு ஏற்றும்போது ஒரு விளக்காக ஏற்றக்கூடாது. இரண்டு விளக்குகளை மட்டுமே ஏற்ற வேண்டும். எனவே இது 10 தீபங்களாக எண்ணப்படும். அப்படி ஏற்றுவதில் தவறில்லை. காமாட்சி தீபம், அகல் தீபம், குறிப்பிட்ட தெய்வத்திற்குரிய தீபம், வெள்ளி தீபம் என எந்த தீபத்தையும் ஒரே தீபமாக ஏற்றுவதை விட இரு தீபங்களாக ஏற்றி வைப்பதே சரியானது. காமாட்சி தீபம், அகல் விளக்கு ஆகியன ஒரே தீபமாக கூட ஏற்றலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விளக்குகளை ஏற்றுவது சிறப்பான பலனைத் தரும்.
விளக்கு ஏற்றக் கூடிய மற்றும் ஏற்றக் கூடாத திசைகள்:
💐கிழக்கு - அனைத்து துன்பங்களும் நீங்கும்.💐மேற்கு - கடன்கள் மற்றும் தோஷங்களை நீக்குகிறது.
💐வடக்கு - செல்வம், ஞானம் மற்றும் அறிவை வளர்க்கும்.
💐தெற்கு - தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்ற வேண்டாம்.
எந்தெந்த விளக்கிற்கு என்னென்ன பலன்கள்?
💐மண் விளக்கு/ அகல் விளக்கு - அனைத்து வகையான நன்மைகளையும் தரும்.💐வெண்கல விளக்கு - தோஷத்தை நீக்கி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
💐செப்பு விளக்கு - மன அமைதியையும், வீட்டில் அமைதியான சூழலையும் கொண்டு வரும்.
💐பித்தளை விளக்கு - குடும்ப ஒற்றுமை தரும்.
💐வெள்ளி விளக்கு - இல்லத்திலும் மனதிலும் அமைதியை கொண்டு வந்து நிறைவைத் தரும் மற்றும் மகாலட்சுமியின் ஆசிர்வாதம் கிட்டும்.
💐தங்க விளக்கு - ஆயுளை நீட்டிக்கும்.
💐இரும்பு விளக்கு - சனி பகவனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து காக்கும்.
விளக்கேற்றுவதில் எதெல்லாம் செய்யக் கூடாது?
💐ஒரு விளக்கிற்கு பயன்படுத்திய எண்ணெயை மற்றொரு விளக்கிற்கோ அல்லது பயன்படுத்திய எண்ணெயை, விளக்கை சுத்தமாக வைத்து மீண்டும் பயன்படுத்துவதோ தவிர்க்க வேண்டும். விளக்கில் எண்ணெய் ஊற்றி இரண்டு நாட்கள் எரிந்த பிறகு, விளக்கை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், அதில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெயை கீழே ஊற்ற வேண்டும். விளக்கை சுத்தம் செய்த பின் புதிய எண்ணெய் ஊற்றி மீண்டும் விளக்கை ஏற்றவும்.
எங்கு முதலில் தீபம் ஏற்ற வேண்டும் ?
💐முதலில் வீட்டு வாசலில் தீபம் ஏற்றிய பின்புதான் பூஜை அறையில் ஏற்றி வைக்க வேண்டும் என்று கூறுவர். வெளியில் தீபம் ஏற்றி கொண்டு வந்து வீட்டிற்குள் விளக்கேற்றி வைப்பது சரியானது.
தீபம் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்?
💐குறைந்தது 30 நிமிடங்களுக்கு விளக்கு எரியவிடுவது சுபம். அதற்கு மேல் அவரவர் வசதிக்கேற்ப விளக்கு ஏற்றலாம்.
தினமும் விளக்கேற்றலாமா?
💐தினமும் விளக்கு ஏற்றுவது சுபமே.
முடிவுரை:
💐மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கு ஏற்றும் முறை பற்றிய பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். திருமணம் என்பது பூலோகத்தில் மட்டும் நிச்சயிக்கப்படுவது அல்ல, அவை சொர்க்கத்திலும் நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகும். இத்தகைய திருமணம் என்னும் விளக்கை ஏற்ற நித்ரா மணமாலையில் பதிவு செய்து உங்களின் வாழ்வை ஒளிமயமாக்குங்கள்!!