வாஸ்து தேதிகள் 2024
♻ வாஸ்து தேதிகள் என்பது வாஸ்து தொடர்பான செயல்களைச் செய்ய ஏற்ற நாட்களைக் குறிக்கிறது. வாஸ்து தேதிகள் ஜோதிடத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மேலும், அவை நேர்மறை ஆற்றலை மேம்படுத்துவதாகவும், வீடு அல்லது கட்டிடத்திற்கு செழிப்பைக் கொண்டுவருவதாகவும் நம்பப்படுகிறது.
♻ இந்த வாஸ்து தேதிகள் சந்திரனின் நிலை மற்றும் பிற ஜோதிட அளவுருக்கள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது. கட்டுமானத்தைத் தொடங்கும் போதும், புதிய வீட்டிற்குச் செல்லும் போதும் அல்லது ஏற்கனவே உள்ள சொத்துக்காக வாஸ்து தொடர்பான சடங்குகளைச் செய்யும்போதும் வாஸ்து தேதிகள் பார்க்கப்படுகின்றது.
♻ நீங்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பூமி பூஜை தேதிகளைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான தளத்திற்கு வந்துள்ளீர்கள். தமிழ் பஞ்சாங்கம் அல்லது தமிழ் நாட்காட்டி 2024-இன் படி 2024 ஆம் ஆண்டு வாஸ்து நாட்கள் எந்தெந்த தேதிகளில் வருகிறது என்பதனை இங்குக் காண்போம்.
♻ "வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்" என்ற பழமொழி அனைவரும் அறிந்த ஒன்றே. புதுவீடு கட்டிவிட்டீர்களா? புதுமனை புகுவிழாவிற்கு நல்ல நாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்புறம் எண்ணங்க! கல்யாணந்தா..உங்களுக்கான ராஜக்குமாரியை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? நமது நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக வரன்பதிவு செய்யுங்கள்!! புதுமன விழா முடிந்த கையோடு உங்கள் திருமணத்தையும் முடியுங்கள்!!
குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து தேதிகளானது வாக்கியப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு வாஸ்து தேதிகள்
⭐வாஸ்து நாட்கள் - ஜனவரி 2024⭐
நாள் : ஜனவரி 26 - தை 12 - வெள்ளி
நேரம் : காலை 10.41 முதல் 11.17 வரை
⭐வாஸ்து நாட்கள் - மார்ச் 2024⭐
நாள் : மார்ச் 05 - மாசி 22- செவ்வாய்
நேரம் : காலை 10.32 முதல் 11.08 வரை
⭐வாஸ்து நாட்கள் - ஏப்ரல் 2024⭐
நாள் : ஏப்ரல் 23 - சித்திரை 10 - செவ்வாய்
நேரம் : காலை 8.54 முதல் 9.30 வரை
⭐வாஸ்து நாட்கள் - ஜூன் 2024⭐
நாள் : ஜூன் 03 - வைகாசி 21 - திங்கள்
நேரம் : காலை 9.58 முதல் 10.34 வரை
⭐வாஸ்து நாட்கள் - ஜூலை 2024⭐
நாள் : ஜூலை 27 - ஆடி 11 - சனி
நேரம் : காலை 7.44 முதல் 8.20 வரை
⭐வாஸ்து நாட்கள் - ஆகஸ்ட் 2024⭐
நாள் : ஆகஸ்ட் 22 - ஆவணி 6 - வியாழன்
நேரம் : காலை 7.23 முதல் 7.59 வரை
⭐வாஸ்து நாட்கள் - அக்டோபர் 2024⭐
நாள் : அக்டோபர் 28 - ஐப்பசி 11 - திங்கள்
நேரம் : காலை 7.44 முதல் 8.20 வரை
⭐வாஸ்து நாட்கள் - நவம்பர் 2024⭐
நாள் : நவம்பர் 23 - கார்த்திகை 8 - சனி
நேரம் : காலை 11.29 முதல் மதியம் 12.05 வரை
♻ மேலே கொடுக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான வாஸ்து தேதிகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். வாஸ்து பகவான் கண் விழிக்கும் நாளையே வாஸ்து நாள் என்றழைக்கப்படுகிறது. சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி ஆகிய எட்டு மாதங்களில் வரும் வாஸ்து நாட்களில் பூமி பூஜை செய்யலாம். இருமனம் இணைந்ததை இருமனச் சொந்தங்கள் ஊருக்கே அறிவித்தல்தான் திருமணம் என்பர். வாஸ்து நாள் கிடைச்சாச்சு, வாழ்க்கை துணை அமையவில்லை என கவலையா? இன்றே நமது நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக வரன்பதிவு செய்யுங்கள்!! உங்கள் துணையோடு இணைந்து புதுமனையில் உங்கள் வாழ்க்கை பயணத்தைத் தொடங்குங்கள்!!