வரலட்சுமி விரதம்
முன்னுரை:
🪔 திருமணம் ஆகவில்லையா? இனி கவலை வேண்டாம்!! திருமணமாகாதவர்கள் உங்களுக்கான வரன்களை நமது நித்ரா மணமாலையில் பதிவு செய்து, உங்களுக்கான துணையை காணுங்கள்!! கன்னிப் பெண்களும் திருமணமான சுமங்கலிப் பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விரதம் வரலட்சுமி விரதம். இந்த வரலட்சுமி விரதத்தை எப்படி கடைபிடிப்பது மற்றும் அதன் பலன்களை பற்றி இங்கு காண்போம்.
வரலட்சுமி விரதம்:
🪔 வரலட்சுமி விரதம் என்பது பதினாறு வகையான செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமியின் ஆசீர்வாதத்திற்காக இந்துக்கள் பிரார்த்தனை செய்யும் விரதம் ஆகும்.
வரலட்சுமி விரதம் ஏன் கொண்டாடப்படுகிறது?
🪔 சுமங்கலிப் பெண்கள் மாங்கல்ய பலம் பெறவும், குடும்பத்தில் செல்வம் பெருகவும், தங்களுக்கு விருப்பமான நல்ல அருளுக்காகவும் வேண்டிக்கொள்ளும் விரதமே வரலஷ்மி விரதம் ஆகும்.
வரலட்சுமி விரதம் - பூஜை செய்வது எப்படி?
🪔 வீடு அல்லது அலுவலகத்தின் தென்கிழக்கு மூலையில் சிறிய மண்டபம் அமைக்க வேண்டும். அதில் அம்மன் முகத்தை சந்தனத்தால் எழுப்ப வேண்டும். வசதி படைத்தவர்கள் வெள்ளி சிலை வைத்து வழிபடலாம். சிலையை தாழம்பூ கொண்டு அலங்கரித்து பின்னர், அலங்கரித்த அம்மனை ஒரு பலகையின் மேல் வைக்கவும்.
🪔 சிலையின் முன் வாழை இலையை வைத்து, அதன் மீது பச்சரிசியை பரப்பி, அதன் மேல் மாவிலை, தேங்காய், எலுமிச்சை, தங்கம் மற்றும் பழங்கள் வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடையினை அணிவிக்கவும்.
🪔 ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீரை நிரப்பவும் (புனித நீர் கிடைக்கவில்லை என்றால் சுத்தமான நீரைப் பயன்படுத்தலாம்) மற்றும் அரிசியின் நடுவில் மாவிலையுடன் தேங்காயை வைக்கவும்.
🪔 பின்னர் சுவாமிக்கு ஐந்து வகையான ஆரத்தி தட்டு கொண்டு வழிபட வேண்டும்.
வரலட்சுமி விரதத்தின் பலன்கள்:
🪔 வரலட்சுமி விரதத்தால் மாங்கல்ய பாக்கியம் உண்டாகும். செல்வம் பெருகும், வாழ்வு செழிக்கும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். இந்த பூஜையின் போது சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்த பின்பு அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் தீக்க சுமங்கலியாக இருப்பார்கள்.
சுமங்கலி பெண்கள்:
🪔 சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதற்கு முக்கியக் காரணம் கணவனுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகத்தான். அதோடு கணவனின் வேலையும் வியாபாரமும் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக கடைப்பிடிப்பார்கள்.
கன்னிப் பெண்கள்:
🪔 கன்னிப் பெண்களும் சுமங்கலிப் பெண்களும் கடைப்பிடிக்க வேண்டிய விரதமே வரலட்சுமி விரதம் ஆகும். கன்னிப் பெண்கள் ஏன் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்கள்? ஏனெனில் ஒரு பெண்ணின் வாழ்க்கையின் மொத்த மகிழ்ச்சியும் கணவனால் கிடைக்கிறது, கன்னிப் பெண்கள் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த விரதத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்.
முடிவுரை:
🪔 மேலே கொடுக்கப்பட்டுள்ள வரலட்சுமி விரதம் பற்றிய பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். திருமணமானது ஒருவரின் வாழ்நாளில் ஒரு பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதிய அத்தியாயம் ஆகும். எனவே, திருமணம் ஆகாதவர் திருமணம் செய்ய நமது நித்ரா மணமாலையில் இலவசமாக பதிவு செய்யுங்கள்!! உங்களுக்கானவர்களை தேர்ந்தெடுங்கள்!!