வளைகாப்பு செய்ய உகந்த நாள் 2024!!
🎉 தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சடங்குகளில் வளைகாப்பு அல்லது சீமந்தமும் முக்கியமானதாகும். சில கர்ப்பிணிகள் வீட்டில் ஏழாவது மாதத்திலும், சிலர் ஒன்பதாவது மாதத்தில் வீட்டிலும் வளையல் அணிவார்கள். சீமந்தம் செய்யும் போது, அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் அனைவரையும் அழைத்து 5 அல்லது 7 வகையான உணவு பரிமாறி, கர்ப்பிணியை ஆசிர்வதிப்பார்கள். இந்தப் பதிவில், 2024 ஆம் ஆண்டில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு செய்ய சிறந்த நாள் மற்றும் சிறந்த மாதம் எப்போது என்பதை அறிந்து கொள்ளலாம். உங்கள் வீட்டு இளவரசிகளுக்கும் திருமணமாகி சீமந்தம் செய்ய ஆசைப்படுகிறீர்களா? அவர்கள் நல்ல வரனைப் பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால், நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்யுங்கள் இன்றே!
வளைகாப்பு என்றால் என்ன?🎉 வளையல் அணிவிக்கும் வைபவம் நடந்தால், கருவுற்றிருக்கும் பெண்களுக்கு உள்ளத்தில் தைரியம் உண்டாகும். கர்ப்பிணிப் பெண்ணின் வளைகாப்பு விழாவில் கையில் வேப்பிலை கட்டுவார்கள். வேம்பு ஒரு கிருமிநாசினியாகும், இது அனைத்து வகையான நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. கருவில் இருக்கும் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்க இதுவே காரணம்.
🎉 அனைத்து பெண்களும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு வளையல் அணிவார்கள். கையில் அணியும் வளையலை உடைந்து போகாமல் நிதானமாக பார்த்துக் கொள்ள வேண்டும். கையில் வளையல் அணிவதன் நோக்கம் கர்ப்பிணிகள் எந்த செயலையும் அவசரப்படாமல் பொறுமையாக செய்ய வேண்டும் என்பதே இந்த வளைகாப்பு என்பது இன்றும் பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.
வளைகாப்பு சாப்பாடு:
🎉 5 அல்லது 7 வகையான வளைகாப்பு சாதங்கள் செய்வார்கள். அவையாவன சர்க்கரைப் பொங்கல் (அ) கற்கண்டு சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், தேங்காய் சாதம், சாம்பார் சாதம் ஆகும்.
கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்ய தேவையான பொருட்கள்:
🎉 இரண்டு குத்து விளக்கு, பழ வகைகள், நறுமணம் உள்ள மலர்கள், இனிப்புகள், கண்ணாடி வளையல், மஞ்சள், குங்குமம், 7 வகை சாதம்
வளைகாப்பு செய்ய உகந்த நட்சத்திரம்:
🎉 அஸ்தம், பரணி, ஆயில்யம், திருவாதிரை, பூசம், ரோகினி, மகம், பூரம், அஸ்வினி, சுவாதி, திருவோணம், கேட்டை, மூலம், பூராடம், அனுஷம், ரேவதி, உத்திரட்டாதி, சதயம்.வளர்பிறை காலங்களில் மேற்கண்ட நட்சத்திர நாட்களில் சீமந்தம் செய்வது மங்களகரமானது.
ஆன்மிக சந்தேகங்கள்:
1. தேய்பிறையில் வளைகாப்பு செய்யலாமா?
சுபநாட்களாக இருக்கும் பட்சத்தில் தேய்பிறையில் வளைகாப்பு நடத்தலாம்.
2. பங்குனி மாதம் வளைகாப்பு நடத்தலாமா?
பங்குனி மாதம் வளைகாப்பு நடத்தலாம்.
3. மார்கழி மாதம் வளைகாப்பு நடத்தலாமா?
மார்கழி மாதம் வளைகாப்பு நடத்தலாம்.
4. கோவிலில் வளைகாப்பு நடத்தலாமா?
கோவிலில் வளைகாப்பு நடத்தலாம்.
5. ஆடி மாதத்தில் வளைகாப்பு நடத்தலாமா?
7, 9 ஆகிய மாதம் ஆடி மாதமாக இருக்கும் பட்சத்தில் வளைகாப்பு வைக்கலாம். இல்லையெனில், போர்க்காலம் முடிந்த பிறகு நடத்திக் கொள்ளலாம்.
6. புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு வைக்கலாமா?
கருவுற்ற பெண்ணின் ஒற்றைப்படை மாதமாக புரட்டாசி மாதம் இருக்கும் பட்சத்தில் தாராளமாக வளைகாப்பு வைக்கலாம்.
🎀வளைகாப்பு செய்ய உகந்த மாதம் ஜனவரி 2024🎀
🎊 02.01.2024 - மார்கழி 17 - செவ்வாய்க்கிழமை🎊 09.01.2024 - மார்கழி 22 - செவ்வாய்க்கிழமை
🎊 11.01.2024 - மார்கழி 26 - வியாழக்கிழமை
🎊 16.01.2024 - தை 02 - செவ்வாய்க்கிழமை
🎊 25.01.2024 - தை 11 - வியாழக்கிழமை
🎊 30.01.2024 - தை 31 - செவ்வாய்க்கிழமை
🎀வளைகாப்பு செய்ய உகந்த மாதம் பிப்ரவரி 2024🎀
🎊 06.02.2024 - தை 23 - செவ்வாய்க்கிழமை🎊 08.02.2024 - தை 25 - வியாழக்கிழமை
🎊 18.02.2024 - மாசி 06 - ஞாயிற்றுக்கிழமை
🎊 22.02.2024 - மாசி 10 - வியாழக்கிழமை
🎊 25.02.2024 - மாசி 13 - ஞாயிற்றுக்கிழமை
🎊 27.02.2024 - மாசி 15 - செவ்வாய்க்கிழமை
🎀வளைகாப்பு செய்ய உகந்த மாதம் மார்ச் 2024🎀
🎊 07.03.2024 - மாசி 24 - வியாழக்கிழமை🎊 10.03.2024 - மாசி 27 - ஞாயிற்றுக்கிழமை
🎊 19.03.2024 - பங்குனி 06 - செவ்வாய்க்கிழமை
🎊 26.03.2024 - பங்குனி 13 - செவ்வாய்க்கிழமை
🎀வளைகாப்பு செய்ய உகந்த மாதம் ஏப்ரல் 2024🎀
🎊 04.04.2024 - பங்குனி 22 - வியாழக்கிழமை🎊 14.04.2024 - சித்திரை 01 - ஞாயிற்றுக்கிழமை
🎊 21.04.2024 - சித்திரை 08 - ஞாயிற்றுக்கிழமை
🎊 28.04.2024 - சித்திரை 15 - ஞாயிற்றுக்கிழமை
🎊 30.04.2024 - சித்திரை 17 - செவ்வாய்க்கிழமை
🎀வளைகாப்பு செய்ய உகந்த மாதம் மே 2024🎀
🎊 05.05.2024 - சித்திரை 22 - ஞாயிற்றுக்கிழமை🎊 09.05.2024 - சித்திரை 26 - வியாழக்கிழமை
🎊 12.05.2024 - சித்திரை 29 - ஞாயிற்றுக்கிழமை
🎊 28.05.2024 - வைகாசி 15 - செவ்வாய்க்கிழமை
🎀வளைகாப்பு செய்ய உகந்த மாதம் ஜூன் 2024🎀
🎊 09.06.2024 - வைகாசி 27 - ஞாயிற்றுக்கிழமை🎊 16.06.2024 - ஆனி 02 - ஞாயிற்றுக்கிழமை
🎊 23.06.2024 - ஆனி 09 - ஞாயிற்றுக்கிழமை
🎀வளைகாப்பு செய்ய உகந்த மாதம் ஜூலை 2024🎀
🎊 04.07.2024 - ஆனி 20 - வியாழக்கிழமை🎊 07.07.2024 - ஆனி 23 - ஞாற்றுக்கிழமை
🎊 18.07.2024 - ஆடி 02 - வியாழக்கிழமை
🎊 21.07.2024 - ஆடி 05 - ஞாயிற்றுக்கிழமை
🎊 25.07.2024 - ஆடி 09 - வியாழக்கிழமை
🎊 30.07.2024 - ஆடி 14 - செவ்வாய்க்கிழமை
🎀வளைகாப்பு செய்ய உகந்த மாதம் ஆகஸ்ட் 2024🎀
🎊 08.08.2024 - ஆடி 23 - வியாழக்கிழமை🎊 15.08.2024 - ஆடி 30 - வியாழக்கிழமை
🎊 27.08.2024 - ஆவணி 11 - செவ்வாய்க்கிழமை
🎊 29.08.2024 - ஆவணி 13 - வியாழக்கிழமை
🎀வளைகாப்பு செய்ய உகந்த மாதம் செப்டம்பர் 2024🎀
🎊 03.09.2024 - ஆவணி 18 - செவ்வாய்க்கிழமை🎊 05.09.2024 - ஆவணி 20 - வியாழக்கிழமை
🎊 15.09.2024 - ஆவணி 30 - ஞாயிற்றுக்கிழமை
🎊 26.09.2024 - புரட்டாசி 10 - வியாழக்கிழமை
🎀வளைகாப்பு செய்ய உகந்த மாதம் அக்டோபர் 2024🎀
🎊 03.10.2024 - புரட்டாசி 17 - வியாழக்கிழமை🎊 15.10.2024 - புரட்டாசி 29 - செவ்வாய்க்கிழமை
🎊 20.10.2024 - ஐப்பசி 03 - ஞாயிற்றுக்கிழமை
🎀வளைகாப்பு செய்ய உகந்த மாதம் நவம்பர் 2024🎀
🎊 05.11.2024 - ஐப்பசி 19 - செவ்வாய்க்கிழமை🎊 07.11.2024 - ஐப்பசி 21 - வியாழக்கிழமை
🎊 17.11.2024 - கார்த்திகை 02 - ஞாயிற்றுக்கிழமை
🎊 19.11.2024 - கார்த்திகை 04 - செவ்வாய்க்கிழமை
🎊 24.11.2024 - கார்த்திகை 09 - ஞாயிற்றுக்கிழமை
🎊 26.11.2024 - கார்த்திகை 11 - செவ்வாய்க்கிழமை
🎀வளைகாப்பு செய்ய உகந்த மாதம் டிசம்பர் 2024🎀
🎊 03.12.2024 - கார்த்திகை 18 - செவ்வாய்க்கிழமை🎊 05.12.2024 - கார்த்திகை 20 - வியாழக்கிழமை
🎊 17.12.2024 - மார்கழி 02 - செவ்வாய்க்கிழமை
🎊 22.12.2024 - மார்கழி 07 - ஞாற்றுக்கிழமை
🎊 31.12.2024 - மார்கழி 16- செவ்வாய்க்கிழமை
🎉 சீமந்தம் என்பது குழந்தையின் பிறப்புக்குப் பிறகு நடத்தப்படும் ஒரு சிறப்பு நிகழ்வு ஆகும். இது குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கவும், குடும்பத்தில் புதிய உறுப்பினரின் வருகையை கொண்டாடவும் நடத்தப்படுகிறது. சீமந்தம் செய்ய சிறந்த கிழமைகள் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகும். இந்த தேதிகளில் சீமந்தம் செய்வது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது. உங்கள் மகளுக்கோ அல்லது மகனுக்கோ வரன் தேட நித்ரா மேட்ரிமோனியில் பதிவு செய்யுங்கள்.!!