வைகாசி விசாகம் 2024 எப்போது?
🌟 சித்திரையின் கோடை காலம் நிறைவுற்று, விரைவில் வைகாசி வருகை தரும் வேளையில், வசந்த காலத்தின் தொடக்கமாக கொண்டாடப்படும் வைகாசி விசாகப் பெருவிழா வசந்த விழா என்றும் அழைக்கப்படுகிறது. வைகாசி விசாகம் 2024 என்பது முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்பான நாள். தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்கு பல பண்டிகைகள் என்று கூறப்பட்டாலும், அவற்றில் மிகவும் சிறப்பான நாள் வைகாசி விசாகம். உலக மக்களைக் காக்க முருகன் அவதாரம் எடுத்த நாள் இதுவே ஆகும். இந்தப் பதிவில் 2024ம் ஆண்டிற்கான வைகாசி விசாகம் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வேம். வைகாசி பிறந்தாச்சி உங்கள் இல்லத்தில் சுபதினங்கள் நடக்க இன்னும் நல்ல வரன் பார்த்துக் கொண்டுள்ளீர்களா? நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்! முருகனின் ஆசியால் பிடித்தமான வரனை தேர்வு செய்யுங்கள்!வைகாசி விசாகம் எந்த கடவுளுக்கு உகந்த நாள்?
🌟 வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதரித்த நாளாகும். வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள். விசாகம் 6 நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் 6 முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகமாகும். இந்த வைகாசி விசாகம் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் அனுசரிக்கப்படுகிறது.🌟 வைகாசி மாத பெளர்ணமி மற்றும் விசாக நட்சத்திர நாளில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகப்பெருமான் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. முருகப்பெருமானின் அவதார நோக்கம் தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்பதே. உலகம் முழுவதும் முருகப்பெருமான் கோவில்கள் பல இருந்தாலும், வைகாசி விசாகத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக திருச்செந்தூர் கூறப்படுகிறது. இது ஒரு புராணக் கதை என்றும் கூறப்படுகிறது.
🌟 வைகாசி விசாகத் திருவிழாவின் போது ஏராளமான பக்தர்கள் பால் குடங்களுடன் வந்து அக்னியில் இருந்து அவதரித்த முருகப்பெருமானின் திருமேனியை குளிர்விக்க பால் அபிஷேகம் செய்வார்கள். திருச்செந்தூர் கோவிலில் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம் மட்டுமின்றி, கருவறையில் நீர் நிரப்புதல், ஆத்ம சாந்தி அபிஷேகமும் நடைபெறும்.
வைகாசி விசாகத்தின் நன்மைகள்:
🌟 குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் ஒற்றுமையின்மை, வீட்டில் எப்பொழுதும் சண்டை, கணவன் - மனைவிக்குள் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள்,🌟 சொந்த தொழிலில், செய்யும் வேலையில் முன்னேற்றமில்லை, முன்னேறுவதற்கு ஏதாவது ஒரு தடை வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள்,
🌟 நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்கு விவகாரங்களில் சிக்கித் தவிப்பவர்கள்,
🌟 தோஷம் காரணமாக திருமணம் நீண்ட நாட்களாக கைகூடாலம் தள்ளி செல்கிறது என்று வருந்துபவர்கள் இந்த வைகாசி விசாக நாளில் மனதார வேண்டி விரதம் இருந்தால் வேண்டிய வேண்டுதல்கள் அனைத்தையும் முருகன் நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை ஆகும்.
🌟 வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்டால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும் என்றும், அந்தப் பாவங்களால் இந்தப் பிறவியில் ஏற்பட்ட துன்பங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.
வைகாசி விசாகம் திருவிழா 2024 எப்போது?
🌟 2024ஆம் ஆண்டுக்கான வைகாசி விசாகம் மே 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று வீட்டில் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபடலாம். முடிந்தவர்கள் திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் தலங்களுக்குச் சென்று முருகனின் அருளைப் பெறலாம். முருகனின் நட்சத்திரப்படி இந்த ஆண்டு மே 22ம் தேதி வைகாசி விசாகமாக கொண்டாடப்படுகிறது.முடிவுரை:
🌟 அன்பு பயனாளர்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் பற்றிய தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். வைகாசி மாதம் என்றாலே திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாதம் என்று கூறுவார்கள். நீங்களும் இந்த மாதத்தில் உங்கள் திருமண வாழ்க்கைத் துணையை கரம் பிடிக்க வேண்டுமா? சொந்தத்தில் கூட நல்ல வரன்கள் அமையவில்லையா? கவலையே வேண்டாம்! நம்ம நித்ரா மேட்ரிமோனியில் உங்கள் சுயவிவரங்களை இலவசமாக பதிவு செய்யுங்கள் கையோட கல்யாணத்தை முடியுங்கள்!