உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்!!
🫶 இருபத்தேழு நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது நட்சத்திரம் உத்திரம். வில்லுக்கு விஜயன் என்று இன்றும் புகழப்படும் மகாபாரத அர்ஜுனன் பிறந்த நட்சத்திரம் என்ற பெருமைக்குரியது உத்திர நட்சத்திரம் ஆகும். இதன் அதிபதி சூரிய பகவான். முதல் பாதம் சிம்ம ராசிக்கும், 2, 3, 4ம் பாதங்கள் கன்னி ராசிக்கும் உரியது. ஆண் நட்சத்திரம் என கருதப்படுகிறது. உடலில் முதுகெலும்பு (முதல் பாதம்), குடல், சிறுநீர்பை, கல்லீரல் (2, 3, 4ம் பாதங்கள்) ஆகியவற்றை ஆளுகிறது. உத்திர ராசிக்காரர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். உங்களுக்கோ அல்லது உங்கள் உடன் பிறந்தவர்களுக்கோ வரன் தேடுகிறீர்களா? நல்ல வரன்கள் அமைய இன்றே நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்!குண அமைப்பு:
🫶 உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நட்சத்திர அதிபதி சூரியன் என்பதால் நல்ல மன வலிமையும், உண்மையை பேசும் குணமும், கல்வி விஷயங்களில் சிறந்தவராகவும், நல்ல புத்திக் கூர்மை கொண்ட நபர்களாகவும் இருப்பார்கள். ஆண்களுக்கு கம்பீரமான நடையும், பெண்களைக் கவரும் உடலமைப்பும் இவர்களுக்கு இருக்கும். இவர்களைக் கண்டவர்கள் திரும்பத் திரும்ப பேசவும், பழகவும் ஆசைப்படுமளவிற்கு வசீகர தோற்றம் இருக்கும். அனைவரையும் எளிதில் கவரக் கூடிய பேச்சாற்றல் இருப்பினும் குறைகளைக் கண்டால் முகத்தில் சட்டென அடித்தாற் போல பேசக் கூடியவர்கள்.🫶 எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையாக இருப்பினும் தன்னுடைய நிலைமையிலிருந்து சற்றும் தடம் மாறாமல் சமாளிப்பார்கள். அனுபவமான அறிவு அதிகமிருக்கும். ஆன்மீக போன்ற தெய்வீக காரியங்களிலில் ஈடுபாடு அதிகமிருக்கும். யாரையும் அலட்சியம் செய்ய மாட்டார்கள். தன்னலத்தை விட பிறர் நலத்தை பேணிக் காப்பார்கள். சிக்கனத்தைக் கையாள்பவராகவும், சுயமரியாதையும் கண்ணியமும் உடையவராகவும் உத்திரம் நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள்.
குடும்பம்:
🫶 உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன் குடும்பத்தின் மீது அதீத அக்கரையும் பாசமும் கொண்டிருப்பார்கள். இவர்கள் முன்கோபத்தால் சின்ன சின்ன வாக்கு வாதங்களை எதிர்கொள்ள நேரிட்டாலும், குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். இளமைக் காலத்தில் சிறு துன்பங்களை சந்திக்க வேண்டிய நிலைமையிருந்தாலும், தன் முப்பது வயதிலிருந்து செல்வாக்கு யாவும் வந்து சேரும்.🫶 பூர்வீக சொத்துக்கள் அதிகமாக இருந்தாலும், தன்னுடைய சொந்த முயற்சியால் வண்டி வாகனங்கள், வீடு மனை போன்றவற்றைச் சேர்ப்பார்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்கி சேர்ப்பார்கள். அடிக்கடி சிறுக சிறுகவே உணவுகளை உண்பார்கள்.
தொழில்:
🫶 உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தியும் புத்திசாலித்தனமும் அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் வியாபாரம் செய்வர் அல்லது பெரிய நிறுவனங்களை நிறுவி அதில் பலரை வேலைக்கு அமர்த்துவார்கள். முதலாளி, தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக நடத்துவதால் நல்ல உள்ளம் கொண்டவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.🫶 யார் மனதையும் புண்படுத்தாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார். வேத விஞ்ஞானம் மற்றும் ஜோதிடம், கலை, இசை போன்றவற்றிலிருந்தும் சம்பாதிக்கும் யோகம் இருக்கிறது. உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த போட்டி பொறாமையையும் நசுக்கக்கூடிய கவர்ச்சியானவர்கள்.
திசை பலன்கள்:
🫶 உத்ரா நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, முதல் சூரிய திசை 6 ஆண்டுகள் நீடிக்கும், ஆனால் மீதமுள்ள சூரிய திசை காலங்களை பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடலாம். சூரிய பகவான் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்தால் குடும்பத்தில் சுபிட்சம் தந்தைக்கு முன்னேற்றம் தரும். வலுவிழந்தால் உஷ்ணம் சம்பந்தமான பிரச்சனைகள், தந்தைக்கு தீமைகள் உண்டாகும்.🫶 இரண்டாவதாக, சந்திர திசை காலங்களில் நீர் தொடர்பான விளைவுகள் ஏற்படும், இது கல்வியில் ஏற்ற இறக்கமான சூழலை உருவாக்கும்.
🫶 மூன்றில் வரக்கூடிய செவ்வாயின் திசை எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும் குறைந்தபட்சம் எதிர்திசையில் நீச்சலடித்தால் முன்னேறலாம். 4ல் வரும் ராகு திசை மொத்தம் 18 ஆண்டுகள் நீடிக்கும். ராகுவின் வீட்டு அதிபதி வலுவாக இருந்தால் பலவிதங்களில் யோகத்தை உண்டாக்கும். குரு திசை காலங்களும் ஓரளவு ஏற்றம் தரும். சனி 6-ம் இடத்தைப் பார்ப்பது உயர் அந்தஸ்தைத் தரும்.
🫶 உத்ரா நக்ஷத்திரகாரர்களின் ஸ்தல மரம் அலரி மரமும் இலந்தை மரமும் ஆகும். இந்த மரத்தை தொடர்ந்து வழிபட்டால் பலன் கிடைக்கும். இந்த ஜோடி நட்சத்திரங்களை மார்ச் மாதத்தில் இரவு பன்னிரெண்டு மணிக்கு வானில் காணலாம்.
உத்திர நட்சத்திரத்தில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்:
🫶 உத்திர நட்சத்திரத்தில், விதை விதைத்தல், பூ முடித்தல், வியாதிக்கு மருந்து உட்கொள்ள மேற்கொள்ளுதல், திருமணம், சீமந்தம், தாலிக்கு பொன் உருக்குதல், புதிய வாகனம், ஆடை அணிகலன்களை வாங்குதல், தெய்வ பிரதிஷ்டை செய்தல், வியாபாரம் தொடங்குதல், புதிய வேலையில் சேருதல், குளம் மற்றும் கிணறு வெட்டுதல், ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற நல்ல காரியங்களை செய்யலாம்.உத்திரம் நட்சத்திரம் தெய்வம் & வழிபாட்டு ஸ்தலங்கள்:
🫶 1. வடகண்டம் எனத் தற்போது கூறப்படும் கருவீர ஸ்தலத்தில் கரவீரநாதராகவும், அன்ன பிரத்யட்ச மின்னம்மையாகவும் அருள் பாலி ஸ்தலத்தின் ஸ்தல விருட்சம் அலரி மரமாகும். இது திருவாரூர் மற்றும் கும்பகோணம் சாலையில் 10.கி.மீ தொலைவில் உள்ளது.🫶 2. காஞ்சிபுரத்து மேற்கேயிருக்கும் திருப்பனங்காட்டில் வீற்றிருக்கும் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் உடனுரை பனங்காட்பீஸ்வரரையும் வணங்கினால் நன்மை.
🫶 3. ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில் உள்ள திருக்குளத்தை எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ குழந்தைவல்லி தாயார், ஸ்ரீஅலமேலு மங்கை தாயார் உடனுறை ஸ்ரீசோரநாத பெருமானை வழிபடலாம்.
🫶 4. சென்னை பாடியில் திருவலிதாயத்தில் உள்ள ஸ்ரீதாயம்மை உடனுறை ஸ்ரீவல்லிசரரையும் வழிபடுவது நல்லது.
உத்திரம் நட்சத்திரகாரர்கள சொல்ல வேண்டிய மந்திரம்:
🫶 ஓம் மஹாதேவ்யை சவித்மஹே! விஷ்ணுபத்ன்யை ச தீமஹி! தன்னோ லஷ்மி பிரசோதயாத்!உத்திரம் நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்:
🫶 உத்ரா நக்ஷத்திரகாரர்கள் கிருத்திகை, புனர்பூசம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திரங்களை திருமணம் செய்ய கூடாது.முடிவுரை:
🫶 இந்தப் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன். உத்திர நட்சத்திரகாரர்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்ல புரிந்துணர்வுடன் வாழ்வார்கள். அன்பு, பாசம் நிறைந்த குடும்பத்தை உருவாக்குவார்கள். நீங்களும் வரன் தேடுறீங்களா? நித்ரா மேட்ரிமோனியில் உங்கள் கனவு துணையை கண்டுபிடிப்பதற்கான உங்கள் பயணத்தை தொடங்குங்கள். உங்கள் வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க உதவும் ஒரு நம்பகமான திருமண தளம். பெண்களுக்கு முற்றிலும் இலவசம். எளிமையான பதிவு செயல்முறை. உங்கள் வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க உதவும் ஒரு விரிவான வழிகாட்டி!!