உங்கள் ராசிப்படி திருமணத்திற்கு எந்த ராசி சிறந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?
முன்னுரை
திருமணம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. ஒருவர் தனது வாழ்க்கையின் இரண்டாம் பகுதியில் அடியெடுத்து வைக்கும் தருணம் என்றும் கூறலாம். இந்த முக்கியமான தருணத்தில், வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய ஒன்றாகும். சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதன் மூலம், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், எந்தவித பிரச்சனைகளும் இல்லாமலும் அமையும். ஜோதிடத்தின் படி, பன்னிரண்டு ராசிகளுக்கும் எந்த ராசியை சேர்ந்த வாழ்க்கைத் துணை பொருத்தமாக இருப்பார் என்பதை இந்த நித்ரா மேட்ரிமோனி பதிவில் காணலாம்.
சிறந்த பொருத்தம் கொண்ட ராசிகள்
ராசி பொருத்தம் எதற்கு முக்கியம்?ஜோதிடத்தின்படி, ஒருவரின் ராசி அவரது குணாதிசயங்கள், வாழ்க்கை நோக்கங்கள் மற்றும் திருமண வாழ்க்கையின் வெற்றியை நிர்ணயிக்கிறது. திருமணத்திற்கு முன் ராசி பொருத்தத்தை சரிபார்ப்பது, இருவரின் வாழ்க்கை ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க உதவுகிறது.
மேஷ ராசிக்கு பொருந்தும் ராசிகள்செவ்வாய் பகவான் ஆளும் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு, சுக்கிரன் ஆளும் துலாம் ராசியினர் மிகவும் பொருத்தமானவராக இருக்கலாம். மேலும், மிதுனம், சிம்மம், தனுசு, விருச்சிகம் மற்றும் மகரம் ராசிக்காரர்களும் நல்ல பொருத்தம் கொண்டவர்களாக இருக்கும்.
ரிஷப ராசிக்கு பொருந்தும் ராசிகள்நிதானமான மற்றும் செழிப்பு விரும்பும் ரிஷபத்திற்கு கன்னி, மகரம் , மற்றும் கடகம் ராசிக்காரர்கள் சிறந்த தேர்வுவாக இருப்பார்கள்.
மிதுன ராசிக்கு பொருந்தும் ராசிகள்விவேகமும் புத்திசாலித்தனமும் கொண்ட மிதுன ராசிக்கு துலாம், மேஷம், சிம்மம், மகரம் மற்றும் கும்பம் ராசிகள் மிகவும் பொருத்தமானவை. இவர்கள் மனதில் எழும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் திறன் அதிகம். அதனால், உறவு தளர்ச்சியின்றி இனிமையாக இருக்கும்.
கடக ராசிக்கு பொருந்தும் ராசிகள்உணர்ச்சி மிகுந்த கடகத்திற்கு ரிஷபம், சிம்மம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சிறந்த பொருத்தமான ராசியாகும்.
சிம்ம ராசிக்கு பொருந்தும் ராசிகள்தன்னம்பிக்கை மிகுந்த மற்றும் செயல்பட தூண்டப்படும் சிம்ம ராசிக்காரர்களுக்கு, மேஷம் மற்றும் தனுசு ராசியினர் சிறந்த பொருத்தமாக இருக்கும்.
கன்னி ராசிக்கு பொருந்தும் ராசிகள்அறிவாற்றல் மற்றும் நிதானம் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு ரிஷபம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்கள் சிறந்த தேர்வுவாகும்.
துலாம் ராசிக்கு பொருந்தும் ராசிகள்துலாம் ராசிக்காரர்கள் சமநிலை மற்றும் சமரச மனப்பான்மை கொண்டவர்கள் என்பதால், மிதுனம் மற்றும் கும்பம் சிறந்த பொருத்தமாக அமையலாம். மேலும், சிம்மம், கன்னி, தனுசு மற்றும் மகரம் ராசியினரும் நல்ல வாழ்க்கைத் துணையாக இருக்கக்கூடியவர்கள்.
விருச்சிக ராசிக்கு பொருந்தும் ராசிகள்ஆழமான உணர்வுகளையும் உறவுகளையும் முக்கியமாகக் கருதும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு, கடகம் மற்றும் மீனம் சிறந்த பொருத்தமாக கருதப்படுகிறார்கள். கூடுதலாக, சிம்மம், கன்னி ஆகிய ராசியினரும் நல்ல பொருத்தமான வரனாக இருக்கும்.
தனுசு ராசிக்கு பொருந்தும் ராசிகள்சுதந்திரமான எண்ணம் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு, மேஷம் மற்றும் சிம்மம் சிறந்த வாழ்க்கைத் துணையாக அமையும். அதோடு, துலாம் மற்றும் கும்ப ராசியினரும் நல்ல பொருத்தமாக இருக்கக்கூடும்.
மகர ராசிக்கு பொருந்தும் ராசிகள்பொறுப்புள்ள மற்றும் கோட்பாட்டை பின்பற்றும் மகரத்திற்கு ரிஷபம் மற்றும் கன்னி சிறந்த பொருத்தமாக அமையும். மேலும் ரிஷபம், மீனம், விருச்சிகம் ஆகிய ராசியினர் நல்ல பொருத்தமானவர்களாக இருப்பார்கள்.
கும்ப ராசிக்கு பொருந்தும் ராசிகள்புதிய யோசனைகளை விரும்பும் மற்றும் தன்னிச்சையான மனப்பான்மை கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு, மிதுனம் மற்றும் துலாம் சிறந்த பொருத்தமாக இருக்கும். அதோடு, மேஷம் மற்றும் கன்னி ராசியினரும் திருமண உறவில் நல்ல பொருத்தமாக அமையக்கூடியவர்கள்.
மீன ராசிக்கு பொருந்தும் ராசிகள்கற்பனை மற்றும் கனவுகளால் நிறைந்த மீனம் ராசிக்காரர்களுக்கு, கடகம் மற்றும் விருச்சிகம் சிறந்த பொருத்தமாக இருக்கும். மேலும், ரிஷபம், துலாம் ராசியினரும் இவர்களுக்கு நல்ல துணையாக அமையக்கூடியவர்கள்.
முடிவுரை
உங்கள் ராசிக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையை தேர்வு செய்ய நித்ரா மேட்ரிமோனி உதவுகிறது. உங்கள் ஜாதக பொருத்தத்திற்கேற்ப சரியான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து, உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுங்கள்!
