துலாம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2023-2025
💕 ராகு நிழல் கிரகம் ஆகும். நவகிரகங்களின் அதிபதியான சூரியனின் ஒளியை மறைக்கும் சக்தியை ராகு-கேது உருவாக்குகிறது. அதேபோல ராகு, கேது கிரகங்களுக்கும் சந்திரனின் ஒளியை மறைக்கும் சக்தியினையும் கொண்டுள்ளது. இத்தகைய ராகு-கேது பெயர்ச்சி 2023 - 2025 துலாம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை அளிக்கப் போகிறது என்பதனைப் பற்றி இப்பதிவில் காணலாம். துலாம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்னும் திருமண வரன் அமையவில்லையா? கவலை வேண்டாம்..நமது நித்ரா மணமாலையில் உங்களுக்கான வரன்கள் காத்துக் கொண்டிருக்கிறது. இன்றே நமது நித்ரா மணமாலையில் வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் ராசிக்கேற்றவரோடு இணையுங்கள்!!
ராகு-கேது பார்வை:
💕 எதிலும் துல்லிய தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே..! இனி வர இருக்கின்ற ஒன்றை ஆண்டுகாலம் போக, சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் துலாம் ராசிக்கு சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் போக ஸ்தானம் என்னும் பனிரெண்டாம் இடத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர்.
💕 ராசிக்கு ஆறாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் வியாபாரத்தில் வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகக்கூடும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். மனதளவில் மாற்றமான சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சூடு சார்ந்த பிரச்சினைகள் நீங்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத சில லாபகரமான வாய்ப்புகள் அமையும்.
💕 ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் உபரி வருமானத்தில் முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்க வாய்ப்புண்டு. செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை வெளிப்படும். உறவினர்களின் வழியில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மதிப்பை ஏற்படுத்தும். மனதளவில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். இணைய துறைகளில் திறமைகள் வெளிப்படும். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உடல் ஆரோக்கியம்:
💕 உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கடை உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். மருத்துவ செலவுகளை குறைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
பொருளாதாரம்:
💕 பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்கள் மற்றும் புதிய முயற்சிகள் சார்ந்த செயல்பாடுகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள்:
💕 சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். செயல் திறமை வெளிப்படும். மறைமுக திறமைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் உண்டாகும்.
வியாபாரிகள்:
💕 வியாபாரத்தில் சில புதிய வியூகங்களையும், நுட்பங்களையும் அறிந்து கொள்வீர்கள். கூட்டு வியாபாரத்தில் இருந்துவந்த கருத்து-வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை மேம்படும். பணிகளில் மெத்தன போக்கின்றி செயல்படவும். புதிய முயற்சிகளில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எண்ணிய இலக்கை அடைய இயலும். வியாபார இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். திரவவழி தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்கு கிடைக்கும்.
அரசியல்வாதிகள்:
💕 அரசியல் துறைகளில் இருப்பவர்கள் மாறுபட்ட சிந்தனை மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவார்கள். புதிய நபர்களை சந்திப்பதும், அவர்களுடன் பழகுவதும் மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். மறைமுக திறமைகளையும், நுட்பங்களையும் வெளிப்படுத்துவீர்கள். எதிர்பார்த்திருந்த ஆதரவுகள் சற்று காலதாமதமாக கிடைக்கும்.
கலைஞர்கள்:
💕 கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தோற்றப்பொலிவுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வாக்கு சாதுரியத்தின் மூலம் மேன்மை அடைவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குரல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பெண்கள்:
💕 பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாழ்க்கை துணைவரிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்க வாய்ப்புண்டு. திட்டமிட்ட சில செயல்களில் உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.
மாணவர்கள்:
💕 மாணவர்களுக்கு பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் சாதகமான சூழல் அமையும். விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை உண்டாக்கும்.
நன்மைகள்:
💕 ராகு கேது சஞ்சாரத்தால் வெளியூர் பயணங்கள் மற்றும் உலக அனுபவங்கள் மூலம் சில புதிய வாய்ப்புகள் அமையும்.
தீமைகள்:
💕 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் பேச்சுக்களில் நிதானத்தையும், பயணம் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படுதலும் அவசியமாகும்.
வழிபாடு:
💕 வியாழக்கிழமை தோறும் பிரத்யங்கிரா தேவியை வழிபாடு செய்ய செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும்.
💕 புதன் கிழமைதோறும் நரசிம்மரை வழிபடுவதால் உடல்நலக் கோளாறுகள் குறையும்.
💕 மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும். துலாம் ராசிப் பற்றிய ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். துலாம் ராசி அன்பர்களே!! உங்கள் எதிர்கால துணையைக் காண உடனே நமது நித்ரா மணமாலையில் வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் துணையோடு இணைந்து மகிழ்ந்திடுங்கள்!!
