2024 - புத்தாண்டு பலன்கள் - துலாம்
💜 எதிலும் துல்லியமாகச் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே..!! பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..! துலாம் ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் சனி உள்ளது. சனி கொடுத்தால் எவர் தடுப்பார். ஐந்தாம் வீட்டில் இருக்கக்கூடிய சனி ஐந்து, ஆறு, ஏழாம் வீடுகளைப் பார்ப்பதால், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். புத்தாண்டில் துலாம் ராசிக்காரர்களுக்கு இப்படிப்பட்ட அமைப்பில் சனியும், வியாழனும் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்க்கையில் இதுவரை நடக்காத புதிய விஷயங்கள் ஏற்படும். சுருக்கமாக, உங்கள் கனவுகள் அனைத்தும் நனவாகும். திருமணம் என்னும் இனிய தருணம் உங்களுக்கும் நடக்க நித்ரா மணமாலையில் வரன் பதிவு செய்யுங்கள்.!!
துலாம் ராசி:
💜 மனதிற்கு நெருக்கமானவர்களால் புதிய அனுபவம் உண்டாகும். மனதைக் குழப்பிய சில விஷயங்களுக்குத் தெளிவு பிறக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய வியூகங்கள் கைகொடுக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும்.
💜 வருமான ஆதாரங்களை மேம்படுத்துவீர்கள். கனிவான பேச்சுக்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய பயிற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான சில வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். கற்பனைகளை விட காரியங்களில் ஈடுபடுவது மேன்மையை ஏற்படுத்தும்.
💜 பொறுப்பான சில காரியங்களின் மூலம் மதிப்பு மேம்படும். இளைய சகோதரரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும். கமிஷன் சார்ந்த வியாபாரம் கைகொடுக்கும்.
உடல் ஆரோக்கியம்
💜 உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பது மற்றும் கைபேசி பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளவும். பற்கள் மற்றும் இடுப்பு வலி சார்ந்த பிரச்சனைகள் குறையும். நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளவும்.
பெண்கள்:
💜 பெண்களுக்கு கனிவான பேச்சுக்கள் நல்ல மதிப்பை உருவாக்கிக் கொடுக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பொன், பொருள்கள் மீது ஆர்வம் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும்.
மாணவர்கள்:
💜 மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகளும், சூழ்நிலைகளும் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பதற்கான உதவிகள் கிடைக்கும். புதுவிதமான கல்வி சார்ந்த துறைகளில் ஈர்ப்பு உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள்:
💜 உத்தியோகப் பணிகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நவீன தொழில் நுட்பங்களால் ஆதாயம் அடைவீர்கள். உயர் அதிகாரிகளிடத்தில் நன்மதிப்பு ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதால் ஆதாயமான பலன்கள் உண்டாகும். பணி சார்ந்த புதிய மாற்றம் ஏற்படும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும்.
வியாபாரிகள்:
💜 வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்பட்டாலும் அதற்கான உழைப்பும் அதிகமாக இருக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் விரயங்களுக்குப் பின்பு கிடைக்கும். அபிவிருத்திக்கான சூழல் சாதகமாக அமையும்.
கலைஞர்கள்:
💜 கலைத்துறைகளில் சில நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சோர்வின்றி செயல்பட்டால் மதிப்பும், பரிசும் கிடைக்கும். எதிர்பார்த்த வரவுகளில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். விலகிச் சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் தோன்றி மறையும்.
💜 மூத்த கலைஞர்களுடன் அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அலைபாயும் சிந்தனைகளால் சில குழப்பம் தோன்றி மறையும்.
அரசியல்வாதிகள்:
💜 அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் பொறுப்புடன் செயல்பட்டால் முன்னேற்றமான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும், இருப்பினும் அதற்கான ஆதாரங்கள் பின்னாளில் கிடைக்கும். பேராசையின்றி சேவை மனப்பான்மையோடு செயல்பட்டால் நல்ல மதிப்பும், பலன்களும் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும்.
வழிபாடுகள்:
💜 செவ்வாய்க்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி முருகப்பெருமானை வழிபாடு செய்து வர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும்.
💜 மேலே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் அனைத்தும் அவரவர்களுக்கு சொந்த ஜாதகத்தில் நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப பலன்கள் கிடைக்கும். திருமணம் என்பது ஒரு அழகான நிகழ்வு. இது இரு மனிதர்களின் காதல் மற்றும் அன்பின் அடையாளமாகும். துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் நடைபெற தாமதமாகிறதா? பொருத்தமான வரன் கிடைக்கவில்லை என மன வருத்தமா? கவலையை விடுங்க!! உங்களுக்கு ஏற்ற வரன் சீக்கிரம் அமைய நித்ரா மணமாலையில் இன்றே பதிவு செய்யுங்கள்.