திருமணத்தடை நீக்கும் பங்குனி உத்திர விரதம்...!!
🧡 பங்குனி உத்திரம், தமிழ் மாதங்களில் பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு பண்டிகையாகும். சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகனான முருகப்பெருமானை போற்றும் ஒரு முக்கியமான திருவிழாவாகும். இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வழிபடுவதன் மூலம், திருமண வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறலாம் என்பது நம்பிக்கை. நீங்களும் இன்னும் உங்கள் திருமணத்திற்காக காத்துக் கொண்டுள்ளீர்களா? இன்னும் நல்ல வரன் கிடைக்கவில்லையா? அப்போ நீங்க சரியான பதிவிற்குத் தான் வந்துள்ளீர்கள். ஆமாங்க!! நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்பவர்களுக்கு உடனே நல்ல வாழ்க்கைத் துணை அமைகிறார்கள். ஒரு நிமிஷம் கூட தாமதிக்காதீங்க உடனே ரெஜிஸ்டர் பண்ணுங்க!!பங்குனி உத்திர விரதத்தின் வரலாறு:
🧡 பன்னிரெண்டாம் எண்ணுக்குச் சிறப்பு சேர்க்கும் இந்நாள், பன்னிரண்டு கைகள், பன்னிரண்டு கண்கள், பன்னிரண்டு காதுகள் கொண்ட வேலவனின் சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. முருகன் தமிழர்களுக்கு முக்கியமான கடவுள், எனவே இந்த விழா தமிழகம் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ள புலம்பெயர் தமிழர்கள் இந்த நாளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.🧡 முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட விரத நாட்களில் ஒன்றான பங்குனி உத்திரம் 2024ம் ஆண்டு மார்ச் 25ஆம் (பங்குனி 12) தேதி வருகிறது. பங்குனி உத்திரத்தன்று அனைத்து முருகன் கோவில்களுக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பன்னீர்குடம், பன்னீர் காவடி எடுத்து வந்து முருகனை வழிபடுகின்றனர். அன்று விரதம் இருந்து வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கை.
🧡 பல தலங்களில், குறிப்பாக திருமணஞ்சேரி போன்ற திருத்தலங்களில், பங்குனி உத்திரத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் தரிசனம் செய்து, அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
பங்குனி உத்திரத்தில் செய்ய வேண்டிய சுப காரியங்கள்:
🧡 பூ முடித்தல், தாலிக்கு பொன் உருக்குதல், திருமண ஓலை எழுதுதல், புதிய பொருட்கள் வாங்குதல், புதிய சிகிச்சைகள் மேற்கொள்ளுதல், புதிய கோவில்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், செடிகள் நடுதல், புதிய வேலையில் சேருதல், வணிகம் தொடங்குதல், புதிய இடமாற்றம், போர்ப்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த நாள் பங்குனி உத்திரத் திருநாள் ஆகும்.திருமண விரதம்:
🧡 திருமண விரதம் இருப்பவர்கள் ஜாக்கெட் பிட், பூ, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, ஒரு ரூபாயுடன் வீட்டருகே உள்ளவர்களுக்கு கொடுக்கலாம் அல்லது கோயிலுக்குச் சென்று சுமங்கலிப் பெண்கள் எவ்வளவு பேருக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கும் கொடுக்கலாம்.🧡 திருமணத்திற்காக காத்திருக்கும் மகனோ அல்லது மகளோ மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை அவர்கள் கையால் கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், காலையிலேயே பூஜையறையில் அந்த பொருட்களை வைத்து வணங்கி விட்டு, சிறிய கைப்பைகளில் அவர்கள் கைகளால் எடுத்து போட்டு எடுத்து தனியாக வைத்து விடலாம். அதன் பிறகு, மகன் அல்லது மகள் சார்பாக அவர்களின் அப்பாவோ, அம்மாவோ, உடல் பிறந்தவர்களோ மற்றவர்களுக்கு கொடுக்கலாம்.
நைவேத்தியம்:
🧡 திருமணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு விரதம் இருப்பவர்கள் அல்லது வேண்டுதல் ஏதுமில்லாமல் சாதாரணமாக முருகனின் அருளை வேண்டி பங்குனி உத்திர விரதம் இருப்பவர்கள் சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம் போன்ற ஏதாவது ஒரு இனிப்பு செய்து நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். இதனை செய்ய முடியாதவர்கள் காய்ச்சின பால் அதோடு தேன், சர்க்கரை கலந்து, பழம், வெற்றிலை, பாக்கு வைத்துப் படைக்கலாம்.பங்குனி உத்திர விரதத்தில் செய்ய வேண்டியவை:
🧡 அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டில் உள்ள சுவாமி உருவங்களை மணம் கமழும் மலர்களால் அலங்கரிக்கவும். முருகன், வள்ளி - தெய்வானையுடன் இருக்கும் படம், சிவன் - பார்வதி சேர்ந்து இருக்கும் படம், பெருமாள் - மகாலட்சுமி தேவியுடன் சேர்ந்து இருக்கும் படமாக இருந்தால் மிகவும் விசேசம். அப்படி இல்லை என்றால் தனியே உருவங்கள் இருந்தாலும் மலர்களால் அர்ச்சனை செய்யலாம். திருமண விரதம் இருப்பவர்கள் முருகனுக்கு செவ்வரளி மாலை ஏற்றி வழிபடலாம். காலையில் நைவேத்தியம் செய்து, தீப தூப ஆராதனை செய்து, பங்குனி உத்திர மந்திரங்கள் சொல்லி வழிபட வேண்டும்.விரதத்தின் நன்மைகள்:
🧡 பங்குனி உத்திர விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் பல நன்மைகள் கிடைப்பதாக நம்பப்படுகிறது. இது திருமணத் தடைகளை நீக்கி, விரைவில் திருமணம் நடத்தி வைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. மேலும், இது இல்லற வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரக்கூடியது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும், திருமண வாழ்வில் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் இந்த விரதம் நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.முடிவுரை:
🧡 பங்குனி உத்திர விரதம் என்பது ஒரு பாரம்பரிய நம்பிக்கை. இது மன அமைதி, நம்பிக்கை மற்றும் இறைவழிபாடு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. திருமணம் ஆகாதவர்கள், தங்களின் வாழ்வில் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வேண்டி இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு வரன் பார்த்து சளித்து விட்டீர்களா? நல்ல வரன் கிடைக்கவில்லையா? கவலைய விடுங்க நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு பண்ணுங்க, உங்களைத் தேடி வரன்கள் வரும்!