திருமணத்திற்கு முன் ஆண்-பெண் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
🌷 திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையின் மிக முக்கியமான அத்தியாயமாகும். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இதற்கு அர்த்தம், வாழ்க்கை முழுவதும் கணவன்-மனைவி இருவரும் இன்பம் மற்றும் துன்பம் இரண்டிலும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும் என்பது தான். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டும். இதில் ஆணுக்கான செயல் பெண்ணுக்கான செயல் என்று எதுவும் இல்லை. எனவே, திருமணத்திற்கு முன் மணமகன் மற்றும் மணமகள் சில அடிப்படை விஷயங்களை பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது. திருமணத்திற்கு முன் அறிய வேண்டிய அடிப்படை விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம். உங்களுக்கோ உங்கள் சகோதரன், சகோதரிக்கோ வரன் தேடுகிறீர்களா? நித்ரா மேட்ரிமோனியில் 4 இலட்சம் வெரிஃபைடு வரன்கள் உள்ளன. உடனே ரெஜிஸ்டர் பண்ணுங்க!அடிப்படையான சமையல் அறிவு:
🌷 சமையல் என்பது பெண்களுக்கான வேலை மட்டுமே என்பது கிடையாது. ஆண்களும் செய்யலாம். தங்கள் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன் குறைந்தது சாதம் வடிக்க கற்றுக்கொள்வது நல்லது. ஏனெனில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பசியை போக்க சமையல் அவசியம்.மளிகை பட்டியல் விவரம்:
🌷 வீட்டு உபயோகப் பொருட்கள், சமையலறைப் பொருட்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றி ஆண், பெண் இருபாலரும் தெரிந்து கொள்வது நல்லது. மேலும், வீட்டு உபயோகப் பொருட்களின் பட்டியலை வைத்திருப்பது நல்லது. ஏனெனில் இது மாதச் செலவுகளைக் கட்டுக்குள் வைக்க உதவியாக இருக்கும்.கட்டணம் பற்றிய அறிவு:
🌷 மின்சாரக் கட்டணம், கேபிள் பில் போன்ற அடிப்படை விஷயங்களின் மாதாந்திரக் கட்டணத்தை எப்படிச் சரியாகச் செலுத்துவது என்பதைத் திருமணத்திற்கு முன்பே ஆண், பெண் இருபாலரும் தெரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் இது கடைசி நேர டென்ஷனைக் குறைக்கும்.குழந்தை வளர்ப்பு பற்றிய அடிப்படை அறிவு:
🌷 திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெறுவது என்பது தனிப்பட்ட விஷயம் என்றாலும், திருமணத்திற்கு முன், அடிப்படை குழந்தை வளர்ப்பு முறைகள் மற்றும் மகப்பேறு பிரச்சனைகள் பற்றி ஆண், பெண் இருபாலரும் தெரிந்து கொள்வது நல்லது. இந்த விஷயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு உதவும்.இடம், பொருள், ஏவல்:
🌷 திருமணத்திற்குப் பிறகு ஆணும் பெண்ணும் தங்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் நிலைக்கு முன்னேறுகிறார்கள். அந்த வகையில் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கும் பெண்கள் எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்வது நல்லது. இது ஆண்களுக்கும் பொருந்தும்.சுய சிந்தனை:
🌷 பெற்றோரின் ஆதரவின்றி தனியாக திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது மற்றும் சமாளிப்பது என்பதை ஆண்களும் பெண்களும் கற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல், கணவரின் ஆதரவின்றி எப்படி முடிவெடுப்பது என்பதை அறிந்து கொள்வது நல்லது. ஆனால், அதற்கு முன் முன் இருவரும் கலந்தாலோசிப்பது மிகவும் நல்லது.திருமணம் குறித்த சட்டம்:
🌷 திருமணத்திற்குப் பிறகு, ஒரு பெண்ணிற்கு புகுந்த வீட்டில் கிடைக்கும் உரிமைகள் மற்றும் அவள் பிறந்த வீட்டின் உரிமைகள் பற்றி தெரிந்து கொள்வது நல்லது. மேலும், கணவன், மனைவி தொடர்பான சட்டங்களை ஆண், பெண் இருபாலரும் அறிந்திருப்பது கூடுதல் சிறப்பு.சேமிப்பு குறித்த திட்டம்:
🌷 திருமணத்திற்குப் பிறகு நமது பொறுப்புகள் அதிகரிக்கும். எனவே, பணத்தைச் சிக்கனமாகச் செலவழிக்கவும், சேமிக்கவும் கற்றுக்கொள்வது நல்லது. ஏனென்றால் சேமிப்பது உங்கள் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும்.முடிவுரை:
🌷 அன்பார்ந்த பயனாளர்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள திருமணத்திற்கு முன் ஆண்-பெண் இருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பான விஷயங்கள் பற்றிய இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். இந்த பொறுப்பான அடிப்படை விஷயங்களை நீங்களும் இப்போது தெரிந்து கொண்டிருப்பீர்கள். நீங்கள் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு பொருத்தமான வரன் இன்னும் அமையவில்லையா? ஜாதகத்தில் தோஷம் உள்ளதா? கவலை வேண்டாம் நித்ரா மேட்ரிமோனியில் இன்றே இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்! உங்கள் ஜாதகத்திற்கு பொருத்தமான வரன்களை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.