திருமணத்தின்போது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா....?
முன்னுரை:
💕 இந்துக்களின் திருமணம் பல்வேறு சடங்குகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து செய்வதே திருமணம் ஆகும். உங்கள் துணைக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா?? இனி கவலை எதற்கு? உங்களுக்கானவரை திருமணம் செய்ய நமது நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! இப்பதிவில் ஆணும் பெண்ணும் இணையும் திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்? என்பதனைப் பற்றிக் காண்போம்.
அம்மி மிதித்தல் :
💕 திருமண நாள் வரை, மணமகள் பிறரால் பார்க்கப்பட்டால், திருமண நாளில், அவள் தன்னை அக்னிக்கு அர்ப்பணித்து, தன்னைப் புனிதப்படுத்தி, அதே அக்னியில் கணவனின் பாவங்களையும் நீக்கி, அவனுடைய சக்தியையும் புனிதப்படுத்தி, தூய்மைப்படுத்துகிறாள். மேலும், தன் ஆற்றல் எனும் ஆக்ஞை சக்கரத்தை கணவனுக்கு முழுமையாகக் கொடுத்து புருவ மத்தியில் திலகமாக ஏற்றுக்கொள்கிறாள் என்பது நம் முன்னோர்களின் கூற்று ஆகும்.
💕 மணமகன், மணமகளின் வலதுகால் கட்டைவிரலைப் பிடித்து, அக்னிக்கு வலதுபுறத்தில் இருக்கும் அம்மி மீது மணமகளின் கால்களை ஏற்றி வைக்கிறார். பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டிய கணவன், இனிமேல் உன் உயிர் மூச்சாக இருப்பேன், கல் போல் உறுதியுடன் உன் வாழ்வில் வழிகாட்டுவேன் என்று மணமகளை பார்த்து அம்மியில் காலை வைத்து மெட்டியினை அணிவிக்கிறார்.
அருந்ததி பார்த்தல் :
💕 அம்மி மிதித்தல் நிகழ்வுக்குப் பிறகு மணமக்கள் அருந்ததி தரிசனம் செய்கிறார்கள். வேள்வியை சுற்றும் மூன்றாம் சுற்றில் அருந்ததி பார்த்தல் நடைபெறுகிறது. இருவரையும் அழைத்து வந்து மண்டபத்தின் வடக்கு வாசலுக்கு வந்து வானத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு பூஜை செய்து அருந்ததி காட்டுகின்றனர். இந்த நட்சத்திரத்தைக் காட்டுவது நல்வாழ்க்கையும், வளத்தையும் பெறுவதற்கேயாகும்.
💕 வசிஷ்டரின் மனைவி அருந்ததி ஆவார். இவர் சிறந்த பதிவிரதை. அதனால்தான் வானத்தில் துருவத்திற்கு அருகில் உள்ள ஏழு நட்சத்திரங்களில் வசிஷ்ட நட்சத்திரமும் அருந்ததியும் இருப்பதாக பண்டைய புராணங்கள் கூறுகின்றன.
💕 அருந்ததியோடு சேர்த்து துருவ நட்சத்திரத்தையும் காட்டுவர். துருவ நட்சத்திரம் ஆகாயத்தில் நிலையாக இருப்பதாலும், மற்ற நட்சத்திரங்களுக்குக் காரணமாகவும் கட்டுப்பாட்டாகவும் இருப்பதால், எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்க வேண்டும் என முழுமனதுடன் வழிபடப்படுகிறது.
💕 வசிஷ்டரைப்போல் மணமகனுக்கு ஸ்திரத்தன்மையும், அருந்ததியைப் போல் மணமகளுக்குப் பதிவிரதத் தன்மையும் இருத்தல் வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
💕 தோற்றத்தில் வித்தியாசமாக இருந்தாலும், உள்ளத்தில் ஒன்றாக வாழ வேண்டும், இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அருந்ததியை அம்மி மிதித்து அருந்ததி பார்க்கப்படுகின்றனர்.
முடிவுரை:
💕 திருமணம் என்பது இரு மனங்களையும் ஒருமனதாக இணைக்கும் ஒரு சிறப்பு விழா ஆகும். உங்களுக்கும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து திருமணம் புரிய ஆசையா?? உங்களின் எதிர்காலத்தவரோடு ஒன்றிணைய நமது நித்ரா மணமாலையில் இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! என்றென்றும் இன்பமாக வாழுங்கள்!!