திருமணத்தில் மூன்று முடிச்சு எதற்காக போடப்படுகிறது?
முன்னுரை:
👫 திருமணம் என்பது பல்வேறு சடங்குகள், மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்தது. திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்குக்கும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. சில சடங்குகள் எதற்காக, ஏன் செய்யப்படுகின்றன என்று நம்மில் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் நம் முன்னோர்கள் ஒவ்வொரு சடங்குகளையும் ஏதோ ஒரு அர்த்தத்துடன்தான் நடைமுறையில் வைத்திருந்தார்கள்.
👫 திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான வாழ்க்கை பந்தம். திருமணத்தில் பல சடங்குகள் இருந்தாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதுதான் மிக முக்கியமான நிகழ்வு. பெரியவர்கள் முன்னிலையில் அவர்களின் ஆசியுடன் மணமகன் மணமகளுக்கு மூன்று முடிச்சுகள் போடப்படுகின்றன. திருமணத்தில் மூன்று முடிச்சுகள் ஏன் போடப்படுகிறது என்பதை விரிவாக காணலாம் வாருங்கள்!! உங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ மூன்று முடிச்சு போட்டு முத்தான மண வாழ்க்கை அமைக்க நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!!
மூன்று முடிச்சு:
👫 இந்து மத சாஸ்த்திரப்படி திருமணத்தில் ஒவ்வொரு சடங்கிலும் ஒவ்வொரு அர்த்தம் உள்ளது.
👫 தாலி கட்டும்போது போடப்படுகிற மூன்று முடிச்சுயானது, விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் என்னும் மூன்று நிலைகளை குறிக்கிறது.
👫 ஒரு பெண் இந்த மூன்று நிலைகளிலும் தெய்வீக உணர்வுடன் இருக்க வேண்டும். அப்பெண் எண்ணம், சொல், செயலில் தூய்மையாக இருக்க வேண்டும். கடவுள் பக்தி, குடும்பப் பெரியவர்களிடம் மரியாதை, கணவன் மீது அன்பு ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.
முதல் முடிச்சு:
👫 முதல் முடிச்சு போடும் வேளையில், தங்களுக்குப் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும், புத்திசாலியுடனும் இருக்க வேண்டும் என்று பிரம்மாவையும், ஞானக் கடவுளான சரஸ்வதியையும் வேண்டி முதல் முடிச்சு போடப்படுகிறது.
இரண்டாவது முடிச்சு:
👫 குடும்பத்தைக் காக்கவும், ஏழைகளுக்கு உதவவும் தேவையான செல்வத்துடன் வாழ, காக்கும் தெய்வமான திருமாலையும், செல்வத்தை அருளும் லட்சுமியையும் வணங்கி இரண்டாவது முடிச்சு போடப்படுகிறது.
மூன்றாவது முடிச்சு:
👫 உலகம் அமைதியாக இருக்க, தர்மம் எங்கும் நிலவ வேண்டும் என்பதற்கிணங்க, அநியாயங்களை எதிர்க்கவும், தவறுகளை தண்டிக்கவும், தன் குடும்பத்தை கஷ்டங்களிலிருந்து பாதுகாக்கவும் தைரியத்தின் அடையாளமாக விளங்கும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வணங்கி மூன்றாவது முடிச்சு போடப்படுகிறது.
தாலிக் கயிற்றின் மகத்துவம்:
👫 "திருமணத்தில் தாலிக்கயிறு கட்டும்பொழுது மாங்கல்யம் தந்துநானே" என்ற சொல்லப்படுகிறது.
👫 அந்த மந்திரத்தில் தந்து என்பது கயிறு என்று பொருள். மஞ்சள் கயிற்றால் கட்டப்படுகிற தந்து என்று கூறப்படுகிறது. மஞ்சள் கயிற்றால் தாலி கட்டினால்தான் ஐஸ்வர்யம் பிறக்கும்.
👫 இன்றைய கால பெண்கள் மஞ்சள் கயிற்றால் தாலியை அணியும்போது அலர்ஜி ஏற்படுவதாக கூறுகிறார்கள். ஆனால், தரமான மஞ்சள் நூலில் தாலியை அணிந்தால் இந்த மாதிரி அலர்ஜி பிரச்சனை வராது.
👫 கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும் மஞ்சள் நூல் கொண்ட தாலியை அணிந்தால்தான் அதன் மகத்துவம் கிடைக்கும். கணவனின் ஆயுளும் நீட்டிக்கப்படும் என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முடிவுரை:
👫 இந்த மகத்துவமான பதிவு உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகின்றோம். திருமணம் என்பது பிரமிக்க வைக்கும் ஒரு தருணமாகும். இத்தருணத்தில் இரு உயிர்களும் ஒன்றாக இணைந்து வாழ்க்கையைத் தொடங்குவதாகும். உங்கள் செல்ல மகன்/மகளுக்கு இது போன்ற பிரம்மாண்ட திருமணத்தை செய்ய எங்கள் நித்ரா மேட்ரிமோனியில் இலவச வரன் பதிவு செய்யுங்கள்!! அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிடுங்கள்!!