திருமணத்தின் போது கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்?
முன்னுரை
கெட்டிமேளம் என்பது தமிழர் கலாச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு இசைக் கருவியாகும். திருமணம் என்பது இரண்டு இதயங்களை இணைத்து புதிய வாழ்க்கையைத் தொடங்கும் புனிதமான நிகழ்வாகும். குறிப்பாக திருமண நிகழ்ச்சிகளில் கெட்டிமேளம் ஒலிப்பது பாரம்பரியத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், ஏன் கெட்டிமேளம் ஒலிக்க வேண்டும்? அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இந்த நித்ரா மேட்ரிமோனி பதிவில் விளக்கமாக பார்ப்போம்.
மங்களகரமான சூழலை உருவாக்கம் கெட்டிமேளம்
திருமண நிகழ்ச்சிகளில் கெட்டிமேளம் ஒலிக்கவேண்டும் என்பது ஒரு பழமையான மரபு. இது மங்கலத்தை குறிக்கும் இசையாகக் கருதப்படுகிறது. கெட்டிமேளத்தின் சத்தம் மகிழ்ச்சி மற்றும் நேர்மறை ஆற்றலை அழைப்பதாக நம்பப்படுகிறது.
கெட்டிமேளத்தின் சக்தி
திருமணத்தின் முக்கியமான தருணம் தாலிகட்டுதல். அந்த நேரத்தில் அனைவரின் கவனமும் மணமக்கள் மீது குவிவது அவசியம். பலர் ஒரே நேரத்தில் பல விஷயங்களைப் பேசிகொண்டிருப்பார்கள் அதில் கெட்டதும் இருக்கலாம், தேவையற்ற பேச்சுகளை குறைக்கும் வகையிலும், தும்மல் சத்தம் தாலி கட்டும் போது கேட்க கூடாது என்றும் கெட்டிமேளம் சத்தமாக வாசிக்க படுகிறது. அப்போது அனைவரின் கவனத்தையும் மணமேடை நோக்கி திருப்புகிறது. கெட்டிமேளத்தின் ஒலி அனைவரையும் உற்சாகப்படுத்தி, திருமணத்தை மிகவும் மங்களகரமானதாக மாற்றுகிறது.
மரபு மற்றும் குடும்ப பாசம்
திருமணத்தின்போது கெட்டிமேளம் ஒலிப்பது, குடும்பத்தை ஒன்றிணைத்து வைக்கும் பாசத்தை பிரதிபலிக்கிறது. இது தாத்தா, பாட்டி, பெற்றோர் போன்றவர்களால் பின்பற்றப்பட்ட பழமையை தற்போதைய தலைமுறையினருக்குத் தெரியப்படுத்துகிறது.
நுண்ணிய கலை சார்ந்த இசை
கெட்டிமேளம் நம் தமிழர் கலாச்சாரத்தின் ஆழமான இசைக் கலையை பிரதிபலிக்கிறது. திருமண நிகழ்ச்சியில் கெட்டிமேளம் ஒலிக்கும்போது, அது கலாச்சாரத்தின் மேன்மையை பிரதிபலிக்கிறது.
மறக்க முடியாத நினைவுகள்
கெட்டிமேளத்தின் ஒலி, ஒவ்வொரு தருணத்தையும் மகிழ்ச்சியாக மாற்றுகிறது. மாப்பிள்ளையின் வரவேற்பு முதல் திருமணம் வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் கெட்டிமேளம் ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
முடிவுரை
திருமணத்தில் கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இது ஒரு பாரம்பரியம் மட்டுமல்லாமல், நல்ல சக்திகளை வரவழைத்து, கெட்ட சக்திகளை விரட்டி, மணமக்களுக்கு மறக்க முடியாத நினைவுகளைத் தரும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைகிறது. நீங்கள் வரன் தேடிக்கொண்டு இருக்கிறீர்களா? இன்றே நித்ரா மேட்ரிமோனியில் பதிவு செய்து மனதிற்கு பிடித்தமான துணையை தேடுங்கள் விரைவில் உங்களின் திருமணத்தில் கெட்டிமேல ஒலி கேட்க எங்களின் வாழ்த்துக்கள்.