திருமணத்தில் அட்சதை போடுவது ஏன்?
முன்னுரை:
🌾 திருமணம், சீமந்தம், மஞ்சள் நீராட்டு விழா, கிரக பிரவேசம் என எந்த ஒரு சுப நிகழ்ச்சியும் பெரியோர்களின் ஆசியானது அட்சதை மூலமாகதான் நாம் பெறுகிறோம். முனை முறியா அரிசிக்கு அட்சதை என்று பெயர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் வாழ்த்துகளைத் தூவுவதில் பூக்களை விட அட்சதை மேன்மையானது. பூக்கள் மற்றும் புனித தீர்த்தமானது அட்சதை இல்லாத நிலையில் பயன்படுத்தப்படுகிறது. அட்சதை தூவி உங்களது மணமக்களை ஆசிர்வதிக்க நமது நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! சுபகாரியங்களில் அட்சதை போடுவது ஏன்? என்பதை இங்கு காண்போம்.
அட்சதை:
🌾 அரிசியுடன் தூய மஞ்சளை கலந்து அதனுடன் பசு நெய் சேர்த்து அட்சதை தயாரிக்கப்படுகிறது. இது வெள்ளை அரிசி மற்றும் மஞ்சள் நிறத்துடன் நெய்யின் மினுமினுப்புடன் கொண்ட ஒரு தேவதை அம்சத்தைக் கொண்டுள்ளது. இது பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெறுவதற்கான ஒரு வழியாகும்.
🌾 நிலத்தடியில் விளையும் மஞ்சளானது, நிலத்தின் மேல் தோன்றும் நெல்லோடும், குற்றமில்லாத நெய்யோடும் சேர்ந்தால் தெய்வீகமாகிறது. சந்திரனின் அம்சம் கொண்ட அரிசி, குருவின் ஆதிக்கத்துடன் கூடிய மஞ்சள், மகாலட்சுமியின் அருளுடன் நெய் இவையனைத்தும் சேர்ந்தால், அங்கு நல்ல அதிர்வுகள் உண்டாகி, அந்த இடமே மங்களகரமாகிறது.
🌾 அட்சதைக்குப் பச்சரிசியே சிறந்தது ஆகும். அரிசியானது உணர்வையும், சக்தியையும் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது. அதனால் தான் அரிசியை கையில் தொட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதை ஒரு தட்டில் வைத்து திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் கொடுப்பது சிறந்தது.
அட்சதையின் மகிமை:
🌾 அரிசி என்பது உடல் என்றும், மஞ்சள் ஆன்மா என்றும், நெய் தெய்வீக சக்தி என்றும் சான்றோர் கூறுகிறார்கள். அதாவது உடல் மற்றும் ஆன்மா ஆகியன தெய்வசக்தியோடு இணைந்து வாழ்த்துதல் என்பதே இதன் பொருள்.
🌾 அரிசி, மஞ்சள், வெற்றிலை, சந்தனம், பூ போன்ற மங்களகரமான பொருட்கள் திருமண விழாவில் பயன்படுத்தப்படுகின்றன. தாலி கட்டும் போது அட்சதை தூவுவது, மணமக்கள் பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெறவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு பெறவும் வளமான வாழ்க்கைக்கும் ஓர் ஆசீர்வாதம் ஆகும்.
🌾 சுபநிகழ்ச்சிகளில் பெரியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் அட்ஷதையை தூவி வாழ்த்துகின்றனர். இதனை மலராகக் கருதி வணங்கி இறைவனின் திருவடியில் வைத்து ஆசிர்வதித்து தூவுவதே சிறந்தது.
🌾 இதை வீசி எறிவது தவறான செயலாகும். திருமணத்தில் எங்கோ ஓர் இடத்தில் இருந்து சிலர் வீசிவதை நாம் பார்க்கிறோம். இது ஆசியை அவமதிக்கும் ஒரு விஷயம் ஆகும். ஆகவே, மணமக்களை வாழ்த்தி மெல்லத் தூவுவதே சிறந்தது.
🌾 புதிய காரியங்களின் தொடக்கத்தைக் கொண்டாட பெரியவர்களும் நண்பர்களும் அட்சதை தூவுவது நல்லது. இதனால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடைந்து அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
முடிவிரை:
🌾 மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்சதை பற்றிய பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். சங்க காலத்துக்கு முன்பிருந்தே நம் எல்லா வழிபாடுகளிலும், விழாக்களிலும் அட்சதை இருந்திருக்கிறது. அனைத்து நிகழ்வுகளும் களங்கமில்லாத அட்சதையைப் போன்று கச்சிதமாக நடைபெற வேண்டும் என்பதே அட்சதையின் குறியீடு. அனைத்து ஐஸ்வர்யங்களும் கடவுளின் அம்சமே ஆகும். அத்தகைய மங்களம் நிறைந்த அம்சத்தை அட்சதை மூலம் பெரியோர்களின் ஆசியுடன் வாழ உங்கள் நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! அட்சதை மூலம் அனைத்து ஐஸ்வர்யங்களும் பெறுங்கள்!!