திருமணம் விரைவில் நடக்க எளிய பரிகாரங்கள்!
🙏 திருமணப் பேச்சு எழுந்ததுமே, நம் ஜாதகத்திற்கு ஏற்ற நல்ல வரன் கிடைக்க வேண்டும் என அனைவரும் விரும்புவதுண்டு. ஆனால் சில காரணங்களால் பலருக்கு திருமணம் தள்ளிப்போயிக் கொண்டே இருக்கும். திருமண தாமதத்திற்கான காரணத்தையும் அதற்கான பரிகாரத்தை பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம். இந்தப் பதிவை படிக்கும் நீங்கள் ஒரு பொறுப்பான ஸ்தானத்தில் உள்ள பெற்றோரா? உங்கள் வீட்டு செல்ல மகளுக்கோ அல்ல மகனுக்கோ இன்னும் நல்ல வரன் அமையவில்லையா? ஜாதகம் பொருந்தவில்லை என்னும் கவலையா? இனிமே வேண்டாம்! நீங்கள் தமிழ்நாட்டில் நம்பக தளமான நித்ரா மேட்ரிமோனியில் உடனே இலவசமாக ரெஜிஸ்டர் பண்ணுங்க! அப்புறம் வீட்டில் கெட்டிமேள சத்தம் தான் கேட்கும்!திருமணம் தாமதத்திற்கான பரிகாரங்கள்:
ஒரு பெண்ணின் திருமணத்திற்கு உதவுதல்:🙏 திருமணத் தடைக்கு மிகச்சிறந்த பரிகாரமாக விளங்குவது, முதலில் ஒரு ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உங்களால் முடிந்த நிதி, பொருள் உதவி செய்வது தான். ஏனெனில் தானம், தர்ம காரியங்கள் நம்முடைய தலைமுறையைக் காக்கும் என்ற நம்மிக்கை இன்றளவும் உண்டு. அந்த வகையில், மற்றொருவரின் திருமணத்திற்காக நீங்கள் செய்யும் உதவிகள் உங்களுக்கு உள்ள தோஷங்களைப் போக்குவதில் மிகவும் உதவியாக இருக்கும்.
சனி தோஷம் விலக தர்மம் செய்தல்:
🙏 உங்கள் ஜாதகத்தில் சனிதோஷம் இருந்தால் கூட திருமணம் தடைபட்டுக் கொண்டே போகலாம். முதலில் அனுபவமுள்ள ஒரு நல்ல ஜோதிடரை அணுகி உங்கள் ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வாறு சனிதோஷம் இருக்கும் பட்சத்தில் உங்கள் அருகில் உள்ள ஏழைகளுக்கு தேவையான தானங்களைச் செய்யுங்கள், அது பொருளாகவும் இருக்கலாம் அல்லது பணமாகவும் இருக்கலாம். சனிபகவானை வேண்டி அவர் மனம் குளிர்ச்சியடையச் செய்தால் சனிதோஷம் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.
கோவில் பிரசாத்தை வீணாக்காதீர்கள்:
🙏 கோவில்களில் கொடுக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் ஒருவருடைய பசியைப் போக்கி, அவரின் வயிறார கொடுக்கக்கூடிய வாழ்த்துக்கள் நம்முடைய தலைமுறையை எப்பொழுது வேண்டுமானலும் காக்கும். நமது தலைமுறையின் வளர்ச்சிக்கு முக்கியமான திருமணத்திற்கு சாதகமான சூழல் உருவாகும். எனவே உணவுக்காக கஷ்டப்படுபவர்களுக்கு, ஆதரவற்றோருக்கு அன்னதானம் கொடுப்பது மிகச்சிறந்த பரிகாரமாகும்.
துர்கை அம்மன் வழிபாடு:
🙏 ராகு காலத்தில் துர்க்கை தேவியை வழிபடுவது திருமண தாமதம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற அருள் கிடைக்கும்.
16 திங்கட்கிழமை விரதம்:
🙏 பெண்களின் திருமண தாமதம் நீங்க, சிவபெருமான் வணங்கி 16 திங்கட்கிழமை விரதம் இருக்க வேண்டும். உங்களால் முடிந்தால் வீட்டில் அல்லது கோவிலில் சிவன் சிலைக்கு ஜலாபிஷேகம் செய்யவும். இவ்வாறு சிவனை நீங்கள் வழிபடும் போது பார்வதி தேவியின் நல்லாசி விரைந்து உங்களுக்கு கிடைத்து விரைவில் திருமணமாகும்.
பசுக்களுக்கு தீவனம் கொடுத்தல்:
🙏 கோமாதாவின் உருவமாக பார்க்கப்படும் பசுவிற்கு பச்சை தீவனங்களான கீரை, புல் தீவனம் கொடுக்கவும். இதனால், உங்களுக்குள்ள திருமண தாமதம் விரைவாக தீரும் மற்றும் கர்ம வினையையும் தீர்த்துக் கொள்ளலாம்.
மஞ்சள் உடை அணியவும்:
🙏 திருமண யோகத்தை தரக்கூடியவர் குரு பகவான். திருமண வயதை அடைந்தவர்கள் வியாழன் கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு மாங்கல்யம் அமைய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
அரசமர விநாயகப் பெருமானின் வழிபாடு:
🙏 ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6 முதல் 9 மணிக்குள் அரசரமரத்திற்கு கீழ் அமர்ந்திருக்கும் விநாயகரை வணங்கி நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வருவது சிறந்த பரிகாரமாகும்.
சுக்கிர வழிபாடு:
🙏 திருமண சுகத்தை அளிப்பவர் சுக்கிர பகவான். எனவே, தினமும் காலையில் குளித்து சுத்தமாகி, வீட்டில் பூஜை அறையில் உள்ள குல தெய்வம் மற்றும் பிற தெய்வங்களை வணங்கி, ஓம் ப்ரும் பிருஹஸ்பதயே நம என்ற மந்திரத்தை தினமும் 3 முறை ஜபித்து வந்தால் தடைகள் நீங்கும், கூடிய விரைவில் நல்ல வரன் கிடைக்கும்.
முடிவுரை
🙏 அன்பார்ந்த பயனாளர்களே! மேலே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத் தகவல்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான பரிகாரங்கள் ஆகும். இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். திருமணத்திற்கு காத்திருக்கும் 90 கிட்ஸ் பலருக்கும் 2024-ல் திருமணம் நடக்குமா? என்ற கவலை இருக்கும். ஜாதகத்தில் குரு பார்வை வந்த பிறகும் வரன் அமையவில்லையே என்று கவலைப்படுகிறீர்களா? உங்களுக்காகவே எண்ணற்ற வரன்கள் காத்திருக்கிறார்கள் நமது நித்ரா மேட்ரிமோனியில், இன்னும் ஏன் தாமதம் இப்பொழுதே இலவசமாக வரன் பதிவு செய்து உங்கள் வாழ்க்கைத் துணையைச் சந்தியுங்கள்!