திருமணம் செய்ய உகந்த மாதங்கள் 2024
💠 அன்பான வாசகர்களே!! வணக்கம்!! பொதுவாக வீட்டை கட்டி பார், கல்யாணத்தை பண்ணிபார் என்பார்கள். வீடு கட்டுவதும் திருமணம் செய்வதும் மிகவும் கடினம் என்பது உண்மைதான். கல்யாணம் செய்வதற்கு குடும்பத்திலுள்ள அனைவருக்கும் ஏதாவதொரு விதத்தில் பணக்கஷ்டம், மனகஷ்டம் போன்றவை வரும். அந்த வகையில் திருமணம் செய்வதற்கான முடிவுகளை எடுப்பதற்கு பல முறை பல ஜோதிடர்களை பார்த்து அதன் பின்புதான் முடிவுகளை எடுப்பார்கள். அது போல் திருமணம் என்றால் அதற்கேற்ற உகந்த நாள், கிழமை, மாதம், நேரம், ராசி, லக்கனம் என இதுபோன்ற அனைத்தையும் பார்த்த பிறகுதான் திருமணத்தை செய்வார்கள். அந்த வகையில் இந்த பதிவில் திருமணம் செய்வதற்கு உகந்த நாள், மாதம், கிழமை, நட்சத்திரம், லக்னம் போன்ற அனைத்தையும் பார்ப்போம். திருமணத்திற்கு இன்னும் நல்ல வரன் உங்களுக்கு அமையவில்லையா? நமது நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக வரன்பதிவு செய்து, உங்களுக்கேற்ற துணையைத் தேர்ந்தெடுங்கள்!!
திருமணம் செய்ய உகந்த மாதம்:
💠 திருமணம் செய்வதற்கு முதலில் மணமக்களின் பொருத்தத்தை பார்ப்பார்கள். பின்பு ஜாதகரிடம் அவர்களுக்கேற்ற ராசியான மாதங்களை வைத்து கணிப்பார்கள். அதன்பின் அவர்களுக்கு எந்த மாதத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்பதை கணிப்பார்கள். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன. திருமணத்திற்கு சிறந்த மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி போன்றவை ஆகும்.
திருமணம் செய்ய உகந்த திதி:
💠 திதியானது அனைத்து விஷயத்திற்கும் பார்ப்பார்கள். சாதாரணமாக சிலர் தீபாவளிக்கு துணி வாங்குவதர்க்கு சென்றால் கூட திதியை பார்ப்பார்கள். அஷ்டமி, நவமி போன்ற தினங்களில் எந்த சுபகாரியங்களையும் செய்யமாட்டார்கள். வளர்பிறை, திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதமி, திரயோதசி, தேய்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி போன்ற திதிகளில் திருமணம் செய்வார்கள்.
திருமணம் செய்ய உகந்த நாள்:
💠 பொதுவாக, ஒருசில நாட்களில் சில முக்கிய முடிவுகளை கூட எடுக்கமாட்டார்கள். அதேபோல் தான் கல்யாணம் செய்வதர்க்கு சுபமுகூர்த்த தினமாக இருந்தாலும் அந்த தேதிகளில் திருமணம் செய்யமாட்டார்கள். முக்கியமாக செவ்வாய்கிழமை, சனிக்கிழமைகளில் திருமணம் செய்யமாட்டார்கள். மற்ற நாட்களனைத்தும் திருமணம் செய்ய உகந்த நாட்களே ஆகும்.
திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம்:
💠 திருமணம் செய்வதர்க்கு மணமகன், மணமகள் நட்சத்திரம் இருந்தால் போதும் என்று நினைப்பார்கள். ஆனால், திருமணம் செய்வதற்கு நாள் குறிக்கும் போதே அன்றைய தினம் என்ன நட்சத்திரம்?, இருவருக்கிடையே நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா? என்பதை கணிப்பார்கள். மேலும், ரோகிணி, மிருகசீருஷம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் திருமணம் செய்யலாம். குறிப்பாக ஆனி மாதத்தில் பிறந்த பெண்ணுக்கும், ஆனி மாதத்தில் பிறந்த ஆணுக்கும் திருமணம் செய்யக்கூடாது என்பர்.
திருமணம் செய்ய உகந்த லக்னம்:
💠 ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் போன்ற லக்னங்களில் திருமணம் செய்யலாம். முக்கியமாக ஏழாம் இடத்திலும் எட்டாம் இடத்திலும் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் நன்மை தரும்.
2024 ஆம் ஆண்டு திருமணம் செய்ய உகந்த நாட்கள்
⭐திருமணம் செய்ய உகந்த நாட்கள் - ஜனவரி 2024⭐
நாள் : ஜனவரி 16 - தை 02 - செவ்வாய்
நாள் : ஜனவரி 17 - தை 03 - புதன்
நாள் : ஜனவரி 21 - தை 07 - ஞாயிறு
நாள் : ஜனவரி 27 - தை 13 - சனி
நாள் : ஜனவரி 28 - தை 14 - ஞாயிறு
நாள் : ஜனவரி 30 - தை 16 - செவ்வாய்
நாள் : ஜனவரி 31 - தை 17 - புதன்
⭐திருமணம் செய்ய உகந்த நாட்கள் - பிப்ரவரி 2024⭐
நாள் : பிப்ரவரி 04 - தை 21 - ஞாயிறு
நாள் : பிப்ரவரி 06 - தை 23 - செவ்வாய்
நாள் : பிப்ரவரி 08 - தை 25 - வியாழன்
நாள் : பிப்ரவரி 12 - தை 29 - திங்கள்
நாள் : பிப்ரவரி 13 - மாசி 01 - செவ்வாய்
நாள் : பிப்ரவரி 18 - மாசி 06 - ஞாயிறு
நாள் : பிப்ரவரி 24 - மாசி 12 - சனி
நாள் : பிப்ரவரி 25 - மாசி 13 - ஞாயிறு
நாள் : பிப்ரவரி 26 - மாசி 14 - திங்கள்
நாள் : பிப்ரவரி 29 - மாசி 17 - வியாழன்
⭐திருமணம் செய்ய உகந்த நாட்கள் - மார்ச் 2024⭐
நாள் : மார்ச் 01 - மாசி 18 - வெள்ளி
நாள் : மார்ச் 02 - மாசி 19- சனி
நாள் : மார்ச் 03 - மாசி 20 - ஞாயிறு
நாள் : மார்ச் 04 - மாசி 21 - திங்கள்
நாள் : மார்ச் 05 - மாசி 22- செவ்வாய்
நாள் : மார்ச் 06 - மாசி 23 - புதன்
நாள் : மார்ச் 10 - மாசி 27 - ஞாயிறு
நாள் : மார்ச் 11 - மாசி 28 - திங்கள்
நாள் : மார்ச் 12 - மாசி 29 - செவ்வாய்
⭐திருமணம் செய்ய உகந்த நாட்கள் - ஏப்ரல் 2024⭐
நாள் : ஏப்ரல் 18 - சித்திரை 05 - வியாழன்
நாள் : ஏப்ரல் 20 - சித்திரை 07 - சனி
நாள் : ஏப்ரல் 22 - சித்திரை 09 - திங்கள்
நாள் : ஏப்ரல் 23 - சித்திரை 10 - செவ்வாய்
நாள் : ஏப்ரல் 24 - சித்திரை 11 - புதன்
நாள் : ஏப்ரல் 26 - சித்திரை 13 - வெள்ளி
⭐திருமணம் செய்ய உகந்த நாட்கள் - ஜூலை 2024⭐
நாள் : ஜூலை 11 - ஆனி 27 - வியாழன்
நாள் : ஜூலை 13 - ஆனி 29 - சனி
நாள் : ஜூலை 14 - ஆனி 30 - ஞாயிறு
நாள் : ஜூலை 15 - ஆனி 31 - திங்கள்
⭐திருமணம் செய்ய உகந்த நாட்கள் - நவம்பர் 2024⭐
நாள் : நவம்பர் 12 - ஐப்பசி 26 - செவ்வாய்
நாள் : நவம்பர் 16 - கார்த்திகை 01 - சனி
நாள் : நவம்பர் 17 - கார்த்திகை 02 - ஞாயிறு
நாள் : நவம்பர் 24 - கார்த்திகை 09 - ஞாயிறு
நாள் : நவம்பர் 25 - கார்த்திகை 10 - திங்கள்
நாள் : நவம்பர் 26 - கார்த்திகை 11 - செவ்வாய்
நாள் : நவம்பர் 28 - கார்த்திகை 13 - வியாழன்
⭐திருமணம் செய்ய உகந்த நாட்கள் - டிசம்பர் 2024⭐
நாள் : டிசம்பர் 04 - கார்த்திகை 19 - புதன்
நாள் : டிசம்பர் 05 - கார்த்திகை 20 - வியாழன்
நாள் : டிசம்பர் 09 - கார்த்திகை 24 - திங்கள்
நாள் : டிசம்பர் 10 - கார்த்திகை 25 - செவ்வாய்
நாள் : டிசம்பர் 14 - கார்த்திகை 29 - சனி
மேலே கொடுக்கப்பட்டுள்ள திருமணம் செய்ய உகந்த மாதங்கள் 2024 உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். திருமணம் என்பது ஒரு பொறுப்பான உறவாகும். ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிப்படுத்த திருமணம் செய்கின்றனர். இந்த அற்புதமான திருமணத்தை, உகந்த நாட்கள் மற்றும் மாதங்கள் பார்த்து செய்ய நித்ரா மேட்ரிமோனியில் உடனே இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! உங்களுக்கேற்ற துணையோடு இணையுங்கள்!!
