திருமணத் தடையா? இத்திருத்தலம் சென்று வாருங்கள்!!
பருவமடைந்த பிறகும் பல காரணங்களால் திருமணத் தடைகளால் அவதிப்படுபவர்கள் ஏராளம். அவர்களைச் சந்திப்பவர்கள் உங்களுக்கு எப்போது திருமணம்? என்று அவர்கள் ஜாதகத்தில் தோஷம் இருப்பது போல் சொல்லி மனதை புண்படுத்துவார்கள். இனி அந்த கவலை வேண்டாம். நித்ரா மேட்ரிமோனியில் லட்சக்கணக்கான வரன்கள் உங்களுக்காகக் காத்து கொண்டிருகின்றனர். இலவசமாக பதிவு செய்து பயன்பெறுங்கள். மேலும், திருமணத் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோவில் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
திருமணத் தடை நீங்கும் திருமணஞ்சேரி:
🛕 திருமணஞ்சேரி என்னும் திருத்தலம் திருமணத் தடையை நீக்க வல்லது. திருமணத் தடையால் கலங்கித் தவிக்கும் ஆண்களும் பெண்களும் இங்கே மாப்பிள்ளைக் கோலத்தில், மாப்பிள்ளை ஸ்வாமியாகக் காட்சி தரும் உற்சவரை கண்ணாரத் தரிசித்தல் சிறப்பு.
🛕 திருமணஞ்சேரி என்னும் ஊர் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து நிறையப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
திருத்தல வரலாறு:
🛕 இந்த திருத்தலத்தில் பார்வதி அம்மன் கைலாயத்தில் சிவபெருமானை வேண்டி, மறுபடி சிவனை மனம் முடிக்க வேண்டும் என்றும் வேண்டினாள். சிவனும் அவ்வாறே வாக்களித்தார். உமா தேவி மகிழ்ச்சியுற்று இருந்தாள். அப்போது பார்வதி சிறிது பிழை செய்தார். அதனைக் கண்டு கோபம் கொண்ட சிவன், பார்வதி தேவிக்குப் பசுவாக மாறும்படி சாபம் அளித்தார். துன்பத்திலிருந்த பார்வதி தேவி சாப விமோசனம் பெறுவதற்கும், தன்னை மணந்து கொள்ளவும் சிவனை வணங்கினாள். ஆனால் சிவனோ நேரம் வரும்போது கூறுவதாகக் கூறினார்.
🛕 பசு உருவம் பார்வதி தேவி மட்டும் கொள்ளவில்லை. அவருடன் சேர்ந்து லக்ஷ்மி, சரஸ்வதி ஆகியோரும் பசு வடிவம் பெற்று இருந்தனர். மாடு மேய்க்கும் தொழிலை விஷ்ணு கொண்டிருந்தார். அப்போது அம்பிகை தனது பாலை சிவ பெருமானுக்கு பொழிந்து சிவனை குளிர செய்து சாப விமோசனம் நீங்கி தனது உண்மையான வடிவத்தைப் பெற்று திருமணம் பூண்டார்.
🛕 அப்போது பாரத மகரிஷி என்னும் முனிவர் சிவனை வேண்டி யாகம் நடத்தினார். அவர் நடத்திய யாகத்தின் முன் ஈசனுக்கும் அம்பிகைக்கும் திருமணம் நடந்தது. ஆதலால் இங்குத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
கோவிலின் சிறப்பு:
🛕 திருமணஞ்சேரி கோவிலில் திருமணம் ஆகாதவர்கள் வந்து அர்ச்சனை செய்தால் விவாகம் இனிது நிறைவேறும் என்பது அக்காலத்திலிருந்து நடைபெற்று வரும் நம்பிக்கை. மேலும் இந்த கோவிலில் மிகச் சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுவது தோஷ நிவர்த்திகள். ஜாதகத்தில் ஏதேனும் ராகு தோஷம் இருந்தால் அவர்கள் இங்குள்ள ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்ய ராகு தோஷம் நீங்கும். மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் கூட இந்த தலத்தில் வந்து திருக்குளத்தில் நீராடி ரகு பகவானை மனதார வழிபட விரையில் புத்திர பாக்கியம் கிட்டும்.
🛕 இக்கோவிலில் உள்ள ராகு பகவானுக்குப் பால் என்றால் மிகவும் பிடித்த ஒன்றாகும். ஆகவே ராகு பகவானுக்குப் பால் பொங்கல் பிரசாதமாகச் செய்து அதனை உண்டு வரப் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு.
திருமணம் ஆக செய்ய வேண்டியவை:
🛕 திருமணமாக, கோவிலில் உள்ள சப்தகிரி தீர்த்தத்தில் முதலில் குளித்துவிட்டு, பிறகு மூலவராக உள்ள கல்யாண சுந்தரருக்கு மாலை சாற்ற வேண்டும். பிறகு அர்ச்சனை செய்து அங்குள்ள தீபம் வைக்கப்படும் மேடையில் ஐந்து தீபம் ஏற்ற வேண்டும். பிறகு அங்கு திருமண மேடையில் வழங்கப்படும் எலுமிச்சம்பழத்தை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். பிரசாதமாக வழங்கப்படும் மாலையைப் பத்திரப்படுத்தி வீட்டிற்குச் சென்றதும் அதனை ஒரு முறை போட்டு இறைவனை மனதார வணங்க வேண்டும். பிறகு கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதமான விபூதி மற்றும் குங்குமத்தைத் தினமும் பயன்படுத்த வேண்டும்.
🛕 மேலும் இந்த பத்திரப்படுத்தபட்ட மாலையானது திருமணமான உடனே இருவரும் வந்து கோவிலில் இட்டு அர்ச்சனை செய்து வேண்டுதலை முடிக்க வேண்டும்.
கோவிலின் தோற்றம்:
🛕 இந்த திருமணஞ்சேரி கோவிலானது ஐந்து கோபுரங்களைக் கொண்டது. இந்த கோவிலில் கணபதி, முருகன், லக்ஷ்மி, துர்கை நந்தியம்பெருமான் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். இந்த கோவிலில் தான் மன்மதன் கண் திறக்கும் காட்சி உள்ளது. உற்சவர் மூர்த்தி பிரகாரங்களில் உள்ளார். மேலும் சிவபெருமானின் கழுத்திற்கு மாலையாக வந்து திருமணத்தை நடத்தி வைத்த ஏழு சமுத்திரங்களும் ஒரே தீர்த்தக்குலத்தில் உள்ளது.
🛕 இக்கோயில் திருமணத் தடை நீக்கும் திருத்தலங்களில் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். நாள்தோறும் ஏராளமான மக்கள் திருமணத் தடை நீங்க வழிபட்டுச் செல்கின்றனர்.
மேலே கொடுக்கப்பட்ட பதிவு உங்களுக்கு மிகவும் உபயோகமானதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். திருமணத்தடையிலிருந்து விடுபட்டு நல்ல மணவாழ்க்கை அமைய நித்ரா மணமாலையில் உங்கள் மகன்/மகளுக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணையை அமைத்துக் கொடுங்கள். நித்ரா மணமாலை தமிழ்நாட்டில் சிறந்த சேவைகளை மன நிறைவாக வழங்கி வருகின்ற நம்பகமான தளம். பதிவுகள் இலவசம்!! இன்றே விரைந்திடுங்கள்.