Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.

திருமண தடை நீங்க சப்த கன்னியர் வழிபாடு!!

💑 திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வாகும். இது இரு மனதிற்கும் இடையிலான புனிதமான உறவாகும். ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்க்கையின் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கும் தருணம். ஆனால் சிலருக்கு திருமணம் தடைபடுவதுண்டு. திருமணம் தடைபடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஜாதக தோஷம், கிரக தோஷம் போன்றவை முக்கியமானவை. திருமண தடை நீங்க பல வழிபாடுகள் உள்ளன. அவற்றில் சப்த கன்னியர் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். இந்தப் பதிவில் திருமண தடை நீங்க என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். நீங்க இன்னும் திருமணத்திற்கு காத்துக்கொண்டுள்ளீர்களா? ஆனால் நல்ல வரம் அமையவில்லையா? வருத்தமே வேண்டாம்! நித்ரா மேட்ரிமோனியில் ரெஜிஸ்டர் பண்ணுங்க, உடனே கல்யாணத்தை முடியுங்க!!

சப்த கன்னியர்கள் யார்?

🙏 பெண் தெய்வ வழிபாட்டிலும், சக்தி வழிபாட்டிலும் கிராம தெய்வ வழிபாடுகளிலும் சப்த கன்னிகளுக்கு முக்கியமான இடம் உண்டு.

1. சாமுண்டீஸ்வரி

🙏 ஈஸ்வரனின் நெற்றிக் கண்களிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தன்னுடைய கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். பதினாறு கரங்களுடனும், பதினாறு விதமான ஆயுதங்களுடனும், மூன்று கண்களுடனும், சிவப்பு நிறத்துடனும், யானைத்தோலையும் உடையணிந்து தோன்றிய சப்தகனிகைகளில் முதன்மையானவள் சாமுண்டீஸ்வரி! மனிதர்களுக்கு மட்டுமல்ல, தேவர்களுக்கு அருள் புரிபவள். சாமுண்டீஸ்வரியை வழிபட்டால், எதிரிகளிடமிருந்து நம்மைக் காத்து, நமக்குத் தேவையான பலம், செல்வம், மகிழ்ச்சி அனைத்தையும் தருவாள். வேறு வழியில்லாத போது, சாமுண்டீஸ்வரியை அழைத்தால், புது யுக்திகளைக் காட்டி, முடியாததைச் செய்து முடிப்பாள்.

2. பிராம்மி

🙏 அம்பிகையின் முகத்தில் இருந்து உருவான பிராம்மி, அறிவுக்கு அதிபதியும், மேற்கு திசையின் அதிபதியுமான சரஸ்வதியின் அம்சமாகும். அவள் நான்முகனின் அம்சமாகத் தோன்றினாள். மான் தோலை அணிந்தவள் அறிவை அளிப்பவள், அறியாமையை அகற்றுபவள். மாணவிகள் இவரின் காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் மறதி நோய் நீங்கும். ஐஏஎஸ், வங்கி, அரசு வேலைகள் போன்ற தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்து வந்தால் வெற்றி உறுதி.

3. கெளமாரி

🙏 கௌமாரி முருகப்பெருமானின் அம்சம். அவளுக்கு சஷ்டி, தேவசேனா போன்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள் அஷ்ட திக்கிற்கும் அதிபதியும் கூட. சமுத்திரத்தின் வயிற்றைக் கிழிக்கச் செய்த சக்தி கொண்டவள். இவளை வழிபட்டால் குழந்தைச் செல்வம் உண்டாகும் இளமையைத் தருபவள்.

4. மகேஸ்வரி

🙏 அம்பிகையின் தோளிலிருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் மகேஸ்வரியின் சக்தியால் தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி மூன்று கண்களை உடையவள். ஜடா கிரீடத்துடன் காட்சியளிப்பவள். மழு ஏந்தி, மான், அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெள்ளை மிகவும் பிடித்த நிறம் மற்றும் வடக்கு-கிழக்கு என்னும் ஈசானியம் திசையை ஆட்சி செய்கிறாள் . மகேஸ்வரியை வழிபட்டால், ஒருவரின் கோபத்தைப் போக்கி அமைதியை தருவாள். இவரது வாகனம் ரிஷபம். அம்பிகையின் மற்றொரு அம்சமாக அவள் போற்றப்படுகிறாள்.

5. வராஹி

🙏 பன்றியின் முகத்தோடும், அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குபவள் வராஹி. வராஹம் என்பது பன்றியின் அம்சமானது, இது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். வாராஹிக்கு மூன்று கண்கள் உண்டு. இத்தெய்வமும் சிவனின் அம்சமாகும். மிருக பலமும், தெய்வ பக்தியும் உடையவள், பக்தர்களின் துன்பங்களைத் தாங்குபவள்.

6. வைஷ்ணவி

🙏 வைஷ்ணவி அம்பிகையின் கைகளில் பிறந்தவள். அவள் விஷ்ணுவின் அம்சம். கருடனையே வாகனமாகக் கொண்டவள். வளமான வாழ்வைத் தருபவர். சகல சௌபாக்கியங்களையும் செல்வங்களையும் அளிப்பவள் வைஷ்ணவி. குறிப்பாக தங்கத்தை அளவில்லாமல் பெற வைஷ்ணவி வழிபாடு மிகவும் அவசியம்.

7. இந்திராணி

🙏 இந்திரனின் அம்சமான கற்பக மலர்களை தன் கூந்தலில் சூடியவள் பிராம்மி. யானை இத்தெய்வத்தின் வாகனம். சொத்து சுகம் தருபவள். தன்னை மனதார வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை அமைத்துத் தருவதிலும் மிகவும் தலைசிறந்த வரம் தருவதும் இத்தெய்வமே! திருமணமாகாத ஆண்கள் பிராம்மியை வழிபட்டால், மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்களுக்கு மிகப் பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

🙏 ஏழு தெய்வங்களும் சப்த கன்னியர் என்று புராணம் போற்றுகிறது . இந்த ஏழு தேவிகளும் தீமையை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் வந்தவர்கள் என்றும் ஞானநூல்கள் போற்றுகின்றன.

சப்த கன்னியர்களை எப்படி வழிபட்டால் திருமண தடை நீங்கும்?


🙏 சப்த கன்னியை வேண்டி, தீபம் ஏற்றி சப்த கன்னியர்களை வழிபட்டால் திருமண ஆசை உடனடியாக நிறைவேற்றி தருவார்கள். கன்னியர்களின் சிலைக்கு முன் மண்டியிட்டு நம் குறைகளைச் சொன்னாலே போதும், அவர்களைப் போல் மனதை குளிர்ந்து, நம் பிரச்சனைகளை உடனே தீர்த்து வைக்கும் தெய்வம் வேறில்லை. சப்த கன்யாக்கள் ஆக்ரோஷமான தெய்வங்களாக இருந்தாலும், நாம் அவர்களுக்கு பணிந்து வணங்கினால் உடனடியாக நம் பிரச்சினைகளை தீர்த்து விடுவார்கள்.

ஏழு தேங்காய் தீபம் ஏற்றுங்கள்!


🙏 திருமண தடை விலக, சப்த கன்னியர்கள் இருக்கும் கோவிலுக்கு ஏழு தேங்காய் வாங்கி செல்லுங்கள் (இதை கோவிலுக்கு போகும் வழியில் வாங்கிக் கொள்ளுங்கள்). நீங்கள் கொண்டு சென்ற ஏழு தேங்காயையும் உடைத்து குடுமி இருக்கும் மூடியை தவிர்த்து விட்டு மற்றொரு பக்கத்தில் உள்ள மூடியில் இலுப்பை எண்ணெய் மற்றும் சிகப்பு நூல் திரி போட்டு ஏழு தீபங்கள் ஏற்ற வேண்டும். 7 தீபம் என்பது ஒவ்வொரு கன்னியருக்கும் ஒரு தீபம். சப்த கன்னியர்களுக்கு தீபத்தை ஏற்றி, அவர்களின் திருவுருவ சிலைக்கு முன் மண்டியிட்டு திருமணம் தடை அகல வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து மூன்று வாரங்கள் மிக பத்தியுடன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

🙏 இந்த பிரார்த்தனையை ஆணோ பெண்ணோ யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த தீபம் ஏற்றிய சில நாட்களில் உங்கள் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறி நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. சப்த கன்னியர்களை வழிபாடு செய்வதால் கன்னிதோஷம் நீக்கப்பட்டு திருமண வரன் உங்களைத் தேடி வரும்.

சப்த கன்னியர் வழிபாட்டின் விரதம்:

🙏 சப்த கன்னியர் வழிபாட்டை சிறப்பாக செய்ய, விரதம் இருந்தும் வழிபடலாம். விரதம் இருப்பவர்கள், தினமும் சப்த கன்னியர் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். விரதம் இருப்பவர்கள், சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும். ஆண்கள் விரதம் இருப்பவர்களாக இருந்தால், புலால், மது, புகை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

சப்த கன்னியர் வழிபாட்டின் சிறப்புகள்:

🙏 திருமண தடை நீங்கும்.

🙏 திருமணம் சிறப்பாக நடக்கும்.

🙏 திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

🙏 பெண்களுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

🙏 தீய சக்திகள் விலகும்.

🙏 வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

💑 சப்தகன்னியரை வணங்கி, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்களான மஞ்சள்-குங்குமம் வழங்கினால், சந்ததி செழிக்கும், தாலி பாக்கியம் கிடைக்கும், வம்சம் செழிக்கும் என்பது நம்பிக்கை. இன்றைய காலத்தில், திருமணமாகி தனக்கென ஒரு குடும்பம் அமைத்த பிறகுதான் தம்பதியர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். நேரம் வரும்போதுதான் இப்படிப்பட்ட திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படுகிறது. சிலருக்கு தாமதம் உண்டாகும். சப்த கன்னிகளை வழிபடுபவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க நீங்களும் காத்துக் கொண்டுள்ளீர்களா? உங்களுக்கேற்ற பொருத்தமான வரன் அமைய நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்து, வாழ்க்கைத் துணையோடு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பியுங்கள்!!


saptakanni


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.
Christian - Caste
By Profession
By City
By State
By Education
By Marital Status
By Dosham
Second Marriage By Caste
Divorcee By Caste
Divorcee By Location
Second Marriage By Location