திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக்கொடுப்பது ஏன்?
முன்னுரை:
💞 வணக்கம் அன்பர்களே, இன்று நாம் ஒரு முக்கியமான தகவலைப் பற்றி விரிவாக பார்க்கப் போகிறோம். நம் தமிழர் பண்பாட்டில் ஏராளமான சடங்குகளும் வழிமுறைகளும் பின்பற்றப்படுகிறது. அவற்றுள் முக்கியமானதொன்று தாம்பூலத்தட்டுகளில் திருமண அழைப்பிதழை வைத்து கொடுப்பது. பொதுவாக நம் வீட்டிலோ அல்லது உறவினர்களோ திருமண பத்திரிக்கையினை தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பதை நாம் பார்த்திருப்போம். அதன் காரணம் என்ன? ஏன் இவ்வாறு தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்கிறார்கள்? என யோசித்துள்ளீர்களா? உங்கள் செல்லங்களுக்காக நீங்களும் தாம்பூலத்தில் திருமண அழைப்பிதழை உற்றாருக்கு கொடுக்க ஆசையா?? இனி கவலை வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கான வரன்களை காண நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! மேலும், இப்பதிப்பில் திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக்கொடுப்பது ஏன்? என்பதனைப் பற்றி தெளிவாகப் பார்ப்போம்.
அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பதன் காரணம்:
💞 திருமண வாழ்க்கை என்பது அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்றவற்றின் கலவையாகும். திருமண அழைப்பிதழ் என்பது புதிதாக இணையப் போகும் தம்பதிகளின் திருமணத்திற்கு நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றியுள்ள அனைவரையும் அழைக்கும் ஒரு அழைப்புக் கடிதமே திருமண அழைப்பிதழ் ஆகும்.
💞 திருமண அழைப்பிதழ் வழங்குவது சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் கடைப்பிடிக்கக் கூடிய திருமணச் சடங்காக நடைமுறையில் உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கேற்ப திருமண அழைப்பிதழை வடிவமைத்து வழங்குவார்கள்.
💞 திருமண அழைப்பிதழ் வடிவமைத்து, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மற்றும் சுற்றியிருக்கும் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுக்கும் போது, திருமண அழைப்பிதழ் மட்டுமின்றி வெற்றிலை, பூ, குங்குமம் போன்றவற்றையும் கொடுக்கும் வழக்கம் இன்றளவில் கூட நடைமுறையில் உள்ளது.
💞 சிலருக்கு திருமண அழைப்பிதழுடன் நாணயம் ஒன்றையும் சேர்த்து கொடுக்கும் வழக்கம் உண்டு.
முன்னோர்களின் அற்புதமான நடைமுறை வழக்கம்:
💞 சிலர் திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது மட்டுமல்லாமல், கடன் கொடுக்கும்போதும் தட்டில் வைத்துதான் கொடுப்பார்கள். அதே போல ஒருவருக்கு அரிசி, நெல் போன்றவற்றைக் கொடுக்கும் போதும் முறத்தில் வைத்துதான் கொடுப்பார்கள்.
💞 இப்படிக் கொடுத்தவரும் வாங்குபவரும் பொருளாதார நிலையில் உயர்ந்தாலும் சரி, தாழ்ந்தாலும் சரி, எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்பதைக் காட்டுவதற்காகவே இவ்வாறு தட்டிலோ அல்லது தாம்பூலத்திலோ வைத்துக் கொடுக்கிறார்கள்.
💞 மேலும் வெறும் கைகளால் எதையாவது கொடுக்கும்போது, கொடுப்பவரின் கை மேலேயும், பெறுபவரின் கை கீழேயும் இருக்கும். இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் இருவரது மனதிலும் எழாமல் இருக்க நம் முன்னோர்கள் எதைக் கொடுத்தாலும் அதைத் தட்டில் வைத்துக் கொடுக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தினார்கள்.
💞 இதனால்தான் திருமண அழைப்பிதழ் கொடுக்கப்படும்போது தாம்பூலத்தில் வைக்கப்படுகிறது. மேலும், திருமண அழைப்பிதழை தாம்பூலத் தட்டில் வைத்து பரிமாறும் போது, அதனுடன்வெற்றிலை, பாக்கு, பூ, குங்குமம் ஆகியவற்றையும் சேர்த்து கொடுத்தால் சிறப்பு.
முடிவுரை:
💞 இந்த அற்புதமான பதிவு உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகின்றோம். திருமண அழைப்பிதழை மங்களகரமாக தாம்பூலத்தில் வைத்து கொடுப்பது பண்டைய வழிமுறையாகும். அத்தகைய வழிமுறையில் திருமணம் நடைபெற நமது நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவினை இலவசமாக பதிவு செய்யுங்கள்!!. அன்பின் பிறப்பிடமாக திகழுங்கள்!!