தேய்பிறை அஷ்டமி நாட்கள் 2025!
முன்னுரை
தேய்பிறை அஷ்டமி என்பது ஒவ்வொரு மாதமும் தேய்பிறை காலத்தில் வரும் அஷ்டமி திதியைக் குறிக்கிறது. இந்த நாள் கால பைரவாஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானின் அம்சமான பைரவரை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. நாம் இந்த நித்ரா மேட்ரிமோனி வலைதளப்பகுதியில் 2025 தேய்பிறை அஷ்டமி நாட்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.தேய்பிறை அஷ்டமி பலன்கள்
பைரவரை வழிபடுவதன் மூலம் நம் துன்பங்கள், கஷ்டங்கள் நீங்கி, நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது.கடன் தொல்லைகள் தீர, வேலை வாய்ப்பு கிடைக்க, திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்க தேய்பிறை அஷ்டமி வழிபாடு உதவும் என்று நம்பப்படுகிறது.
பைரவரை வழிபடுவதால், தீய சக்திகளின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நாளில் பைரவரை வழிபட்டு அன்னதானம் செய்தால் செல்வம் பெருகும்.
தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுவது குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் ஏற்பட மிகவும் முக்கியமானது.
தேய்பிறை அஷ்டமியில் செய்யக்கூடாதவை
தேய்பிறை அஷ்டமி அன்று அசைவ உணவு உண்ணுவதை தவிர்ப்பது நல்லது.திருமணம், புது வீடு வாங்குதல் போன்ற சுப காரியங்களை தேய்பிறை அஷ்டமியில் செய்யக்கூடாது.
தேய்பிறை அஷ்டமியன்று யாரிடமும் வாக்குவாதம் செய்யக்கூடாது.
பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும்.
தீய எண்ணங்களை மனதில் வைத்திருக்கக்கூடாது.
தேய்பிறை அஷ்டமி நாட்கள் 2025
தேய்பிறை அஷ்டமி திதி ஜனவரி 2025 🌷 நாள் : ஜனவரி 21, 12:40 pm முதல் ஜனவரி 22, 3:18 வரைதேய்பிறை அஷ்டமி திதி பிப்ரவரி 2025 🌷 நாள் : பிப்ரவரி 20, 9:58 am முதல் பிப்ரவரி 21, 11:58 am வரை
மார்ச் மாத தேய்பிறை அஷ்டமி திதி 2025 🌷 நாள் : மார்ச் 22, 4:24 am முதல் மார்ச் 23, 5:23 am வரை
ஏப்ரல் தேய்பிறை அஷ்டமி திதி 2025 🌷 நாள் : ஏப்ரல் 20, 7:01 pm முதல் ஏப்ரல் 21, 6:59 pm வரை
தேய்பிறை அஷ்டமி திதி 2025 மே 🌷 நாள் : மே 20, 5:52 am முதல் மே 21, 4:55 am வரை
ஜூன் மாத தேய்பிறை அஷ்டமி திதி 2025 🌷 நாள் : ஜூன் 18, 1:35 pm முதல் ஜூன் 19, 11:56 am வரை
ஜூலை தேய்பிறை அஷ்டமி திதி 2025 🌷 நாள் : ஜூலை 17, 7:09 pm முதல் ஜூலை 18, 5:02 pm வரை
தேய்பிறை அஷ்டமி திதி ஆகஸ்ட் 2025 🌷 நாள் : ஆகஸ்ட் 16, 11:50 pm முதல் ஆகஸ்ட் 17, 9:35 pm வரை
தேய்பிறை அஷ்டமி திதி 2025 செப்டம்பர் 🌷 நாள் : செப்டம்பர் 14, 5:04 am முதல் செப்டம்பர் 15, 3:06 am வரை
அக்டோபர் மாத தேய்பிறை அஷ்டமி திதி 2025 🌷 நாள் : அக்டோபர் 13, 12:24 pm முதல் அக்டோபர் 14, 11:10 am வரை
தேய்பிறை அஷ்டமி திதி 2025 நவம்பர் 🌷 நாள் : நவம்பர் 12, 11:09 pm முதல் நவம்பர் 13, 10:58 pm வரை
தேய்பிறை அஷ்டமி திதி டிசம்பர் 2025 🌷 நாள் : டிசம்பர் 12, 1:57 pm முதல் டிசம்பர் 13, 2:57 pm வரை