Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.
Thaipoosa Viratham 2024
Dhanraj

தைப்பூச விரதம் 2024

🙏 முருகப் பெருமானுக்கு விரதமிருந்து வழிபட்டு, முருகனின் அருளைப் பெறுவதற்கு ஏற்ற நாட்களில் முக்கியமானது தைப்பூசத் திருநாளாகும். தைப்பூச திருவிழாவானது பழனி தண்டாயுதபாணி கோவிலில் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவின் போது மட்டும், முருகனின் அறுபடைகளில் ஒன்றான பழனியில் 3 முதல் 5 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள். தைப்பூசத்தன்று முருகப் பெருமானை வழிபட்டால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தைப்பூசத் திருநாளன்று முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து வழிப்பட்டால் எண்ணிய சுபகாரியங்களனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். சுப காரியங்கள் செய்ய தை மாதம் சிறப்பு மாதமாகும். உங்கள் வீட்டிலும் திருமணம் எனும் சுபகாரியம் நடக்க இன்றே நமது நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் வீட்டு செல்லங்களுக்கு திருமணத்தை நடத்துங்கள்!!

🙏 பஞ்சபூதங்களும் இறைவனுக்குள் அடங்கும் என்பதை உணர்த்தும் நாளாக தைப்பூசம் விளங்குகிறது. அதனால் இந்த நாளில் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. ஜோதிட ரீதியாக பூசம் நட்சத்திரம் என்பது சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரமாகும். இது தை மாத பெளர்ணமி நாளுடன் இணைந்து வருவது கூடுதல் சிறப்பினைப் பெறுகிறது. முருகப் பெருமான் சிவ-சக்தி ஐக்கியமான ரூபமாக விளங்குவதால் தைப்பூசம் முருகனுக்குரிய வழிபாட்டு நாளாயிற்று.

தைப்பூச பெருவிழா:

🙏 முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாட்களில் ஒன்றுதான் தைப்பூசம். தைப்பூச விழா பழனி தலத்திற்குரிய விழாவாக கருதப்பட்டாலும், உலகம் முழுவதுமுள்ள அனைத்து முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருவது வழக்கம் ஆகும். ஏராளமான பக்தர்கள் பால்குடமும் காவடியும் எடுத்து வலம் வந்து முருகப் பெருமானை இந்த நாளில் வழிபடுவார்கள். தை மாதத்தில் வரும் பெளர்ணமியுடன், பூசம் நட்சத்திரம் இணையும் நாளே தைப்பூசம் நாளாகும். தைப்பூசம் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதற்கு புராண கதைகளும் சொல்லப்படுவதுண்டு.

தைப்பூசம் தோன்றிய வரலாறு:

🙏 முனிவர்களுக்கு பலவிதமான துன்பங்களைக் கொடுத்து வந்த தாரகாசுரன் என்னும் அசுரனை முருகன் இந்த நாளில் தான் வதம் செய்தார். முருகப் பெருமான் வள்ளி தேவியைத் திருமணம் செய்ததும், அன்னை பராசக்தியின் மொத்த சக்திகளையும் உள்ளடக்கிய சக்திவேலினை வாங்கியதும் இதே நாளில் தான். முருகப் பெருமானுக்கு, தான் அளித்த சாபத்தை நீக்குவதற்காக அவர் முன் தோன்றி பார்வதி தேவி காட்சி கொடுத்ததும் இதே தைப்பூச நாளில் தான் என புராணங்கள் கூறுகின்றன. ஞான பண்டிதனான முருகப் பெருமான், தனது தந்தை ஈசனுக்கே பிரணவ மந்திரத்திற்கு பொருளை உபதேசம் செய்ததும் இந்த நாளில் தான். வள்ளியை திருமணம் செய்ததால் ஊடல் கொண்ட தெய்வாணையை சமாதானம் செய்து வள்ளி-தெய்வாணை சமேதராக முருகப் பெருமான் காட்சி தந்ததும் தைப்பூச நாளில் தான் என கூறப்படுகிறது.

சிவனுக்குரிய நாளான தைப்பூசம்:

🙏 தைப்பூச திருநாளானது சிவன் மற்றும் பார்வதி தேவியுடன் தொடர்புடைய நாளாக கருதப்படுகிறது. மார்கழி திருவாதிரையில் சிதம்பரத்தில் சிவபெருமான் தனித்து நடனம் ஆடியதை கண்ட பார்வதி தேவிக்கு தானும் இதே போல் ஆனந்த தாண்டவம் நிகழ்த்த வேண்டும் என ஆசைப்பட்டு, பராசக்தி தனியாக ஆனந்த தாண்டவம் ஆடியது இந்த தைப்பூச நாளில் தான். சிதம்பரத்தில் சிவன் - பார்வதி இருவரும் இணைந்து ஆனந்த நடனம் ஆடியதும் இந்த தைப்பூச திருநாளில்தான். முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழைக் கற்றுக் கொடுத்ததும் இதே தைப்பூச திருநாளில் தான் என கூறப்படுகிறது. தைப்பூச நாளில் தான் நீர் உருவானதாகவும், அதிலிருந்து உலக உயிர்கள் உருவானதாகவும் கூறப்படுகிறது.

தைப்பூச விரத பலன்கள்:

🙏 இத்தகைய சிறப்பு வாய்ந்த தைப்பூச திருநாளில் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியே அடையும் என்பது நம்பிக்கை. பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். குழந்தை வரம், திருமணம், ஆயுள், குடும்ப ஒற்றுமை ஆகியவை கிடைக்கும். தைப்பூசத்தன்று முருகனுக்கு நடக்கும் பூஜை, அபிஷேகங்களை கண்டால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். தோஷங்களைத்தும் நீங்கும், நினைத்த காரியங்கள் கைக்கூடும். தைப்பூச விரதமிருக்கும் முருக பக்தர்கள் மார்கழி மாதத்தில் துவங்கி தொடர்ந்து 48 நாட்கள் விரதத்தை இருப்பார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு காவடி ஏந்தி, பாதயாத்திரையாக வலம்வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் உண்டு.

தைப்பூசம் 2024 தேதி, நேரம்:

🙏 அளவில்லாத பலன்களை அள்ளித்தரும், பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தைப்பூசத் திருநாள் 2024-ம் ஆண்டில் ஜனவரி 25-ம் தேதியன்று வருகிறது. அதுவும் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையில் வருவதினால் இந்த ஆண்டு தைப்பூசம் கூடுதல் சிறப்பானதாக இருக்கும் என கருதப்படுகிறது. ஜனவரி 24-ம் தேதி இரவு 10.44 மணியளவில் தொடங்கி, ஜனவரி 25-ம் தேதி இரவு 11.56 வரை பெளர்ணமி திதி உள்ளது. அதே சமயம் ஜனவரி 25-ம் தேதி காலை 9.14 மணிக்கு பிறகே பூசம் நட்சத்திரம் துவங்குகிறது. ஜனவரி 26-ம் தேதி காலை 11.07 வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இதனால் ஜனவரி 25-ம் தேதியே தைப்பூச வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். இந்த நாளில் முருகப் பெருமானை மட்டுமின்றி பார்வதி தேவியையும், சிவ பெருமானையும், குரு பகவானையும் வழிபடுவது அதிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தைப்பூச விரத முறை:

🙏 தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டிலுள்ள முருகப் பெருமான் படத்திற்கு மலர்களால் அலங்கரித்து, விளக்கேற்றி வழிபடுதல் வேண்டும். அன்று மூன்று வேளையும் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதமிருக்க வேண்டும். முருகப் பெருமானுக்குரிய கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் ஆகிய பாடல்களை பாடிக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். இது எதுவும் தெரியாதவர்கள் எளிமையாக "ஓம் சரவண பவ" என ஆறெழுத்து மந்திரத்தை சொல்லி முருகனை வழிபடுதல் வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று முருகப் பெருமானைத் தரிசித்த பிறகே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் சகல செளபாக்கியமும் கிடைக்கும்.

🙏 மேலே கொடுக்கப்பட்டுள்ள தைப்பூச விரதம் 2024 உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். தீய சக்திகளை அழித்து, பகைகளை நீக்கி, நவகிரக தோஷங்களையும் போக்கும் தைப்பூசத் திருநாளில் முருகப் பெருமானை விரதம் இருந்து வழிப்படுதல் வேண்டும். இந்த சுப நாளில் முருகனை வழிப்பட்டு தடையின்றி திருமணம் செய்ய நித்ரா மேட்ரிமோனியில் உடனே இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுங்கள்!!


thaipoosam


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.
Christian - Caste
By Profession
By City
By State
By Education
By Marital Status
By Dosham
Second Marriage By Caste
Divorcee By Caste
Divorcee By Location
Second Marriage By Location