தை மாத ராசி பலன் 2024
💠 தை பிறந்தால் வழிப்பிறக்கும் என்பது புகழ்பெற்ற பழமொழியாகும். இந்த பழமொழிக்கேற்ப தை மாதம் பிறக்கும்போது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. அதாவது, சூரிய பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகக்கூடிய மகர சங்கராந்தி ஜனவரி மாதம் 15-ம் தேதி, அதாவது தை மாதம் தொடங்க உள்ளது. சூரியனின் ராசி மாற்றத்தினால் சிறப்பான பலன்களைப் பெறக்கூடிய ராசிகள் அல்லது ராசிக்காரர்கள் யார் என்பதை இங்குப் பார்ப்போம். உங்களுக்கு திருமண வரன் அமையவில்லையா? உங்களுக்காகவே இருக்கிறது உங்கள் நித்ரா மேட்ரிமோனியில் தளம். தை மாத பலன்களை பெற்று, நீங்கள் திருமணம் செய்ய நமது நித்ரா மணமாலையில் ரிஜிஸ்டர் பண்ணுங்க!! உங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுங்க!!
சனியின் ராசியில் சூரியன்:
💠 சூரிய பகவான், தன்னுடைய மகனான சனி பகவானின் வீடான மகர ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். மகர சங்கராந்தியான தை மாதத்தில் 12 ராசிகளின் வாழ்க்கையிலும் சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தும். கிரகங்களின் ராஜாவும், ஆத்மகாரகனான சூரிய பகவான் ஜனவரி 15-ம் தேதி மதியம் 2.32 மணியளவில் மகரத்தில் பெயர்ச்சிக்கு இடம் பெயர உள்ளார். அடுத்ததாக எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..
ரிஷப ராசி:
💠 சூரிய பகவான் ரிஷபம் ராசிக்கு நான்காம் வீட்டு அதிபதி ஆவார். அவர் ஒன்பதாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். சூரியன் மகர ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் நல்ல பலன்களைத் தரும். வெளிநாடு தொடர்பான வேலைகளும், சொத்துக்கள் சேர்வதற்கான நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்.
💠 புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கு நீங்கள் போதுமான அளவு தகவமைத்துக் கொள்ளவது நல்லது. உங்களின் சிறப்பான செயல்பாடும், மற்றவர்களுடன் நெகிழ்வுத்தன்மையுடன் நடந்து கொள்வதால் லாபகரமான வருமானத்திற்கான வாய்ப்பையும் பெறுவீர்கள்.
விருச்சிகம் ராசி:
💠 விருச்சிக ராசிக்கு 3-ம் வீடான தைரிய, வீரிய ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். இந்த தை மாதத்தில் உங்களின் கடின உழைப்புக்கேற்ற முழு பலனையும் பெறுவீர்கள். உங்களின் எந்த ஒரு முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். தொழில், வேலை தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும்.கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை. உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் அதிகம். உயர்கல்வி தொடர்பான முயற்சிகள் நிறைவேறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
தனுசு ராசி:
💠 தனுசு ராசிக்கு 2-ம் வீட்டில் சூரிய பகவானின் பெயர்ச்சி நடக்கிறது. இந்த சூழலில் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் பெற்றோரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணம் சம்பாதிப்பதற்கான நல்ல வாய்ப்புகள் அதிகம் உண்டு. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
💠 உத்தியோகத்தில் கடின உழைப்பின் மூலம் முன்னேற்றம் தரக்கூடிய பலனைப் பெறுவீர்கள். வெளிநாடு தொடர்பான வேலை கிடைக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வணிகத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறலாம். வருமானமும் அதிகரிக்கும். உறவுகளில் இனிமை இருக்கும். உங்கள் மனைவியுடனான உறவுகள் வலுவடையும்.
மீனம் ராசி:
💠 மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய தை மாத காலத்தில் 11-ம் வீட்டில் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். தொழில்துறையில் கடினமான உழைப்பை போட்டால் அதில் முன்னேற்றத்தை பெறக்கூடிய வலுவான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கூடும்.
💠 வணிகத்தில் அபரிமிதமான வெற்றி மற்றும் நிதி ஆதாயமும் கிடைக்கும். உங்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். சேமிப்பில் கவனம் தேவை. உங்கள் குடும்பத்துடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
💠 மேலே கொடுக்கப்பட்டுள்ள தை மாத ராசி பலன் 2024 உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். தித்திக்கும் தமிழ் போல பொங்கட்டும் பொங்கலது! புதுப்பானை பொங்கல் போல பிறக்கட்டும் புதுவாழ்வு! என்பதற்கேற்ப தை மாதத்தில் வரன் பார்த்து திருமணம் செய்ய நித்ரா மேட்ரிமோனியில் உடனே இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் துணையோடு தலப் பொங்கலைக் கொண்டாடுங்கள் !!