2024 புத்தாண்டு பலன்கள் - சிம்மம்
💜 சிம்மம் ராசிகாரர்களுக்கு, பிறக்கின்ற ஆங்கில வருடப் புத்தாண்டில் இருக்கக்கூடிய கிரக நிலைகளின் அமைப்புக்கு ஏற்ப வாழ்க்கையில், இனி வரப்போகின்ற நாட்களில் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்வோம்..! உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? தேடி தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லையா? அப்படியானால், உங்கள் தேடலை நித்ரா மணமாலை முடித்துக் கொடுக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேட நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!!
சிம்மம் ராசி:
💜 எதிலும் முன்னின்று செயல்படும் சிம்ம ராசி அன்பர்களே..! வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. பாதியில் நின்ற கட்டிடம் தொடர்பான பணிகளை நிறைவு செய்வீர்கள். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
💜 ஆடம்பரமான சிந்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. ஜாமீன் விஷயங்களில் பொறுமை வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மலரும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வெளியூர் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தந்தைவழி தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும்.
💜 நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்ட தூரப் பயணங்களால் செலவு அதிகரிக்கும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. ஆடம்பரமான பேச்சுகளைத் தவிர்ப்பது தெளிவை ஏற்படுத்தும். சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு மேம்படும். தடைபட்ட பணிகளைச் செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
உடல் ஆரோக்கியம் :
💜 உடல் ஆரோக்கியம் தொடர்பான செலவுகள் குறையும். உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். உடலின் தேவைக்கு ஏற்ப தண்ணீரைப் பருகவும். பொட்டாசியம் மற்றும் கால்சியம் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.
பெண்கள் :
💜 புதுவிதமான இடங்களுக்குச் சென்று வருவதற்கான சூழல் அமையும். பேச்சுக்களில் நிதானமும், பொறுமையும் வேண்டும். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும்.
💜 நபர்களின் தன்மைகளை அறிந்து பழக்கம் கொள்ளவும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே புரிதல் அதிகரிக்கும்.
மாணவர்கள் :
💜 மாணவர்களுக்கு அடிப்படை கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும். குடியுரிமை சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
💜 ஆராய்ச்சி கல்வியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பது சார்ந்த எண்ணங்கள் சிலருக்கு கைகூடும். உயர்கல்வியில் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் :
💜 உத்தியோகப் பணிகளில் வரவுகள் மேம்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் நேரிடும். விவேகமான செயல்பாடுகள் நற்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும். அளவான பேச்சுக்கள் உங்கள் மீதான மதிப்பை மேம்படுத்தும்.
💜 சக ஊழியர்களிடத்தில் பொறுமையைக் கையாளவும். மற்றவர்களுக்கு ஜாமீன் அளிப்பதைக் குறைத்துக் கொள்ளவும். பணி மாற்றச் சிந்தனைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும்.
வியாபாரிகள் :
💜 வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். புதிய பயணங்களால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அரசு வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நுட்பமான சில விஷயங்களைப் புரிந்து கொள்வதால் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள். கூட்டாளிகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.
💜 தினசரி வர்த்தகத்தில் சூழ்நிலை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். அலங்காரம் மற்றும் மலர் வியாபாரத்தில் லாபம் மேம்படும். கலைப் பொருட்கள் விற்பனையில் புதுமையான விஷயங்களைக் கையாண்டு மேன்மை அடைவீர்கள்.
கலைஞர்கள் :
💜 கலை சார்ந்த துறைகளில் புதிய முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். சிறு தூரப் பயணங்களால் ஆதாயம் மேம்படும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகளும் சிலருக்கு கைகூடிவரும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும்.
💜 அதிகார பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிர் பாலின மக்கள் விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். கலை சார்ந்த துறைகளில் போட்டிகள் மேம்படும்.
அரசியல்வாதிகள் :
💜 அரசியல்வாதிகளுக்கு தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். நுட்பமான சிந்தனைகளால் ஆதாயத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். மறைமுகமான சில வருமானங்கள் மேம்படும்.
💜 அவ்வப்போது சிறு சிறு வதந்திகளும், வழக்கு சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும். தொண்டர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவது நல்ல மதிப்பையும், மரியாதையையும் ஏற்படுத்திக் கொடுக்கும். எதிலும் திருப்தி இல்லாத சூழ்நிலை ஏற்படும்.
வழிபாடு :
💜 செவ்வாய்க்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபமேற்றி துர்க்கை அம்மனை வழிபாடு செய்துவர மனதளவில் இருந்துவந்த குழப்பமும், சஞ்சலமும் குறைந்து தெளிவு பிறக்கும்.
💜 மேலே கூறப்பட்டுள்ள அனைத்து சுப மற்றும் அசுப பலன்கள் யாவும் அவரவர்களுக்கு நடைபெறுகின்ற தசாபுத்திக்கேற்ப கிடைக்கும். சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் திருமணம் யோகம் வந்துருச்சி. இந்த காலகட்டத்தில் திருமணம் செய்தால், அது மிகவும் சிறப்பாக அமையும். ஆனால், சிம்மம் ராசிகாரர்களுக்கு பொருத்தமான வரன் அமையவில்லை என்றால், என்ன செய்வது? அதற்கு ஒரு சிறந்த வழி, நித்ரா மணமாலையில் பதிவு செய்வது. நித்ரா மணமாலை, தமிழகத்தின் முன்னணி திருமண சேவை மையமாகும். இங்கு, இலட்சக்கணக்கான வரன்கள் உள்ளன. உங்கள் விருப்பப்படி, பொருத்தமான வரனை எளிதில் தேர்ந்தெடுக்கலாம். நித்ரா மணமாலையில் பதிவு செய்வது மிகவும் எளிது. இணையதளம் அல்லது மொபைல் செயலியைப் பயன்படுத்தி இலவசமாகப் பதிவு செய்யலாம்.!!