சிம்மம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024
இதுவரை சிம்ம ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.
குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து, ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான ராசி ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக துலாம் ராசியான சகோதர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான புத்திர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.
குருபார்வை:
விடாமுயற்சி மற்றும் சாதனைகள் பல செய்யும் சிம்ம ராசி அன்பர்களே!! குரு பாக்கிய ஸ்தானத்தில் நிற்பதால் மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். எதிலும் தற்பெருமை இன்றி செயல்படவும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். எண்ணிய பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும்.
பலன்கள்:
குரு ஐந்தாம் பார்வையாக ஜென்ம ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் நினைத்த சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும்.
குரு ஏழாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் செய்யும் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். சகோதரர் வழியில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பம் பற்றிய புரிதல் மேம்படும். வித்தியாசமான சில அணுகுமுறைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
குரு ஒன்பதாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும்.
பொருளாதாரம்:
பொருளாதாரத்தில் மேன்மையான நிலைகள் உண்டாகும். புதிய வகை காதணிகளை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். பழைய இழப்புகளை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். மனதளவில் இருந்துவந்த சில குழப்பங்கள் விலகி தெளிவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
பெண்களுக்கு:
வாழ்க்கைத் துணைவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றத்தை அடைவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.
மாணவர்களுக்கு:
மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபாடு ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். ஊதிய உயர்வு சார்ந்த முயற்சிகள் கைகூடும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான சில விஷயங்களால் விரயங்கள் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு:
கூட்டாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வியாபாரங்களில் லாபம் ஏற்படும். நுணுக்கமான சிந்தனைகளின் மூலம் போட்டிகளை வெற்றிக் கொள்வீர்கள். வேலையாட்களின் ஆதரவுகள் மேம்படும். நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த இழுபறியான நிலைகள் மறையும்.
கலைஞர்களுக்கு:
கலை சார்ந்த துறைகளில் ஏற்படும் விமர்சனங்களை சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அரசு வழியில் நன்மைகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில திடீர் மாற்றங்களும், வாய்ப்புகளும் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு:
அரசியல்வாதிகளுக்கு வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பாராத கட்சி நிமிர்த்தமான சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் மறைமுக வருவாயும், ஆதாயமும் கிடைக்கும். மேடைப் பேச்சுக்களில் தகுந்த ஆவணங்களை கொண்டு உரையாடுவது நல்லது.
நன்மைகள்:
பாக்கிய ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் மனதில் புதிய தெளிவும், செயல்களில் புதிய உத்வேகமும் உண்டாகும்.
கவனம்:
பாக்கிய ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் எதிலும் தற்பெருமை இன்றியும், மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தும் செயல்படவும்.
வழிபாடு:
குலதெய்வத்தை வழிபாடு செய்து வருவதன் மூலம் நினைத்ததை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். மகாலட்சுமியை வழிபாடு செய்து வர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும். குரு பலன் கூடினால் திருமண வரன்கள் தேடி வரும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே! சிம்ம ராசி அன்பர்களே, உங்களுக்கும் குருபலன் கூடிவிட்டது. தேடி வரும் வரன்களும் சிறப்பான வரன்களாக இருக்க நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள். திருமண வைபோகமும் அமோகமாக நடைபெறும்.