சிம்மம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2023-2025
💕 லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும், 7ல் ராகு/கேது, 2ல் ராகு/கேது, 8ல் ராகு/கேது, 5ல் ராகு/கேது இருந்தாலும் தோஷம் தரும். இதனையே சர்ப்ப தோஷம் எனப்படுகிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 சிம்மம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை அளிக்கப் போகிறது என்பதனைப் பற்றி இப்பதிவில் காணலாம். சிம்ம ராசியில் பிறந்த நீங்கள், உங்கள் ராசிக்கேற்ற வரன்களை காண நமது நித்ரா மணமாலையில் வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் ராசிக்கேற்றவரோடு இணையுங்கள்!!
ராகு-கேது பார்வை:
💕 வேகமும், நிர்வாகத் திறமையும் கொண்டிருக்கக்கூடிய சிம்ம ராசி அன்பர்களே..!
வரும் ஒன்றரை வருடங்கள் அதிர்ஷ்டத்திற்கு அதிபதியான ராகு பகவான் சிம்ம ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்திலும் அறிவை தரக்கூடிய கேது இரண்டாம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.💕 ராசியின் எட்டாவது வீட்டில் ராகு அமர்ந்திருப்பது தன்னைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றிய புரிதலை அளிக்கிறது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்ட சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். தந்தை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தம்பதிகளுக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. பொன், பொருள் சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களிடம் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். வாகனப் பயணத்தில் மித வேகம் நன்று. பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வெளிநாடு பயணம் சார்ந்த ஆசைகள் நிறைவேறும்.
💕 ராசியின் இரண்டாம் வீட்டில் கேது நுழைவதால் மனதில் தயக்க உணர்வுகள் குறையும். சாதுரியமான பேச்சால் காரியசித்தி உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. போட்டி, பொறாமைகள் குறையும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். வெளிப்படையான பேச்சுக்களில் கவனம் வேண்டும். உணவு விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். நண்பர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
உடல் ஆரோக்கியம்:
💕 தந்தையின் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். பற்கள் தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். பழைய சிந்தனைகளின் மூலம் தூக்கமின்மை, மன உளைச்சல் வந்துபோகும். நீண்ட நேரம் கண் விழிப்பதைத் தவிர்க்கவும். அலைச்சல் மற்றும் பதற்றம் அதிகரிக்கும்.
பொருளாதாரம்:
💕 தடைபட்டு வந்த வரவுகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் மேன்மை உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பங்கு வர்த்தக பணிகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். வாகனம் வாங்கும் வாய்ப்புகள் சாதகமாகும்.
உத்தியோகஸ்தர்கள்:
💕 உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களுக்கு கருத்துக்கள் கூறுவதைத் தவிர்க்கவும். கணினித் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை மாற்ற முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். பொறுப்புகளும், உழைப்பும் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். அரசு சார்ந்த பணிகளில் விவேகத்துடன் இருக்கவும்.
வியாபாரிகள்:
💕 கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்புகளால் லாபம் உண்டாகும். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வழக்கு சார்ந்த செயல்களில் கவனத்துடன் செயல்படவும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கமிஷன் வகையில் முன்னேற்றம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகவும். வேலையாட்களின் ஆதரவு மேம்படும். சந்தை நிலவரத்தை அறிந்து செயல்படுவது முக்கியம்.
அரசியல்வாதிகள்:
💕 அரசியல்வாதிகளுக்கு பொறுப்பும், விழிப்புணர்வும் வேண்டிய காலம். வெளிவட்டார தொடர்புகளால் மாற்றமான அனுபவம் கிடைக்கும். மறைமுக வருமானம் மேம்படும், கட்சி சம்பந்தமான உயர் அதிகாரிகளிடம் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தொண்டர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள்.
கலைஞர்கள்:
💕 கலைஞர்களுக்கு வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். கலைத் துறைகளில் முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். இசை மற்றும் நடனத் துறைகளில் எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.
பெண்கள்:
💕 குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். பயணத்தடைகள் நீங்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். சொத்து பிரச்சனைகளில் சிந்தித்துச் செயல்படவும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வு உண்டாகும். மகளுக்கு எதிர்பார்த்த வேலைவாய்ப்புகள் சாதகமாகும்.
மாணவர்கள்:
💕 மாணவர்கள் புதிய நபர்களிடம் கவனத்துடன் இருக்கவும். அடிப்படையான விஷயங்களில் தெளிவுடன் இருப்பது நன்மதிப்பைப் பெற உதவும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற எண்ணங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒன்றிணைந்து இருக்கவும். வாகனங்களில் செல்லும் போது நிதானம் வேண்டும்.
நன்மைகள்:
💕 ராகு கேது சஞ்சாரம் நடந்து கொண்டிருப்பதால், எதிர்பாராத உதவிகள் மாறக்கூடிய வாய்ப்புகளைத் தரும்.
தீமைகள்:
💕 நடைபெறவுள்ள ராகு கேது பெயர்ச்சியால் எதிலும் நிதானத்துடனும் பேராசையுடனும் செயல்படவும்.
வழிபாடு:
💕 வராகி அம்மனை வழிபடுவதால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
💕 ராகு காலங்களில் துர்க்கை தேவியை வழிபடுவதால் மனத் தெளிவு உண்டாகும்.
💕 மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும். இந்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். சிம்ம ராசி அன்பர்களே!! உங்கள் ராசிக்கேற்ற துணையைக் காண நமது நித்ரா மணமாலையில் இன்றே வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் வாழ்வைப் பிரகாசமாக்குங்கள்!!