சஷ்டி திதியில் என்ன செய்யலாம்?
🙇 சஷ்டி திதி முருகப்பெருமானுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. எனவே, அன்றைய தினம் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. சஷ்டி திதியில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டால், குழந்தைப்பேறு, வேலை, வியாபாரம் போன்ற விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இந்நன்னாளில் விரமிருப்பது, அவர்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணை அமையும் என்பது உண்மை. நாம் இந்தப் பதிவில் சஷ்டி திதியில் என்னென்ன செயல்களைச் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம். திருமணத்திற்காக காத்துக் கொண்டிருப்பவரா நீங்கள்? வரன்கள் வந்தாலும் உங்களுக்குப் பொருந்துவதில்லையா? இனிமே! அந்தக் கவலையே வேண்டாம். நித்ரா மேட்ரிமோனியில் உங்கள் ஃப்ரொபைல்-ஆ ரெஜிஸ்டர் பண்ணுங்க! அடுத்த சுப முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை பண்ணுங்க!!சஷ்டி திதி என்றால் என்ன?
🙇 சஷ்டி என்றாலே ஆறு. அதாவது, ஆறுமுகத்தினைக் கொண்ட முருகப்பெருமான் என்பது தான் இதன் பொருள். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாளிலிருந்து வரும் 6-வது நாள் சஷ்டி திதி ஆகும். அமாவாசைக்கு அடுத்ததாக வரும் சஷ்டியை சுக்கில பட்ச சஷ்டி என்றும், பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சஷ்டியை கிருஷ்ண பட்ச சஷ்டி என்றும் கூறப்படுகிறது.🙇 முருகனுக்கு உகந்த விரதங்கள் என்று 3 விரதங்கள் பிரதானமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. வார விரதம், நட்சத்திர விரதம், திதி விரதம் ஆகும். இதில், வார விரதமென்பது செவ்வாய்க்கிழமைகளில் அனுஷ்டிப்பது, நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் அனுஷ்டிப்பது மற்றும் திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்படாகும்.
🙇 ஒருவருக்கு திருமணம் இல்லாமல் வாழ்க்கை முழுமையடையாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறுவது தவறு. சஷ்டி விரதம் நாட்களில் யாராக இருந்தாலும் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொண்டு அனைத்து சிறப்பையும் பெற முடியும்.
சஷ்டி திதி எந்தச் செயல்களுக்கு உகந்தது?
🙇 புதிய வேலைக்கு சேருதல், வீடு மற்றும் வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய சஷ்டி திதி உகந்த நாளாகும்.🙇 சஷ்டி விரதத்தின் போது முருகப் பெருமானுக்குரிய மந்திரங்களான ஓம் சரவணபவாயநம, ஓம் சரவணபவ, ஓம் முருகா போன்ற மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நாள் முழுவதும் ஜெபித்து, மாலை வேளையில் பக்கத்திலுள்ள முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யலாம்.
🙇 வேலவனின் அருளால் மகப்பேறு, மணப்பேறு, ஆரோக்கியம், நல்வாழ்வு, ஆயுள், செல்வம், புகழ் என்று நீங்கள் வேண்டும் யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதியும், உற்சாகமும் வாழ்வில் என்றும் நிறையும்.
🙇 வாகனம் வாங்குதல், வீடு வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய உகந்த நாளாகும்.
🙇 மேலும், சஷ்டி திதியில் புதிய பதவிகளை ஏற்றல், வாஸ்து மற்றும் சிற்பம் சம்பந்தமான காரியங்களில் ஈடுபடுதல், ஆபரணங்கள் வாங்குதல், நகை தயாரித்தல், புதியவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
🙇 திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப காரியங்களை நடத்துதல். கல்வி, கலை போன்ற துறைகளில் புதிய முயற்சிகளை தொடங்குதல் ஆகியவை செய்யலாம்.
🙇 சஷ்டி திதியில் தானம், தர்மம் செய்வது மிகவும் புண்ணியமான செயலாக கருதப்படுகிறது.
சஷ்டி திதியில் செய்யக்கூடாத செயல்கள்:
🙇 சஷ்டி திதியில் மனதை அமைதியாக வைத்திருப்பது முக்கியம். கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகளைத் தவிர்க்க வேண்டும்.🙇 சஷ்டி திதியில் அசைவ உணவு உண்ணாமல் சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும்.
சஷ்டி திதியின் தெய்வங்கள்:
🙇 சஷ்டி வளர்பிறை திதிக்கு உகந்த தெய்வம் : முருகர், செவ்வாய்.🙇 சஷ்டி தேய்பிறை திதிக்கு உகந்த தெய்வம் : முருகர்.
முடிவுரை
🙇 அன்பார்ந்த பயனாளர்களே! இந்த சஷ்டி திதி பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். நல்ல காரியங்கள் செய்யவும், சுப காரியங்கள் செய்யவும் திதிகளை பார்க்கின்றனர். மேலே கூறப்பட்டுள்ளது போல சுப காரியங்களை சஷ்டி தினங்களில் தொடங்குங்கள். வரனுக்காக காத்திருப்பவரா நீங்கள்? உங்கள் கனவு வாழ்க்கையை நனவாக்க, உங்கள் வாழ்க்கைத் துணையை கண்டறிய இன்றே நித்ரா மேட்ரிமோனியில் பதிவு செய்யுங்கள்!