சனி பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027 சிம்ம ராசி
முன்னுரை
நேர்மையும் கன்னியமும் கொண்ட சிம்ம ராசி நண்பர்களே! 2025 மார்ச் 29ம் தேதி சனி கிரகம் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறது. ஆகவே சிம்ம ராசிக்கு எட்டாம் இடம் மீன ராசி என்பதால், இந்த பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. 2025-2027 ஆம் ஆண்டிற்கான சனி பெயர்ச்சி சிம்ம ராசியினருக்கு எவ்வாறு இருக்கும் என்று இந்த நித்ரா மேட்ரிமோனி பதிவில் விரிவாக பார்ப்போம்.
சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள்!
வியாபாரத்தில் சில புதிய மாற்றங்கள் உண்டாகும். செய்யும் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களின் உழைப்புக்கு ஏற்ற மதிப்பு சற்று தாமதமாக கிடைக்கும். மனைவி வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உங்களுக்கு சமந்தம் இல்லாத விசயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. முழங்கால் முட்டிகளில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். செயல்திறனில் ஒரு விதமான சோர்வும் ஆர்வமின்மையும் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் சற்று கவனம் வேண்டும். சிறு சிறு விஷயங்களாக இருந்தாலும் ஆழ்ந்த சிந்தித்து செயல்படுவீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்படும். வசதி வாய்ப்புகளில் மாற்றம் உண்டாகும்.
குடும்பம் மற்றும் பெண்கள்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் பயனற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ளவது நல்லது. பூர்விக சொத்து விவாகாரத்தில் சில தாமதங்கள் ஏற்படும். குழந்தைகள் இடத்தில் பக்குவமாகவும் அரவணைத்து செல்வது நன்மை தரும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. பெண்கள் சுய தொழில் தொடங்குவது போன்ற விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப பொருளாதாரம் குறித்த விசயங்களில் ரகசியம் காக்கவும்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு மனதில் புதுவிதமான தேடல்கள் உருவாகும். அடிப்படை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சோர்வு, மறதி போன்றவை ஏற்பட்டு மறையும். விளையாட்டுத் திறமைகளுக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும் என்றாலும், அரசின் உதவிகள் சில சமயங்களில் தாமதமாகலாம்.
உத்தியோகஸ்தர்கள்
பணிபுரியும் இடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். பணி மாற்றம் சார்ந்த எண்ணங்களும் அதற்கான முயற்சிகளும் இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் இடத்தில் அளவுடன் இருப்பது நல்லது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளும் பதவி உயர்வுக்கான சாதகமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களிடம் தனிப்பட்ட விஷயங்களில் கருத்துக்கள் கூறுவதை தவிர்ப்பது நல்லது.
வியாபாரிகள்
வியாபாரிகள் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். செய்யும் தொழிலில் புதிய திட்டங்களும் ஆர்வங்களும் உருவாகும். எதிர்பாராத சில வெளியூர் பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். பூர்விக தொழில் அதாவது தந்தை வழி தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உணவு தொழில்களில் இருப்பவர்கள் தரமான பொருட்களை பயன்படுத்துவது வாடிக்கையாளர்களின் வரவினை மேம்படுத்தும்.
கலைஞர்கள்
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முயற்சிகளில் இருந்து வந்த மறைமுக தடைகள் விலகி வெற்றி கொள்வீர்கள். திறமைக்கு உண்டான மதிப்புகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்களிடத்தில் இருந்து வந்த வேறுபாடுகள் குறைந்து அரசு வகையில் மகிழ்ச்சியான செய்திகள் உங்களை தேடி வரும்.
அரசியல்வாதிகள்
சமூக பணிகளில் இருப்பவர்கள் எதிலும் பொறுமையுடனும் அமைதியுடனும் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் தொடர்பான தொந்தரவுகள் ஓரளவு குறையும். கட்சி நிமிர்த்தமான மூத்த தலைவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நன்மதிப்பினை பெற்று தரும். தொண்டர்கள் இடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும்.
நன்மைகள்
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, உறவு இனிமையாகும். உங்களது பலம் மற்றும் பலவீனங்களைப் பற்றி நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனை அமைவதில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும்.
கவனம்
சிம்மராசி அன்பர்களே, தொழில் சார்ந்த விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது நல்லது. தன வரவுகளில் சற்று ஏற்ற இறக்கமான சூழல்கள் ஏற்படுவதால் கடன் சார்ந்த விஷயங்களில் தகுந்த ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பலவிதமான யோசனைகளால் மனதளவில் ஒரு விதமான தடுமாற்றங்கள் உண்டாகும்.
வழிபாடு
சிவபெருமானை சனிக்கிழமை தோறும் வழிபட்டு வர இன்னல்கள் ஓரளவு குறையும்.
முடிவுரை
நேர்மையின் வடிவமாக திகழும் சிம்ம ராசியினரே உங்களுக்கான 2025-2027 சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் அஷ்டம சனி காலகட்டத்தில் எவ்வாறு கவனமாக இருக்கவேண்டும் என்பது குறித்தும் தெளிவாக ஆறிந்திருப்பீர்கள் இதனை மனதில் வைத்து செயல்பட்டு வாழ்க்கையில் மென்மேலும் வெற்றியை அடைய நித்ரா மேட்ரிமோனியின் வாழ்த்துக்கள்! மேலும் உங்களுக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ ஏற்ற வாழ்க்கை துணையை தேடுகிறீர்கள் என்றால் எங்கள் வலைத்தளத்தில் உடனே பதிவு செய்யுங்கள்.
