சனி பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027 மகர ராசி
முன்னுரை
பகட்டு வாழ்க்கையை பெரிதும் விரும்பாத மகரம் ராசி நண்பர்களே. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சனி பெயர்ச்சி நடைபெறுகிறது. நீங்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறீர்கள் என்பது உங்களுக்கு ஆறுதலான விஷயம். இந்த சனி பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு பலன் கொடுக்கும் என்று இந்த நித்ரா மேட்ரிமோனி பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
மகரம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்
மனதளவில் புதுவிதமான கற்பனை சிந்தனைகள் அதிகரிக்கும். பிரிந்த பழைய நண்பர்களின் சந்திப்பு உருவாகும். குழந்தைகள் வழியில் சில மகிழ்ச்சியான செய்திகளும் சுப விரயங்களும் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் குறித்த பயணங்களில் ஏற்பட்டு இருந்த தடை நீங்கும். உயர் கல்வி குறித்த ஆலோசனைகளால் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். நீண்ட நாட்களாக வெளிநாட்டு பயணங்களில் இருந்த தாமதங்கள் குறையும். மனதில் இருக்கும் தனிப்பட்ட ரகசியங்களை பகிர்வதை தவிர்ப்பது நன்மை தரும். பணம் புழக்கம் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்பம் மற்றும் பெண்கள்
இந்த சனி பெயர்ச்சி காலத்தில் குடும்பத்தில் சுப காரியம் தொடர்பான முயற்சிகளும் எண்ணங்களும் கைகூடிம். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். மனதை உருத்திக் கொண்டு இருந்த சில பிரச்சனைகள் விலகி செல்லும். தொழில்நுட்ப துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை மற்றும் மந்தநிலை குறைந்து சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு புதிய நம்பிக்கையை உருவாக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பதற்கான உதவிகள் கிடைக்கும். மேலும் அரசு வழியில் ஏதேனும் உதவிகள் எதிர்பார்த்து இருந்தால் கிடைக்க பெறுவீர்கள். உயர்கல்வி குறித்த சில விடயங்கள் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள்
உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதியம் தடையின்றி கிடைக்கும். குடும்பத்தை விட்டு விலகி சென்றவர்கள் திரும்பி வருவதற்கான சூழல்கள் தானாக உருவாகும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் எதிர்பார்த்த விதத்தில் கைகூடும்.
வியாபாரிகள்
விளம்பர யுக்திகள் மூலம் நிலுவையில் உள்ள சரகுகளை விற்று லாபத்தை பார்ப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கூடுதல் கவனம் வேண்டும். கூட்டாளிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பதிப்பகம், ஹோட்டல், மர வகை போன்ற வியாபாரிகளுக்கு ஆதாயம் ஏற்படும். விவசாய பணிகளில் உள்ள மகர ராசியினரே முன்னேற்றமான சூழல் ஏற்படும் கால்நடைகள் மூலம் லாபங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
கலைஞர்கள்
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் சாதகமாக அமையும். மேலும் தகுந்த பாராட்டுகளையும் பெறுவீர்கள். சிந்தனைகளில் இருந்த தடுமாற்றங்கள் விலகி தெளிவு பிறக்கும். நண்பர்கள் இடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும்.
அரசியல்வாதிகள்
சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு செல்வாக்குகள் உயரும். சில நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். போட்டி சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல் படுவது நல்லது. பத்திரிக்கை நிபுணர்கள் இடத்தில் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்துவது உங்கள் மீதுதான் நம்பிக்கைகளை மேம்படுத்தும்.
நன்மைகள்
மகர ராசி அன்பர்களே உங்கள் வாழ்க்கையில் இதுவரை பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடியான சூழல்கள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த மத்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் குறித்த தயக்கமும் ஒரு விதமான புரிதல் இன்மையும் மறைந்து தெளிவுகள் பிறக்கும்.
கவனம்
மகர ராசி அன்பர்களே, உன்னிப்பான சில விஷயங்களை புரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களில் எதிர்பார்ப்புகள் தாமதமாகி நிறைவேறும்.
வழிபாடு
எதிர்பார்ப்புகள் நிறைவேற திருநள்ளாறு சென்று சனி தேவரை வழிபடலாம்.
முடிவுரை
மகர ராசிக்காரர்களே, சனி பெயர்ச்சி காலத்திற்கு பின் உங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை இந்த பதிவின் மூலம் தெளிவாகவும் விளக்கமாகவும் அரித்திருப்பீர்கள். 2025-2027 சனி பெயர்ச்சி பலன்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் மனநிறைவை கொண்டுவரட்டும். மேலும் உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற துணையைத் தேர்வு செய்ய, நித்ரா மேட்ரிமோனி இணையதளத்தை இப்போதே அணுகுங்கள்!!!
