சனி பெயர்ச்சி பலன்கள் 2025 - 2027 கடக ராசி
முன்னுரை
கடக ராசி அன்பர்களே! 2025 மார்ச் 29 அன்று சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாகி, கடக ராசிக்காரர்களின் வாழ்வில் புதிய திருப்பத்தை ஏற்படுத்த உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அஷ்டம சனியால் சிரமப்பட்ட கடக ராசிக்காரர்கள், இனி மகிழ்ச்சியான நாட்களை எதிர்நோக்கலாம். தொழில், குடும்பம், உறவுகள் என வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நித்ரா மேட்ரிமோனி பதிவில், கடக ராசிக்காரர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்களை விரிவாகப் பார்ப்போம்.
கடக ராசி சனி பெயர்ச்சி பலன்கள்
புதிய ஒப்பந்தங்களில் இருந்து வந்த தாமதங்கள் விலகும். வெளிநாட்டு விஷயங்களில் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். சேவைத் துறையில் உள்ளவர்கள் எதிர்பார்த்த வாய்ப்புகளை அடைய வாய்ப்பு உண்டு. பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். எதிர்பாராத வருமானங்கள் கிடைக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். இடப்பெயர்ச்சி முயற்சிகளில் இருந்து வந்த தாமதங்கள் மறையும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில காரியங்கள் சாதகமாக முடியும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பணி சார்ந்த சுப செய்திகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். தடைப்பட்ட சில வரவுகள் மீண்டும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.
குடும்பம் மற்றும் பெண்கள்
குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து அமைதி நிலவும். உறவினர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உங்கள் பேச்சுக்கேற்ப மதிப்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கமும் புரிதலும் அதிகரிக்கும். குழந்தைகளுடன் மனம் திறந்து பேசுவதால் ஒத்துழைப்பு மேம்படும். பொருளாதார நிலை படிப்படியாக மேம்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். புதிய வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.
மாணவர்கள்
தடைப்பட்ட கல்வியை மீண்டும் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். அரசின் உதவிகளைப் பெற வாய்ப்பு உண்டு. விளையாட்டுப் போட்டிகளில் அனுபவங்களும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். கல்வியில் முக்கிய முடிவுகளை எடுக்கச் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
பணியிடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களை பற்றிய கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். நிதி மற்றும் கல்வி தொடர்பான பணிகளில் கவனமாக செயல்பட வேண்டும். அரசு பணி முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.
வியாபாரிகள்
வியாபாரத்தில் சில முக்கிய திருப்பங்கள் ஏற்படும். புதிய தொழில் எண்ணங்கள் வெற்றி பெறும். அரசின் உதவிகள் கிடைக்கும். விவசாயத்தில் முன்னேற்றம் காணப்படும்; பாசன தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வெளிநாட்டு வணிகத்தில் சாதகமான சூழல் உருவாகும். வர்த்தக முதலீடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
கலைஞர்கள்
கலைத் துறையினர் சூழ்நிலையை புரிந்து செயல்பட வேண்டும். அணுகுமுறைகளில் மாற்றங்கள் நிகழும். கற்பனைத் துறைகளில் கவனமாக செயல்படுவது முன்னேற்றத்திற்கும் புதிய வாய்ப்புகளுக்கும் வழிவகுக்கும். எதிர்காலம் தொடர்பான கவலைகள் குறையும்.
அரசியல்வாதிகள்
சமூகப் பணிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகள் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். வருமானத்தில் ஏற்றத் தாழ்வுகள் காணப்படும். தொண்டர்களுடன் புரிதலின் அடிப்படையில் செயல்பட வேண்டும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை நிகழும். நேர்மையான வருமானம் நல்ல பெயரை பெற்றுத்தரும்.
நன்மைகள்
கடக ராசி அன்பர்களுக்கு சில அனுபவங்கள் மூலம் மனதளவில் புதிய புரிதல்களும் பக்குவங்களும் பிறக்கும். தன வரவுகளில் இருந்த ஏற்ற இறக்கங்கள் குறையும். பூர்வீக தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
கவனம்
கடக ராசி அன்பர்கள் சேமிப்பு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து கருத்துக்களை பகிர்வது நன்மை தரும்.
வழிபாடு
வியாழக்கிழமை தோறும் தட்சினாமூர்த்தியை வழிபாடு செய்து வர ஆதரவு அதிகரிக்கும்.
முடிவுரை
கடக ராசிக்காரர்களே, சனி பெயர்ச்சி காலத்தில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் எளிதாக சமாளிக்க, நல்ல ஆலோசனைகள் மற்றும் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். 2025-2027 சனி பெயர்ச்சி பலன்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் மனநிறைவை கொண்டுவரட்டும். மேலும் உங்கள் வாழ்வில் சரியான துணையைத் தேர்வு செய்ய, நித்ரா மேட்ரிமோனி இணையதளத்தை இப்போதே அணுகுங்கள்!
