Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.

ரிஷபம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025

💫 ராகு மற்றும் கேது ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என கூறப்படுகின்றன. ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக இருந்தாலும் அவை மிகவும் சக்திவாய்ந்தவை. இத்தகைய ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 ரிஷபம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை அளிக்கப் போகிறது என்பதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உங்களது ராசி ரிஷபமா? உங்கள் துணைக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்களா..?? உங்களுக்கானவர்களை காண நமது நித்ரா மணமாலையில் இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! உங்களுக்கான துணையோடு இணையுங்கள்!!

ராகு-கேது ஒரு பார்வை:

💫 எந்த வேளையிலும் மகிழ்ச்சியுடனும், புன்சிரிப்புடனும் காணப்படும் ரிஷப ராசி அன்பர்களே..! இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் ரிஷப ராசிக்கு லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் புத்திர ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஐந்தாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

💫 ராசிக்கு பதினொன்றாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். மனதளவில் உற்சாகம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்களும், சுபகாரியங்களும் கைகூடி வரும். உடலளவில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆடம்பரமான சிந்தனைகள் மற்றும் ஆர்வம் ஏற்படும். வெளிநாட்டுப் பயணம் மூலம் நன்மை உண்டாகும். தொலை தூர தகவல்கள் சாதகமாக அமையும். வீடு, மனை சம்பந்தப்பட்ட செயல்களில் இருந்துவந்த மந்த நிலை மாறும்.

💫 ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எந்த ஒரு செயலையும் ஒன்றுக்கு இரண்டு முறை நன்கு சிந்தித்துச் செயல்படுத்தவும். சாஸ்திரம் மற்றும் சம்பிரதாயங்களில் ஈடுபாடு ஏற்படும். மனதளவில் இனம்புரியாத சில கற்பனைகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் அமையும். தனம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். வாகன பயணங்களின் மூலம் அலைச்சல்கள் மேம்படும். விவசாயப் பணிகளில் மத்திமமான வரவுகள் உண்டாகும். எதிலும் பற்றின்றி செயல்படுவீர்கள். விரத்தி மனப்பான்மையைக் குறைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணைவரிடத்தில் மனம் விட்டுப் பேசுவதால் தெளிவும், புரிதலும் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்:

💫 உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். பயனற்ற மருத்துவச் செலவுகள் விலகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

பொருளாதாரம்:

💫 பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடி வரும். பூர்வீக சொத்துக்களில் சற்று நிதானத்துடன் செயல்படவும்.

உத்தியோகஸ்தர்கள்:

💫 உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நன்மை தரும். வேலை வாய்ப்புகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வங்கி சார்ந்த துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். நீதித்துறை பிரிவுகளில் மேன்மை ஏற்படும்.

வியாபாரிகள்:

💫 வியாபாரத்தில் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய முடிவுகளைச் செயல்படுத்துவதில் ஆலோசனைகள் பெறுவது நல்லது. பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். அபிவிருத்திக்கான கடன் உதவிகள் சாதகமாகும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். அயல்நாட்டுப் பொருட்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபார சரிவுகளை ஈடுகட்டுவதற்கான சூழல் அமையும்.

அரசியல்வாதிகள்:

💫 அரசியல்வாதிகளுக்கு புதிய முடிவு எடுப்பதில் கவனம் வேண்டும். கட்சி பணிகளில் தீர ஆலோசித்துச் செயல்படவும். சிறு சிறு பணிகளுக்கும் அலைச்சல்கள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும். தனவரவு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பத்திரிகைத் துறையில் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். எதிர்பாலின மக்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும்.

கலைஞர்கள்:

💫 கலைத்துறையினருக்குச் சாதகமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுகபோக சிந்தனைகள் மேம்படும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரசிகர்களின் தன்மைகளைப் புரிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடி வரும். பொருளாதாரத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். சேமிப்புகள் அதிகரிக்கும்.

பெண்கள்:

💫 பெண்கள் எதிலும் சிக்கனமாகச் செயல்படுவீர்கள். வாக்குறுதிகள் அளிப்பதில் சூழ்நிலையறிந்து செயல்படவும். பாகப்பிரிவினை பிரச்சனைகள் சாதகமாக முடியும். எதிர்காலம் தொடர்பான சில புரிதல்கள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளவும். மூத்த குழந்தைகளின் வழியில் இருந்துவந்த சங்கடங்கள் மறையும்.

மாணவர்கள்:

💫 உயர்கல்வி குறித்த தெளிவான ஆலோசனைகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வதற்கான சூழல் அமையும். மனதளவில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். போட்டிகளைச் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும்.

நன்மைகள்:

💫 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும்.

தீமைகள்:

💫 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானத்தோடு செயல்படவும்.

வழிபாடு:

💫 துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி பூஜித்து வர சகல தோஷங்களும் தீரும்.

💫 அரளி மலரை ஆஞ்சநேயருக்கு சாற்றி வழிபட சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். மனோதைரியம் அதிகரிக்கும்.

💫 மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும். இந்த ராகு-கேது பெயர்ச்சியின் பலன்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். ரிஷப ராசிக்காரரான உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா..? இனி வருத்தம் வேண்டாம். நமது நித்ரா மணமாலையில் இலவசமாக இன்றே வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் ஆத்ம துணையோடு இன்பமாக வாழுங்கள்!!

ragu ketu peyarchi 2023 to 2025


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.
Christian - Caste
By Profession
By City
By State
By Education
By Marital Status
By Dosham
Second Marriage By Caste
Divorcee By Caste
Divorcee By Location
Second Marriage By Location