பௌர்ணமி தேதிகள் 2024
💠 முந்தைய காலக்கட்டத்தில், எந்தவொரு நாள்காட்டியையும் பார்க்காமலே "இன்று அம்மாவாசை, இன்று பெளர்ணமி" என்று சொன்னவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைய காலத்தில் பௌர்ணமி நாளெல்லாம் நம் கவனத்திலேயே இல்லை என்பதுதான் உண்மை.
💠 பூமியில் இருந்து காணும் போது நிலவு முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும் நாளே பெளர்ணமி ஆகும். இதற்கு முழுநிலவு, முழுமதி என்றும் பெயர். வானியலின்படி, சூரியன் மற்றும் நிலவிற்கிடையே புவி வரும் நாளே முழுநிலவு அல்லது பௌர்ணமி நாள் ஆகும். அப்போது கதிரவனின் வெளிச்சம் நிலவின் முற்பக்கத்தின் மீது முழுமையாகப் பதிகிறது. ஆகவே, நிலவு ஒளிர்ந்து பூமியிலிருந்து காணும்போது வட்ட வடிவில் காட்சியளிக்கிறது. அப்போது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பின்பக்கம் இருளாக காணப்படும். இத்தைய நாளின் விரதம் இருப்பதும் கிரிவலம் செல்வதும் மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் கூறுவர். இத்தகைய மகத்துவம் வாய்ந்த பௌர்ணமி நாளானது 2024-ஆண்டில் எந்தெந்த தேதிகளில் வருகிறது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
💠 பெளர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலை மற்றும் திருச்செங்கோடு மலை போன்ற இடங்களில் கிரிவலம் சென்றால் நினைத்த காரியம் நடைபெறும் என்பது ஐதீகம். உங்களுக்கு வரன் அமைவதில் தடை, தாமதம் ஏற்படுகிறதா? சரியான திருமண வரன் அமையவில்லையா? இனி கவலை வேண்டாம்!! நமது நித்ரா மணமாலையில் வரன் பதிவு செய்து, கடவுளை மனதார வணங்கி கிரிவலம் சென்றால் சிவப் பெருமாளின் அருள் பெற்று உங்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள பெளர்ணமி நேரங்கள் வாக்கியப் பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டு பெளர்ணமி தேதிகள்
⭐பெளர்ணமி நாட்கள் - ஜனவரி 2024⭐
நாள் : ஜனவரி 25 - தை 11 - வியாழன்
ஆரம்பம் நேரம் : நேற்று (ஜனவரி 24) இரவு 10.44
முடியும் நேரம் : இன்று (ஜனவரி 25) இரவு 11.56
⭐பெளர்ணமி நாட்கள் - பிப்ரவரி 2024⭐
நாள் : பிப்ரவரி 24 - மாசி 12 - சனி
ஆரம்பம் நேரம் : நேற்று (பிப்ரவரி 23) மாலை 04.55
முடியும் நேரம் : இன்று (பிப்ரவரி 24) மாலை 06.51
⭐பெளர்ணமி நாட்கள் - மார்ச் 2024⭐
நாள் : மார்ச் 24 - பங்குனி 11 - ஞாயிறு
ஆரம்பம் நேரம் : இன்று (மார்ச் 24) காலை 11.17
முடியும் நேரம் : நாளை (மார்ச் 25) பிற்பகல் 01.16
⭐பெளர்ணமி நாட்கள் - ஏப்ரல் 2024⭐
நாள் : ஏப்ரல் 23 - சித்திரை 10 - செவ்வாய்
ஆரம்பம் நேரம் : இன்று (ஏப்ரல் 23) அதிகாலை 04.21
முடியும் நேரம் : நாளை (ஏப்ரல் 24) அதிகாலை 05.54
⭐பெளர்ணமி நாட்கள் - மே 2024⭐
நாள் : மே 23 - வைகாசி 10 - வியாழன்
ஆரம்பம் நேரம் : நேற்று (மே 22) இரவு 07.14
முடியும் நேரம் : இன்று (மே 23) இரவு 07.48
⭐பெளர்ணமி நாட்கள் - ஜூன் 2024⭐
நாள் : ஜூன் 21 - ஆனி 07 - வெள்ளி
ஆரம்பம் நேரம் : இன்று (ஜூன் 21) காலை 07.45
முடியும் நேரம் : நாளை (ஜூன் 22) காலை 07.19
⭐பெளர்ணமி நாட்கள் - ஜூலை 2024⭐
நாள் : ஜூலை 21 - ஆடி 05 - ஞாயிறு
ஆரம்பம் நேரம் : நேற்று (ஜூலை 20) மாலை 06.10
முடியும் நேரம் : இன்று (ஜூலை 21) மாலை 04.51
⭐பெளர்ணமி நாட்கள் - ஆகஸ்ட் 2024⭐
நாள் : ஆகஸ்ட் 19 - ஆவணி 03 - திங்கள்
ஆரம்பம் நேரம் : இன்று (ஆகஸ்ட் 19) அதிகாலை 03.07
முடியும் நேரம் : நாளை (ஆகஸ்ட் 20) அதிகாலை 01.09
⭐பெளர்ணமி நாட்கள் - செப்டம்பர் 2024⭐
நாள் : செப்டம்பர் 17 - புரட்டாசி 01 - செவ்வாய்
ஆரம்பம் நேரம் : இன்று (செப்டம்பர் 17) காலை 11.22
முடியும் நேரம் : நாளை (செப்டம்பர் 18) காலை 09.10
⭐பெளர்ணமி நாட்கள் - அக்டோபர் 2024⭐
நாள் : அக்டோபர் 17 - புரட்டாசி 31 - வியாழன்
ஆரம்பம் நேரம் : நேற்று (அக்டோபர் 16) இரவு 07.56
முடியும் நேரம் : இன்று (அக்டோபர் 17) மாலை 05.25
⭐பெளர்ணமி நாட்கள் - நவம்பர் 2024⭐
நாள் : நவம்பர் 15 - ஐப்பசி 29 - வெள்ளி
ஆரம்பம் நேரம் : இன்று (நவம்பர் 15) அதிகாலை 03.53
முடியும் நேரம் : நாளை (நவம்பர் 16) அதிகாலை 03.42
⭐பெளர்ணமி நாட்கள் - டிசம்பர் 2024⭐
நாள் : டிசம்பர் 15 - கார்த்திகை 30 - ஞாயிறு
ஆரம்பம் நேரம் : நேற்று (டிசம்பர் 14) மாலை 04.17
முடியும் நேரம் : இன்று (டிசம்பர் 15) மாலை 03.13
மேலே கொடுக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான பெளர்ணமி தேதிகள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். திருமணம் என்பது மகிழ்ச்சியின் ஆதாரமாகும். மகிழ்ச்சி நிறைந்த இந்த திருமணத்தை மேலே குறிப்பிட்டுள்ள பெளர்ணமி நாட்களில் உங்கள் இஷ்ட தெய்வத்திற்கு விரதம் இருந்து கிரிவலம் சென்று வந்தால் திருமணம் கைகூடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும். இது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வளமிக்க இந்த திருமணத்தை செய்ய நித்ரா மேட்ரிமோனியில் உடனே இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! உங்களுக்கேற்ற துணையோடு இணையுங்கள்!!