பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?
முன்னுரை:
💍 வணக்கம் நண்பர்களே, இன்று நாம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பார்க்கப் போகின்றோம். பொதுவாக பெண்கள் மெட்டி அணிவது தமிழர் கலாச்சாரம் ஆகும். இதனை அனைத்து திருமணங்களிலும் பார்த்திருப்போம். சில திருமணங்களில் ஆண்களும் மெட்டி அணிவார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக பெண்கள் மெட்டி அணிவதற்குப் பலவிதமான காரணங்கள் உள்ளன. உங்களுக்கோ அல்லது உங்கள் மகளுக்கோ திருமணம் செய்து அழகான மெட்டி அணிந்த கால்களோடு புகுந்த வீடு செல்ல நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! மேலும், இப்பதிப்பில் பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்? என்பதனைப் பற்றி தெளிவாகப் பார்ப்போம்.
மெட்டி அணிதல்:
💍 பொதுவாக, திருமணம் என்று வரும்போது பெண்களுக்கு முதலில் அணிகலன்களாகக் கொடுப்பது குங்குமம், தாலி, மெட்டி போன்றவைதான் தருகிறார்கள். இன்றுவரை அதைப் போற்றிப் பாதுகாத்தும் கடைப்பிடித்தும் வருகிறார்கள்.
பெண்கள் காலில் மெட்டி அணிவது ஏன்?
💍 ஒரு பெண் வயதுக்கு வந்து விட்டால், தடை என்ற கம்பியால் வளையம் செய்து மெட்டி அணியும் விரலில் போட்டுவிடுவார்கள். அதற்குக் காரணம், கருப்பையால் அவள் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அவளை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் போட்டுவிடுவார்கள். அவர்கள் அதை ஒரு வருடம் அல்லது மறுசடங்கு வரை போட்டுவிடுவார்கள்.
திருமணத்தில் மெட்டி எதற்காக போட வேண்டும்?
💍 திருமணத்தில், கணவன் பெண்ணின் பாதங்களைத் தொட்டு அம்மியின் மீது வைப்பது, தன் மனைவியின் கற்பு அந்த கல்லைப் போல உறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனை தரிசித்து மெட்டியை அணிந்து விடுவார்கள்.
💍 கல்யாணம் ஆகிவிட்டதா என்பதை அறிய இந்த மெட்டி அணிய வேண்டுமா? என்று கேட்டால் அது உண்மை காரணம் இல்லை. மெட்டிக்குள் நிறைய ரகசியங்கள் ஒளிந்திருக்கிறது.
💍 முக்கியமாக பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பும் பின்பும் நிறைய உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன, அதில் முக்கியமானது கருப்பை. நம் உடலில் தலை முதல் கால் வரை உள்ள அனைத்து நரம்புகளும் பாதங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது பலருக்குத் தெரியாது.
💍 மெட்டி அணியும் விரலில் ஒரு நரம்பு இருக்கும் அது கர்ப்பப்பைக்கு நேரடியாக செல்லக்கூடிய நரம்பு ஆகும். எனவே, இரும்பினால் அல்லது வெள்ளியினால் செய்த மெட்டியை அந்த விரலில் போடுவதினால் பெண்களுக்கு நன்மை கிடைக்கும்.
💍 மெட்டி அணிந்தபடி நடக்கும்போது, அந்த மெட்டியின் அதிர்வு கருப்பைக்குச் செல்லக்கூடிய நரம்பில் படுவதினால், அப்பெண்ணுக்கு உடல் ரீதியான எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.
💍 அதுமட்டுமின்றி ஒரு பெண் கர்ப்பமாக இருந்தால் தலைவலி, வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படும். பிறகு அவள் பாதத்தை தூக்கி கால் விரலை தடவினால் நல்ல உறக்கம் கிடைக்கும், நிம்மதியாக தூங்குவார்கள். எனவே, மெட்டி அணிவது பெண்களின் ஆரோக்கியத்திற்கு முற்றிலும் நன்மை பயக்கும்.
மெட்டியை எவ்வாறு அணிய வேண்டும்?
💍 எவ்வளவு தான் பணம் இருந்தாலும் தங்க மெட்டி அணியக் கூடாது.
💍 தற்போது பல்வேறு வடிவங்களில் மெட்டியானது விற்கப்படுகிறது. அதற்காக பிடிக்குமென்று அனைத்து விரல்களிலும் அணியக்கூடாது.
💍 தங்கள் குல வழக்கப்படி, எந்த மாதிரியான மெட்டி அணிய வேண்டுமோ, அதனை பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.
மெட்டியை எப்போது மாற்றலாம்?
💍 மெட்டி தேய்ந்திருந்தால், அதனை உடனடியாக மாற்றிவிட வேண்டும். கணவன்-மனைவி ஒற்றுமையானது மெட்டி தேய தேய குறையும் என்ற ஐதீகமும் உள்ளது.
💍 எனவே மெட்டி அணிபவர்கள் அதிக தேய்மானத்தில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும்.
முடிவுரை:
💍 இந்த அருமையான பதிவு உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகின்றோம். அம்மி மிதித்து மெட்டி அணிவது பெண்களின் வாழ்வில் ஒரு முக்கிய தருணம் ஆகும். உங்களுக்கான மணவாளன் நமது நித்ரா மேட்ரிமோனியில் காத்துக் கொண்டிருக்கிறார். எனவே, உடனே நமது நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக வரன் பதிவு செய்து, உங்களுக்கானவர்களோடு இணையுங்கள்!!