ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யலாமா?
முன்னுரை:
👫 ஒரே ராசியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால், பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. ஆனால், ஒரே ராசியில் வெவ்வேறு நட்சத்திரத்தில் திருமணம் புரியலாம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். உங்களின் ராசிக்கேற்ற துணையை காண நமது நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! இந்த பதிப்பில் திருமண பொருத்தம் என்றால் என்ன, எந்தெந்த நட்சத்திரங்கள் சேர்ந்தால் என்ன பலன்கள் என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.
திருமண பொருத்தம்:
👫 திருமணம் என்பது கணவன்-மனைவி இருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கை, குழந்தை பிறப்பு, நீண்ட ஆயுள், ஆரோக்கியம், பிரகாசமான எதிர்காலம் போன்றவை எவ்வாறு இருக்கும் என்பதனை தம்பதிகளின் ஜாதகத்தின்படி, ஜோதிடர்கள் பொதுவாக ஜாதகத்தில் அவர்களின் ராசி, நட்சத்திரம் மற்றும் கிரக நிலையைப் பொருத்து கணிக்கிறார்கள்.
ஒரே ராசி, ஒரே நட்சத்திரக்காரர்களுக்கு ஏன் திருமணம் செய்யக்கூடாது?
👫 இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதர்களின் வாழ்விலும் திருமணம் என்பது மிக முக்கியமான திருப்புமுனையாக அமைகிறது. திருமணத்தில் இணையும் மணமக்களின் வாழ்க்கை எண்ணமானது ஒற்றுமையாகவும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருக்க வேண்டும்.
👫 ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க விரும்பினால், முதலில் நாம் வலுவாக இருக்க வேண்டும். ஒரே ராசியில், ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால், இருவருக்கும் திசா புத்தி ஒரே மாதிரியாக இருக்கும். அதாவது வருமானம் என்றாலும் இரட்டிப்பாகும், செலவு என்றாலும் இரட்டிப்பாகும்.
👫 மேலும், ஏழரைச் சனி ஒரே வீட்டில் இருவருக்குமே ஒரே நேரத்தில் தொடங்கி ஒரே நேரத்தில் முடிகிறது. அந்த சமயங்களில் தம்பதியினருக்கு உண்டாகும் துன்பங்கள் என்றாலும் இரட்டிப்பாகும் இன்பங்கள் என்றாலும் இரட்டிப்பாகும்.
👫 கோச்சார கிரகங்களின் பாதிப்புகள் மற்றும் சாதகமற்ற சஞ்சாரம் காரணமாக ஒரே நட்சத்திரத்தில் ஒரே பாதத்தில் இருப்பவர்களுக்கு மன உளைச்சல் மற்றும் பணப் பிரச்சனைகள் ஏற்படும்.
👫 அதைக் கருத்தில் கொண்டு ஒரே ராசியில் ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் அவசியமில்லை என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.
👫 ஒரே லக்னத்தில் உள்ள ஒன்பது பாதங்களில், ஒன்று முதல்பாதமாகவும் மற்றொன்று கடைசி பாதமாகவும் இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு விதிவிலக்கு உண்டு.
👫 அதாவது, திருமணமான இருவர் ஒரே ராசியில் வெவ்வேறு நட்சத்திரங்களில் இருந்தால், ஒருவருக்கு ஒரு திசையும் மற்றவருக்கு வேறு திசையும் இருக்கும்.
👫 அதனால், தம்பதிகளில் ஒருவரின் விருப்பப்படி ஒரு துன்பம் ஏற்பட்டால், மற்றவர் அந்த துன்பத்தைப் போக்க ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்குவார்.
இணையக்கூடிய ஒரே நட்சத்திரங்கள்:
👫 மணமக்களுக்கு ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரமாக இருந்தால், திருமணம் செய்யலாம். இவை நல்ல பலனைத் தரும். தசா சந்திப்பு தோஷத்தை உண்டாக்காது.
👫 எனவே, ஒரே ராசியில் வெவ்வேறு நட்சத்திரத்தில் உள்ளவர்கள் திருமணம் செய்துக் கொள்ளலாம் என ஜாதகப்படி ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
முடிவுரை:
👫 மேலே குறிப்பிட்டுள்ள பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். இருவேறு மனங்கள் ஒன்றிணைந்து இரு உடல்கள் ஒரே உயிராக மாறுவதுதான் திருமணம். நீங்களும் இன்னும் ஒரே ராசியில் திருமணம் செய்யலாமா என்ற குழப்பத்தில் உள்ளீர்களா?? கவலையே வேண்டாம்!! எனவே, உங்கள் ராசியிலேயே வேறு நட்சத்திரத்தில் உள்ள வரன்களை காண நமது நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்!! உங்களின் வாழ்க்கை துணையோடு மகிழ்வோடு வாழுங்கள்!!