முகூர்த்த நாள் குறிக்கும் போது தவிர்க்க வேண்டியவை என்ன?
முன்னுரை
முகூர்த்தம் என்பது சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான நல்ல நேரத்தை தேர்ந்தெடுப்பது ஆகும். முகூர்த்தம் என்ற சொல் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது திருமணம். திருமணம் மட்டுமல்லாமல், வீடு கட்டுதல், புதிய தொழில் தொடங்குதல் போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கும் நாம் முகூர்த்தம் பார்க்கிறோம். இந்த முகூர்த்தம் என்பது நாம் எதிர்பார்க்கும் நல்ல பலன்களைத் தரும் ஒரு நேரம் என்று நம்புகிறோம். அத்தகைய முகூர்த்தத்தின் போது எந்த விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று இந்த நித்ரா மேட்ரிமோனி பதிவில் விளக்கமாக பார்ப்போம்.
முகூர்த்தம் குறிக்கும் போது தவிர்க்க வேண்டியவை
அசுப நாட்களை தவிர்த்தல்
கிரகணம் ஏற்படும் நாளிலும், அதற்கு முன், பின் ஏழு நாட்களிலும் எந்தவித சுப காரியங்களையும் செய்யக்கூடாது. நம் முன்னோர்கள் திருமணம், கிருஹப்பிரவேசம் போன்ற சுபகாரியங்களை கரிநாட்களில் செய்வதைத் தவிர்க்கும் வழக்கம் உண்டு. கரிநாள் என்பது தமிழ் மாதங்களில் சில குறிப்பிட்ட நாட்கள். இந்த நாட்களில் சூரியனின் தாக்கம் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே கரிநாட்களில் முகூர்த்தம் குறிப்பதை தவிர்ப்பது நல்லது.
அசுப நட்சத்திரங்களை தவிர்த்தல்
சுப நட்சத்திரங்களான அசுவினி, ரோகிணி, பூசம், ஹஸ்தம், அனுஷம், மூலம், திருவோணம், உத்திரட்டாதி மற்றும் ரேவதி போன்ற நச்சத்திரங்களில் திருமணம், கிரகப்பிரவேசம், சீமந்தம், முகூர்த்தம் குறித்தல், நிச்சயம்தர்த்தம், பெயர் சூட்டுதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தலாம். சில அசுப நட்சத்திரங்களில் சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.
அசுப திதிகளை தவிர்த்தல்
அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி போன்ற திதிகள் அசுப திதிகள் ஆகும். இந்த திதிகளில் முகூர்த்தம் குறிப்பதை தவிர்க்க வேண்டும்.
அசுப காலங்களை தவிர்த்தல்
ராகு காலம், எமகண்டம், குளிகை போன்ற அசுப காலங்களில் வழக்கமாக எந்தவித முகூர்த்தங்களும் நடப்பதில்லை. இந்த காலங்களில் அசுப சக்திகள் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், நாம் செய்யும் சுப காரியங்களில் தடை ஏற்படலாம். குளிகை காலத்தில் செய்யும் எந்த ஒரு செயலும் மீண்டும் மீண்டும் நிகழும் என்பதால், திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளை இந்த காலத்தில் நடத்தக்கூடாது என்று தவிர்க்கப்படுகிறது.
ஜாதக தோஷங்கள்
மணமகன் அல்லது மணமகளின் ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் இருந்தால், அதற்கு ஏற்ற பரிகாரங்களை செய்த பின்னரே முகூர்த்தம் குறிக்க வேண்டும்.
எண் கணித ஜோதிடம்
எண் கணித ஜோதிடம், ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு குறிப்பிட்ட அதிர்வலை மற்றும் ஆற்றல் இருப்பதாக நம்புகிறது. இந்த எண்கள் நம் வாழ்க்கையில் நேரும் நிகழ்வுகள், பண்புகள் மற்றும் எதிர்காலத்தை கணிக்க பயன்படுவதாக நம்பப்படுகிறது. திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளை நடத்தும் போது, எண் கணித ஜோதிடத்தில் எட்டு என்பது மோசமான எண்னாக கருதப்படுகிறது. இதனை தவிர்ப்பது நல்லது என்றும் நம்படுகிறது.
முடிவுரை
முகூர்த்தம் என்பது நம் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு. எனவே, முகூர்த்தத்தை குறிக்கும்போது மேற்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்வது மிகவும் முக்கியம்.
