மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா?
💝 ஜோதிடத்தில் அடிப்படையாக 9 கிரகங்களும், அவை அமைந்திருக்கும் நிலையைப் பொருத்து ராசி, லக்னம், நட்சத்திரங்கள் ஒரு மனிதன் பிறக்கும் போது அமையும். ஜோதிடத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில் 19-வது நட்சத்திரமாக வரக்கூடிய சர்வ உத்தமமான நட்சத்திரம் தான் மூலம் நட்சத்திரம் ஆகும். தனுசு ராசியில் வரக்கூடிய மூலம் நட்சத்திரத்திற்கு கேது பகவானே அதிபதி ஆவார். எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்கக்கூடிய மூலம் நட்சத்திரம் பரம்பரை பரம்பரையாய் 14 தலைமுறைக்கும் நீடிக்கும் என்று முன்னோர்கள் கூறுவர். நாம் இந்தப் பதிவில் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? என்பதை விரிவாகப் பார்க்கலாம். நீங்களும் இன்னும் வரன் பார்த்துக் கொண்டுள்ளீர்களா? சரியான வரனே அமையவில்லையா? கவலைய விடுங்க! நித்ரா மேட்ரிமோனியில் இப்பவே வரன் பதிவு பண்ணுங்க... கல்யாணத்தை முடியுங்க!!மூலம் நட்சத்திரம்:
💝 ராசிப்பட்டியலில் ஒன்பதாவதாக வருவது தனுசு ராசி ஆகும், ஒன்பது வீட்டில் முதல் நட்சத்திரமாக வரும் மூலம் நட்சத்திரம் பல்வேறு யோகங்களை வழங்கக்கூடியதாகும். இதனால் தந்தை வழியில் நல்ல ஆலோசனையும், பூர்வீக சொத்துக்கள், பரம்பரை பரம்பரையாகத் தொடரக்கூடிய ஆணி வேரைப் போன்றது தான் தனுசு ராசியின் மூலம் நட்சத்திரமாகும்.💝 நம்மில் பலபேர் மூலம் நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது என்றால் கவலை கொள்வார்கள் அதற்கு காரணம் என்றுவென்று பார்த்தால், மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாமனார் இருக்க கூடாது அல்லது அவருக்கு ஆகாது. இப்படி கருதுபவர்களுக்கு வரன் கிடைப்பது மிகவும் கஷ்டம் என்று கூறுவார்கள். ஆனால், மூலம் நட்சத்திரத்தில் ஒளிந்திருக்கும் ஆன்மீக உண்மையே வேறு, வாருங்கள் பார்க்கலாம்.
💝 மூலம் என்பது ஒரு பெண் நட்சத்திரம் ஆகும். இந்த மூல நட்சத்திரம் தனுசு ராசிக்கு உரியதாகும். மூலம் நட்சத்திரமானது வாயு புத்திரரான ஸ்ரீ ஆஞ்சநேயரின் அவதார நட்சத்திரம் ஆகும்.
பெண் மூலம் நிர்மூலமா?
💝 ஆண் மூலம் அரசாளும்! பெண் மூலம் நிர்மூலமா? என்ற பழமொழி நாம் அனைவரும் அறிந்த ஒன்றே! பெண் மூலம் நிர்மூலம் என்கின்ற பழமொழியை வழக்கம் போல் அனைவராலும் தவறாகப் புரிந்து கொண்டது தான். நிருத்தி திக்கிலிருக்கும் மூலப் பிரபுவை வணங்கிய பெண் நலம் பெறுவாள் என்பதே இப்பழமொழியின் உண்மையான பொருள். நிருத்தி திக்கு என்பது தென் மேற்குத் திசை, இது கன்னி மூலை என்றும் கூறப்படும். திருமணமாகாத கன்னிப் பெண்கள் கன்னி மூலையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கணபதியை வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றர்.செல்வம் பெருகும்:
💝 மூலம் நட்சத்திரம் நாளன்று திருவண்ணாமலையைக் கிரிவலம் வருவது சிறப்பாகும். மூலம் நட்சத்திரத்தில் நிறைவேற்றும் நற்காரியங்கள் பல மடங்காக விருத்தியாகும் தன்மை உடையவை. மூலம் நட்சத்திரத்தில் ஒரு தங்கக் காசு வாங்கினால் மூன்று காசு வாங்கும் வசதி வரும். மூலம் நட்சத்திரத்தில் தொடங்கும் வியாபாரம், தொழில் முயற்சிகள் வளர்ச்சி பெற்று சிறப்படையும். வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்களை மூலம் நட்சத்திரத்தன்று வாங்கினால், அது குறைவில்லாமல் இருக்கும் என்பது ஜோதிட ரீதியான உண்மை.சாதனை பெண்கள்:
💝 மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் தன் அனைத்து காரியத்திலும் சாதனைகள் புரிவர். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இல்லறம் மற்றும் ஆன்மீகத்திற்குரிய செயல்களை தவறாமல் முறையாக செய்வார்கள். இவர்கள் கம்பீரமான தோற்றத்தையும், தெய்வ பக்தியும் எந்தப் பிரச்சனைகளையும் தைரியத்துடன் எதிர் கொள்ளக் கூடிய நெஞ்சுரமும் கொண்டவர்கள். அன்னை சரஸ்வதியும் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் தான்.நிர்வாகத்திறமை:
💝 மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் சிறந்த நிர்வாக திறமை கொண்டவர்களாவும் இருப்பார்கள். குடும்ப நிர்வாகத்தை கவனித்து வந்த தனது கணவர் மற்றும் மாமனாருக்கு, தனது நல்ல ஆலோசனை கூறுவார்கள். அவள் கணவன் ஏற்றுகொள்ளும் தன்மையுடன் இருப்பார், ஆனால் அவளின் மாமனார் ஏற்றுக் கொள்ள மறுப்பவராக இருப்பார். இதற்கு காரணம் என்னவெனில் நேற்று வந்தவள் எனக்கு ஆலோசனை சொல்வதா? என்று நினைப்பார். இதனாலேயே மாமனாருக்கும், மருமகளுக்கும் அதிக சண்டை சச்சரவுகள் ஏற்படுவதால், ஜோதிடத்தில் மூலம் நட்சத்திர பெண்களால் மாமனார் இறந்து விடுவார்கள் அல்லது அவருக்கு ஆகாது என்று குறிப்பிடுகின்றனர். எனவே, மூலம் நட்சத்திரம் பெண்களால் அவளின் மாமனாருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்பதே இதன் உண்மை ஆகும்.மூலம் நட்சத்திர பெண்ணை திருமணம் செய்யலாமா?
💝 மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, அவரவரின் பிறந்த ஜாதக அமைப்புகள் சரியாக இருக்கும் பட்சத்தில் தாராளமாக திருமணம் செய்யலாம். தனுசு ராசியின் தன்மையே, வில் மற்றும் குதிரை அடையாளத்துடன் இருப்பதால், அதனை வீரம் மற்றும் விவேகத்துடன் ஒப்பிட்டு நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர். இதனால், மூலம் நட்சத்திரத்தில் பிறக்கும் பெண்கள் விவேகத்துடன் தன் ஒவ்வொரு செயலையும் எதிர்கொண்டு வெல்லும் தன்மை கொண்டவளாக இருப்பாள். மூலம் நட்சத்திரத்தில் இருக்கும் பெண்கள், எப்போதும் தைரியமாக இருப்பர். இதனை, அக்காலத்தில் இருந்த சிலர் மட்டம் தட்ட நினைத்து, தவறான தகவல்களைப் பரப்பியுள்ளனர். எனவே, மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களைத் தாராளமாக திருமணம் செய்யலாம்.திருமண பொருத்தம்:
💝 திருமணம் என்றாலே எல்லா நட்சத்திரத்திற்கும் பொருத்தம் பார்த்தே ஆக வேண்டும். ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஆண்-பெண் ஜாதகத்தை இணைக்கக் கூடாது என்பது ஜோதிட விதி என்றும் கூறுவர். ஆனால், மூலம் நட்சத்திரம் ஆண் - பெண் ஜாதகம் வந்தால் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. மூலம் நட்சத்திர பெண்ணுக்கு மூலம் நட்சத்திரம் ஆண் ஜாதகத்தை தாராளமாகச் சேர்க்கலாம் என்பது ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லும் விதியாகும். எனவே, மூலம் நட்சத்திரம் வரன் வந்தால் கவலையே படாதீர்கள் திருமணம் செய்யலாம்.முடிவுரை:
💝 அன்பார்ந்த பயனாளர்களே! இந்த மூலம் நட்சத்திரப் பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். திருமணம் தம்பதிகளுக்கு அன்பு மற்றும் நெருக்கத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 27 நட்சத்திரங்களில் அனைத்து நட்சத்திரங்களுமே சிறப்பு வாய்ந்தவைகள் தான். இதில் சிலருக்கு ஜாதகம் பொருந்தும், சிலருக்குப் பொருந்தாது. ஜாதகப் பொருத்தமில்லாதவர்களுக்கு நல்ல புரிந்து கொள்ளும் தன்மை இருக்கும். எனவே, மணமக்களின் விருப்பத்தைக் கேட்டு அவர்களுக்கு வாழ்க்கை அமைத்து கொடுப்பது சிறப்பாகும். உங்களுக்கோ அல்லது உங்களின் உடன் பிறந்தவர்களுக்கோ வரன் பாக்குறீங்களா? நம்பகமான தளம் அமையவில்லையா? இனிமே சிரமமே வேண்டாம், உடனே நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக பதிவு செய்யுங்கள்!! வாழ்க்கையை ஜம்முன்னு வாழ ஆரம்பியுங்க!!