Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.

மிதுனம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2023-2025

🎶 ராகு கனவுகளைப் பற்றி சொல்பவராகவும் கேது நம்மால் அவ்வளவு எளிதில் உணர முடியாத விஷயங்களை உணர்த்துபவராகவும் உள்ளனர். உடலுக்கும் மனதுக்கும் அப்பாற்பட்ட இயற்கை சக்திகளைப் பற்றிய அறிவை அளிப்பவர் கேது. நம்மில் வரும் சிந்தனைகளுக்கு ராகுவும், கேதுவும் தூண்டுகோலாகவும், துலங்குபவர்களாகவும் விளங்குகிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை அளிக்கப் போகிறது என்பதனைப் பற்றி இப்பதிவில் காணலாம். மிதுன ராசியில் பிறந்த உங்களுக்கு இன்னும் மணவாழ்க்கை அமையவில்லையா? இனி கவலையே வேண்டாம்! நமது நித்ரா மணமாலையில் உங்களுக்கு பொருத்தமான வரன்கள் காத்துக் கொண்டிருக்கின்றன..இன்றே இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! அடுத்த சுப முகூர்த்தத்திலேயே திருமணமாகி உங்கள் துணையோடு மகிழுங்கள்!!

ராகு-கேது ஒரு பார்வை:

🎶 கலகலப்பும், சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய விகடகவியான மிதுன ராசி அன்பர்களே..! இனி வரப்போகும் ஒன்றரை ஆண்டு காலமும் சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு மிதுன ராசிக்கு தொழில் ஸ்தானம் என்னும் பத்தாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது சுக ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய நான்காம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

🎶 ராசியின் 10 ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் திடீர் பயணங்கள் மூலம் அனுபவம் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மறைமுக எதிர்ப்புகளால் நினைத்த சில காரியங்கள் கைகூடுவதில் தாமதம் உண்டாகும். உறவுகளிடத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். எதிர்காலம் நிமிர்த்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிலும் சுயமாக சிந்தித்துச் செயல்படுவீர்கள். மனதளவில் இருந்த தடுமாற்றங்கள் விலகும். மூத்த உடன்பிறப்புகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.

🎶 ராசியின் நான்காம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் வீண் எண்ணங்களைத் தவிர்ப்பது நல்லது. பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். குழந்தைகளின் குணநலங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வும், மந்தநிலையும் ஏற்படும். சில பணிகளை மற்றவர்களை எதிர்பாராமல் நீங்களே மேற்கொள்வது நல்லது. நினைத்த சில பணிகளில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். மின்சாதன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். முக்கியமான ஆவணங்களில் கவனத்துடன் இருக்கவும். மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றை முறியடிக்கும் பக்குவம் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்:

🎶 உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். பயணங்களின் தன்மைகளை அறிந்து முடிவு செய்யவும். தாயின் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உணவு பழக்கங்களில் கவனம் வேண்டும். நேரம் கழித்து உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பேச்சுக்களைக் குறைத்துக் கொள்வது உறவுகளிடத்தில் நன்மதிப்பை உருவாக்கும்.

பொருளாதாரம்:

🎶 பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் தாமதம் உண்டாகும். திடீர் செலவுகளால் எதிர்பாராத நெருக்கடிகள் உண்டாகும். வருமானத்திற்கான புதிய முயற்சிகளில் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படவும்.

உத்தியோகஸ்தர்கள்:

🎶 எதிர்பாராத சில இடமாற்றத்திற்கான சூழல் அமையும். கிடைக்கும் வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் இடத்தில் ஆர்வமின்மை உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பொறுப்புகள் அதிகரித்தாலும் அதற்கான மதிப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வதால் பதவி உயர்வும் ஆதரவும் கிடைக்கும்.

வியாபாரிகள்:

🎶 தொழில் சார்ந்த விஷயங்களில் ஆர்வமும், வேகமும் அதிகரிக்கும். இருப்பினும் விவேகத்துடன் இருப்பது நல்லது. வியாபார அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேலோங்கும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். போட்டியாளர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். பங்குதாரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.

அரசியல்வாதிகள்:

🎶 அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது. மறைமுகமான வருவாய்கள் உண்டாகும். தொகுதி மக்களிடம் வாக்குறுதிகள் அளிப்பதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். நினைத்த சில பணிகள் ஈடேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும்.

கலைஞர்கள்:

🎶 கலைத்துறையில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். ஒவ்வொரு முறையும் புதிய முயற்சிகளை மேற்கொள்வது சாதகமான பலனைத் தரும். தனம் சார்ந்த செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய ஒப்பந்தப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். இலக்கிய பணிகளில் முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்திருந்த நீண்ட நாள் வாய்ப்புகள் தேடி வரும்.

பெண்கள்:

🎶 பெண்களின் குணநலன்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். வீடு மற்றும் அலுவலக மாற்றத்திற்கான சூழல் ஏற்படும். வயதில் மூத்தவர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் தாமதமாகக் கிடைக்கும். புத்திரர்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கான சூழல் அமையும்.

மாணவர்கள்:

மாணவர்களுக்கு உயர்கல்வியில் இருந்துவந்த போட்டிகள் மற்றும் ஆர்வமின்மை குறையும். எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்ப சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கணினித் துறைகளில் திறமைகள் வெளிப்படும். இயந்திரவியல் பிரிவுகளில் கவனம் வேண்டும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

நன்மைகள்:

🎶 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மனதளவில் புதுவிதமான சிந்தனைகளும், எதிர்காலம் தொடர்பான முடிவுகளும் பிறக்கும்.

தீமைகள்:

🎶 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வும், பயணங்களால் அனுபவமும் ஏற்படும்.

வழிபாடு:

🎶 திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியத்தில் இருந்த குழப்பங்கள், எண்ணங்கள் நீங்கும்.

🎶 பௌர்ணமி தோறும் குலதெய்வத்தை விளக்கேற்றி வழிபடுவதால் தொழில், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

🎶 மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும். இந்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றோம். மிதுன ராசி அன்பர்களே!! உங்கள் ராசிக்கேற்ற துணையைக் காண நமது நித்ரா மணமாலையில் வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் வாழ்வை ஒளிமயமாக்குங்கள்!!

ragu ketu peyarchi 2023 to 2025


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.