Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.

மேஷம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025

சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகுவும் கேதுவும் மற்ற கிரகங்களைப் போலல்லாமல் வக்கிரமான நிலையிலேயே ராசி மண்டலத்தை வலம் வரக்கூடியவர்கள். அத்தகைய ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 மேஷம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை அளிக்கப் போகிறது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மேஷ ராசியில் பிறந்தவர்களா நீங்கள்? உங்களுக்கு இன்னும் வரன் அமையவில்லையா? கவலை வேண்டாம்! நித்ரா மணமாலையில் இலவசமாக வரன் பதிவு பண்ணுங்க!! அப்பறம் பாருங்க... அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் தான்..!! நிச்சயமாக உங்களுடைய திருமண வாழ்க்கை இனிமையாக அமையும்.!!

ராகு-கேது பார்வை

💫 புதுமையான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் விரும்பப் படக்கூடிய மேஷ ராசி அன்பர்களே..! இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மேஷ ராசிக்கு போக ஸ்தானம் என்னும் பன்னிரண்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சத்ரு ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய ஆறாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

💫 ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். தெளிவு பிறக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் சாதகமான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். தடைபட்ட சில வரவுகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான, அனுகூலமான சூழல் அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடி வரும். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவதற்கான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். மற்றவர்களை எதிர்பார்த்திருக்காமல் நீங்களே செயல்படுவது நல்லது. வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.

💫 ராசிக்கு ஆறாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் பிரச்சனைகள் எதனால் உருவாகின்றது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள். சந்தேக உணர்வினால் பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். குழந்தைகளின் செயல்பாடுகளில் நல்ல மாற்றம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தாய்மாமன் உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். பூமி, மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வரவுக்கேற்ப கடன்களை அமைத்துக் கொள்வது நல்லது. இணைய வர்த்தகத்தில் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிர்ப்புகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.

உடல் ஆரோக்கியம்

💫 உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். வெளி உணவுகளைக் குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். தலைவலி, முதுகுவலி சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

பொருளாதாரம்

💫 பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆடம்பரமான செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். சிறு வருமானத்தையும் சரியான முறையில் முதலீடுகளாக மாற்றுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறைவதால் எதையும் ஆவணப்படுத்திக் கொள்வது நல்லது. இழுபறியான வரவுகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள்

💫 உயர் அதிகாரிகளிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்திருந்த இடமாற்றங்கள் சாதகமாகும். ஊதிய உயர்வு சிலருக்கு கைகூடி வரும். அலுவல் பணிகளில் இருந்துவந்த போட்டி மற்றும் தடைகளை வெற்றி கொள்வீர்கள். பணி சார்ந்த சில பயணங்களின் மூலம் புதிய வாய்ப்புகளும், அனுபவமும் மேம்படும். பணி மாற்ற முடிவுகளில் சூழ்நிலை அறிந்து, அனுபவ அறிவை கொண்டு செயல்படுத்தவும். சக பணியாளர்களின் தனிப்பட்ட செயல்களில் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். கணினித் துறையில் இருப்பவர்களுக்கு பிற நாட்டு நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

வியாபாரிகள்

💫 புதிய துறை சார்ந்த தேடலும், முதலீடுகளும் அதிகரிக்கும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. நிலுவையில் இருந்துவந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வித்தியாசமான அணுகுமுறைகளால் போட்டியாளர்களை வெற்றி கொள்வீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். தொழில் நுட்ப உதவிகளின் மூலம் வியாபார பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் பொறுமையைக் கையாள்வது நல்லது. வெளியூர் தொடர்புகளால் ஆதாயம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள்

💫 நினைத்த சில பணிகளில் தந்திரமாகச் செயல்பட்டு எண்ணியதை அடைவீர்கள். கட்சி பணி சார்ந்த பயணங்கள் அடிக்கடி உண்டாகும். தற்பெருமையான செலவுகளால் கையிருப்புகள் குறையும். ஒப்பந்தப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களைப் பற்றிய புதிய தெளிவு உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளால் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும்.

கலைஞர்கள்

💫 கலைத்துறையில் வித்தியாசமான வாய்ப்புகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். திடீர் பயணங்களால் சுக வாழ்வில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். இசைத்துறையில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆசை வார்த்தைகளை நம்பி செயல்படாமல் இருக்கவும். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் தேவையற்ற வாதங்களைத் தவிர்க்கவும்.

பெண்கள்

💫 பெண்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். தடைபட்ட சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். உறவுகளிடத்தில் பயனற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த விரக்தி மனப்பான்மை விலகும். மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள் குறையும். ஆடம்பரமான செலவுகளால் கையிருப்புகள் குறையலாம்.

மாணவர்கள்

💫 திறமைக்கு உண்டான வாய்ப்புகளும், மதிப்பெண்களும் கிடைக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் மிக நன்று. உயர்நிலைக் கல்வியில் முயற்சிகளை அதிகப்படுத்தவும். நண்பர்களின் தன்மைகளை அறிந்து நட்பு கொள்ளவும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் முயற்சிகளை அதிகப்படுத்தவும். சஞ்சலமான சிந்தனைகளைத் தவிர்க்கவும். சில நேரத்தில் தனிமை உற்ற தோழனாக அமையும். உடற்பயிற்சி மற்றும் உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும்.

நன்மைகள்

💫 நடைபெற இருக்கின்ற ராகு, கேது பெயர்ச்சியால் வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளும், நெருக்கடி கொடுத்த சில இன்னல்களும் குறையும்.

தீமைகள்

💫 நடைபெற இருக்கின்ற ராகு, கேது பெயர்ச்சியால் ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வமும், உடனிருப்பவர்களிடம் போட்டி மனப்பான்மையின்றி இருப்பதும் நல்லது.

வழிபாடு

💫 திருக்களாச்சேரியில் வீற்றிருக்கும் நாகநாதரை வழிபட நீண்ட நாட்களாக இருந்துவந்த இன்னல்கள் குறையும்.

💫 வராகி அம்மனுக்கு அகல் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும். இந்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றோம். மேஷ ராசி அன்பர்களே!! இன்னும் உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? நல்ல நேரம் வந்தாச்சு..! உங்கள் விருப்பத்திற்கு பொருத்தமான துணையக் கண்டறிய நித்ரா மணமாலையில் இலவசமாக இன்றே வரன் பதிவு செய்யுங்கள்!!


ragu ketu peyarchi 2023 to 2025


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.
Christian - Caste
By Profession
By City
By State
By Education
By Marital Status
By Dosham
Second Marriage By Caste
Divorcee By Caste
Divorcee By Location
Second Marriage By Location