மேஷ ராசிக்கு எந்த ராசி பொருந்தும்?
முன்னுரை
👫 ஜோதிடத்தில், ராசி பொருத்தம் என்பது பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டது. மேஷ ராசிக்காரர்கள் பொதுவாக துணிச்சலான, சுறுசுறுப்பானவர்கள். இந்த குணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ராசிக்காரர்களுடன் அவர்கள் நன்றாக பொருந்தக்கூடும். நாம் இந்தப் பதிவில் மேஷ ராசி அன்பர்கள் எந்த ராசிகாரர்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று பார்க்கலாம். வரன் தேடிக் கொண்டிருக்கும் மேஷம் ராசி அன்பர்களே! உங்கள் ராசிக்கேற்ற நல்ல வரன் அமைய நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக இன்றே பதிவு செய்யுங்கள்!
மேஷம் ராசி அடிப்படை பொருத்தம்
👫 ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பொருந்தும் ராசிகள் இருக்கும், அந்த வகையில், மேஷம் ராசி கார்த்திகை நட்சத்திரம், மேஷம் ராசி பரணி நட்சத்திரம், மேஷம் ராசி அஸ்வினி நட்சத்திரம் போன்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொருத்தமான ராசி மற்றும் நட்சத்திரங்கள் உள்ளன.
👫 திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமம். சிலருக்கு மட்டுமே திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். பலரது வாழ்க்கை அன்றாடம் போர்க்களமாக இருக்கும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அல்லது காதல் வாழ்க்கை அமைய வேண்டுமானால், சரியான ராசியை பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். எந்தெந்த ராசி தம்பதிகள் யாருடன் வெற்றிகரமான மன வாழ்க்கை அமையும் என்பதைப் பார்ப்போம்.
👫 கணங்கள்: ராசிகளுக்கு இடையேயான கணங்களின் பொருத்தம்.
👫 நட்சத்திரங்கள்: ராசிகளில் உள்ள நட்சத்திரங்களின் பொருத்தம்.
👫 தசாபலம்: தனிநபர்களின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் தசாபலம்.
👫 லக்னம்: தனிநபர்களின் ஜாதகத்தில் உள்ள லக்னத்தின் நிலை.
மேஷ ராசி குணங்கள்
👫 மேஷ ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள். 12 ராசிகளில் முதல் ராசிக்காரர்கள் என்பதால் எதிலும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கும். பெரும்பாலும் அநீதியைக் கண்டு பொங்குபவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதற்கும் யாரையும் சார்ந்து இருப்பதில்லை. ஆனால், நண்பர்கள் உறவினர்களோடிருப்பதை விரும்புவார்கள்.
மேஷ ராசி பெண்கள் குணங்கள்
👫 ஒரு ராசிக்கு பொதுவான குணங்கள் இருந்தாலும், ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் குணங்கள் மாறுபடும். இதில் மேஷ ராசி பெண்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். மேஷம் ராசி பெண்கள் பொதுவாக சுத்தமாகவும் உறுதியான முறையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். இதனால் அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை உடனடியாக புரிந்து கொள்ள முடியும். அவர்கள் செயல்பட போதுமான இடம் கொடுக்கப்பட்டால், அவர்கள் எளிதாக முன்னேறுவார்கள். எல்லோருடனும் மிகவும் நட்புடன் பழகுபவர்கள். அனைவருக்கும் உதவ விரும்புபவர்கள்.
மேஷ ராசிக்கு பொருத்தமான ராசி
👫 தத்துவத்தில் நான்கு வகையான ராசிகள் உள்ளன, அதாவது நெருப்பு ராசிகள், நீர் ராசிகள், காற்று ராசிகள் மற்றும் பூமி ராசிகள். இந்த ராசிக்காரர்கள் சரியான ராசியைப் பார்த்து இணைக்க வேண்டும். தம்பதிகள் சரியான ராசியில் அமையவில்லை என்றால் திருமண வாழ்வில் சண்டை சச்சரவுகள் அதிகரித்து திருமண வாழ்க்கை பிரிந்து செல்லும். அந்த வகையில் மேஷ ராசி அன்பர்கள் எந்த ராசிக்காரர்களுடன் ஜோடி சேர்ந்தால் வெற்றிகரமான திருமண வாழ்க்கை அமையும் என்று பார்க்கலாம்.
மேஷம் - கடகம்
👫 மேஷம் ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். நெருப்பு ராசிக்காரர்கள் துணிச்சலும், நம்பிக்கையும் மிக்கவர்கள். கடகம் ராசிக்கு அதிபதி சந்திரன் மனோகாரகன் ஆவார். நெருப்பான மேஷ ராசியினரை கடக ராசியினர் திருமணம் செய்து கொண்டால் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கை வாழ்வார்கள்.
மேஷம் - கும்பம்
👫 மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். ரத்தத்தின் அதிபதி எப்போதும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள் மற்றும் போர் குணம் கொண்டவராவார்கள். உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். காதலில் வெற்றி பெற இவர்களுக்கு தைரியமும் சுறுசுறுப்பும் அவசியம். கும்ப ராசியின் அதிபதி சனிபகவான். பொறுமைசாலிகள், ஒருவரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு எப்படி கையாள்வது என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் இணைந்தால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது.
மேஷம் - துலாம்
👫 இந்த இரு ராசிகளும் இயற்கையாகவே இணக்கம் கொண்ட ராசியாக இருக்கும். மேஷ ராசி நபர்கள் இயற்கையில் மிகவும் நேர்மையானவர்கள். மறுபுறம், துலாம் ராசிக்காரர்கள் உணர்ச்சி ரீதியாக சார்ந்து இருக்கிறார்கள். வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும், ஆதரவாகவும் நம்பகத்தன்மையுடனும் இருப்பார்கள். இந்த இரு ராசிக்காரர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் பரஸ்பரம் காதல் உணர்வும் வலுவாக இருக்கும்.
முடிவுரை
👫 அன்பார்ந்த பயனாளர்களே! இந்த மேஷ ராசி திருமண வாழ்க்கை பொருந்தும் ராசி பற்றிய தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம். மேலும், ஒருவருக்கு எந்த ராசி மிகவும் பொருத்தமானது என்பதை அறிந்து திருமணம் செய்து வைத்தால் அவர்களின் எதிர்காலம் சீரும் சிறப்புமாக இருக்கும். நீங்கள் மேஷம் ராசியா? வரன் தேடுகிறீர்களா? உங்கள் ராசிக்கான வரன்களை காண நித்ரா மேட்ரிமோனியில் வரன் பதிவு செய்யுங்கள்! மகிழ்ச்சியான வாழ்க்கையை இன்றே தொடங்குங்கள்!