மீனம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2023-2025
🎆 ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்பட்டாலும், இவை இரண்டும் சனி பகவானின் பிரதிநிதிகள் ஆவார்கள். ராகு கேது பெயர்ச்சி 2023 - 2025 மீனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை அளிக்கப் போகிறது என்பதனைப் பற்றி காணலாம். நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லை என கவலையா? இனி அந்த கவலையே வேண்டாம்..நமது நமது நித்ரா மணமாலையில் உங்கள் ராசிக்கான வரன்கள் காத்துக் கொண்டிருக்கிறது. இனி ஏன் தாமதம்? உடனே நமது நித்ரா மணமாலையில் வரன் பதிவு செய்யுங்கள்...அடுத்த முகூர்த்தத்திலேயே உங்களுக்கு டும் டும் டும் தான்..!!
ராகு-கேது பார்வை:
🎆 சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், மாட்டாமல் மீண்டெழும் தன்மை கொண்ட மீன ராசி அன்பர்களே..! இனி வரபோகும் ஒன்றரை ஆண்டுகாலம் சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மீன ராசிக்கு ராசி ஸ்தானம் என்னும் முதல் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் ராசிக்கு களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் இடத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர்.
🎆 ராசி ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்ற ராகுவினால் உடை அலங்காரத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் தனித்து செயல்படுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வித்தியாசமான கனவுகள் தோன்றி மறையும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழப்பதற்கான சூழ்நிலைகள் அமையலாம். செல்வாக்கை மேம்படுத்துவதற்கான சில விரயங்கள் உண்டாகும். வெளியூர் பயண சிந்தனைகள் மேம்படும். எதிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும்.
🎆 ராசிக்கு ஏழாம் வீட்டில் அடியெடுத்து வைக்கின்ற கேதுவினால் நண்பர்களின் மூலம் புதிய அனுபவமானது கிடைக்கும். அதிகார மமதையில் செயல்படுவதை தவிர்க்கவும். பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கிடைக்கும். தவறிய சில பொருட்களை பற்றிய குறிப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களில் உண்மையானவர்களை தெரிந்து கொள்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தள்ளிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய இலக்குகளும், அனுபவமும் உண்டாகும். போட்டி விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். உங்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.
உடல் ஆரோக்கியம்:
🎆 அடிவயிறு சார்ந்த இன்னல்கள் தோன்றி மறையும். பழக்கம் இல்லாத புதிய உணவுகளை குறைத்துக் கொள்ளவும். தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடிப்பதால் மன மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை குறைக்கலாம்.
பொருளாதாரம்:
🎆 வரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். வருமான உயர்வு குறித்த சிந்தனைகளும், ஆலோசனைகளும் கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். புதிய மனை மற்றும் வீடு சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்கள்:
🎆 சக ஊழியர்களிடத்தில் பொறுமையை கையாளவும். உயர் பதவியில் இருப்பவர்களிடம் சிறு சிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். பணி மாற்ற முயற்சிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். பணியின் நிலவரங்களை அறிந்து வாக்குறுதிகளை அளிக்கவும். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு உண்டாகும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள்.
வியாபாரிகள்:
🎆 வியாபாரத்தில் புதிய தொடர்புகள் மற்றும் அறிமுகங்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வர்த்தக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். கமிஷன் சார்ந்த துறைகளில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். ஜவுளி வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
அரசியல்வாதிகள்:
🎆 சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மாறுபட்ட அனுபவம் உண்டாகும். அரசியல்வாதிகள் புரிதல் இல்லாமல் கருத்துகள் கூறுவதை தவிர்க்கவும். எதையும் செய்ய முடியும் என்ற இறுமாப்பு மேம்படும். உடனிருப்பவர்களிடம் தனிப்பட்ட எண்ணங்களை பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். செய்யும் முயற்சிகளில் விமர்சன கருத்துக்கள் ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். கட்சித் தலைமை மூலம் சில நெருக்கடியான சூழ்நிலைகள் தோன்றி மறையும்.
கலைஞர்கள்:
🎆 கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். வித்தியாசமான முயற்சிகள் மற்றும் அணுகுமுறைகளின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வீண் விமர்சன கருத்துகள் தோன்றி மறையும். எதிலும் நேர்மையுடன் விதிகளுக்கு கட்டுப்பட்டு செயல்படுவது நல்லது. புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடலும், ஈடுபாடும் ஏற்படும்.
பெண்கள்:
🎆 சில விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். உறவுகளின் மத்தியில் பொறுமையுடன் செயல்படவும். வேலைகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். அறிவாற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குவீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும்.
மாணவர்கள்:
🎆 மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பிறமொழி பேசும் நபர்களின் அறிமுகம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்ற கனவு சிலருக்கு நிறைவேறும். உயர்கல்வியில் அனுகூலமான சூழல் உண்டாகும். நினைவாற்றலில் இருந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். விளையாட்டு சார்ந்த செயல்களில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள்.
நன்மைகள்:
🎆 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மனதளவில் புதுவிதமான உத்வேகத்துடனும், துணிவுடனும் செயல்படுவீர்கள்.
தீமைகள்:
🎆 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபாரப் பணிகளில் புதுமையான சூழல் அமையும்.
வழிபாடு:
🎆 ஒவ்வொரு புதன்கிழமையும், கிருஷ்ணரை வணங்க குடும்பம் ஒன்று கூடும்.
🎆 வியாழக்கிழமை தோறும் ஆலங்குடி ஸ்ரீ குருபகவானை வழிபட சிந்தனைகளில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும்.
🎆 மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும். மீனம் ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். மீனம் ராசி அன்பர்களே!! உங்களுக்கு திருமண வயது வந்துவிட்டதா..?? அப்புறம் என்ன? இன்றே நமது நித்ரா மணமாலையில் இன்றே வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் பிரியமான துணையைத் தேர்ந்தெடுங்கள்!!
