மாசி மாத சிறப்புகள்!!
🎗 மாசி மாதம் பல்வேறு வகையில் சிறப்பு வாய்ந்த நாளாக ஆன்மிகத்தில் பார்க்கப்படுகிறது. இது இறை வழிபாட்டிற்குரிய மாதமாகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட சிறப்பான மாதம் என சொல்வார்கள். ஆனால் மாசி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கும், அனைத்து விதமான நலன்களை பெறுவதற்கும் உகந்த மாதமாக விளங்குகிறது.
🎗 புதிய கலைகளை கற்க, மந்திர உபதேசம் பெற, புனித நீராட, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மாசி மாதம் ஏற்றதாகும். மாசி மாதத்தில் பெண்கள் விரதமிருந்து வழிபட்டால் தாலி பாக்கியம் பலம் பெறும் என்று நம் முன்னோர்களின் கூற்று. தானம், தர்மங்கள் செய்வதற்கும் ஏற்றது மாசி மாதம். இந்த மாதத்தில் வரும் 30 நாட்களுமே வழிபாட்டிற்குரிய சிறப்பான நாட்களாக பார்க்கப்படுகிறது. இந்த அற்புதம் வாய்ந்த மாதமாக மாசி மாதம் கூறுவதற்கான காரணம் என்ன என்பதனை பற்றி விரிவாக காண்போம். மாசி மாதத்தில் முருகன் அல்லது சிவ பெருமானுக்கு விரதம் இருந்து வழிப்பட்டு வந்தால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு இன்னும் திருமண வரன் அமையவில்லையா? இனி இந்த கவலையே வேண்டாம்! உங்களுக்காகவே இருக்கிறது எங்கள் நித்ரா மேட்ரிமோனி. இது தமிழகத்தின் சிறந்த மேட்ரிமோனி தளமாக விளங்குகிறது. நேரத்தை வீணாக்காதீர்கள்! இன்றே இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!!
மகத்துவமான மாசி மாதம்:
🎗 தமிழ் மாதங்களிலே 11-வது மாதமாக அமைவது மாசி மாதம் ஆகும். புராணங்களின் படி, மாசி மாதம் வழிபாட்டிற்குரிய மாதமாக கருதப்படுகிறது. பொதுவாக, ஒவ்வொரு மாதத்திலும் வரும் திதி, நட்சத்திரம், நாள் மட்டும்தான் சிறப்பு பெறும். ஆனால், மாசி மாதத்தில் வரும் அனைத்து நாட்களுமே ஒவ்வொரு வகையிலும் சிறப்பினைக் கொண்டுள்ளது. இந்த மாதத்தில் வரும் அனைத்து விரத நாட்களும் சிறப்பான பலன்களை தரக் கூடியதாகும். அனைத்து தெய்வங்களையும் வழிபட ஏற்ற மாதமாகவும் மாசி மாதம் கருதப்படுகிறது.
🎗 மாசி மகம், மகா சிவராத்திரி, ஹோலி பண்டிகை, மாசி ஏகாதசி, மாசி மாத பூசம், மாசி பெளர்ணமி, மாசி அமாவாசை போன்ற அனைத்து நாட்களுமே ஒவ்வொரு விதத்திலும் சிறப்பு வாய்ந்தவைகளாக இருக்கிறது.
மாசி மாத சிறப்புக்கள்:
🎗 எப்படிப்பட்ட துன்பங்களையும் போக்கக் கூடிய நாள் சங்கடஹர சதுர்த்தி நாள் என்கின்றோம். மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியை மகா சங்கடஹர சதுர்த்தி என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாளில் விநாயகருக்கு விரதமிருந்து வழிபட்டால் எந்த பிறவியிலாவது தெரியாமல் செய்த பாவங்களையும் போக்கக் கூடிய உன்னதமான நாள் கருதப்படுகிறது.
🎗 சிவ பெருமான் 63 திருவிளையாடல்கள் நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. அப்படி அவர் தனது திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டியது மாசி மாதத்தில் தான்.
🎗 அடி முடி காண முடியாத ஜோதி வடிவாத, லிங்கோத்பவராக சிவ பெருமான் காட்சி தந்தது மாசி மாதத்தில் தான் என பல புராணங்கள் சொல்கின்றன. அதனால் லிங்க வழிபாடு துவங்கியது இந்த மாசி மாதத்தில்தான் என கூறப்படுகிறது.
🎗 முருகப் பெருமானை தகப்பன் சுவாமி என அழைக்கிறோம். அப்படி முருகப் பெருமான், தனது தந்தை சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசம் செய்தது மாசி மாத பூசம் நட்சத்திர நாளில்தான். அதனால் தான் மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது, உயர்கல்வி துவங்குவது போன்றவை செய்யப்படுகின்றது.
புண்ணிய தரும் மாதம்:
🎗 திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது இந்த மாசி மாத மக நட்சத்திரத்தில்தான்.
🎗 மாசி மாதத்தில் வரும் இரண்டு ஏகாதசிகளும் புண்ணியத்தை தரக் கூடியவையாகும். பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைக் கூட போக்கி, நற்கதி அருளக் கூடிய மாதமாக மாசி மாதம் பார்க்கப்படுகிறது.
🎗 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகாமகம் இந்த மாதத்தில் தான் நடைபெறும். இவ்விழாவானது வட மாநிலங்களில் கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.
🎗 பொதுவாக அமாவாசை நாள்தான் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாள் என்று கூறுவார்கள். ஆனால், மாசி மாதத்தில் வரும் பெளர்ணமியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பான பலன்களை தரும். இந்த நாளில் வண்ணங்களின் திருவிழா என வர்ணிக்கப்படும் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
🎗 மாசி மாதத்தில் நீர் நிலைகளில், கோவில் குளங்களில் புனித நீராடுவது பெரிய புண்ணியத்தைத் தரும். இந்த மாதத்தில் ஆறு, கடல், குளம் போன்ற நீநிலைகளில் அமிர்தம் கலந்திருப்பதாக ஐதீகம். அதனால் இந்த மாதத்தில் புண்ணிய நீராடினால் ஏராளமான புண்ணிய பலன்கள் கிடைக்கும் என்கின்றனர்.
அம்பிகை வழிபாடு:
🎗 மாசி மாதத்தில் அம்பிகை, சிவப் பெருமாளை வழிபட்டு வரங்கள் பெற்ற நாள்தான் மகா சிவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
🎗 இந்த மாதத்தில்தான் பார்வதி தேவி, தட்சனுக்கு மகளாக அவதரித்து தாட்சாயனியாக அவதாரம் எடுத்தார்.
🎗 மாசி மாதத்தில்தான் சிவ பெருமான், பராசக்தியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாசி மாதத்தில் திருமணமான பெண்கள் தாலி கயிற்றை மாற்றும் வழக்கமும் உள்ளது. இந்த மாதத்தில் சுமங்கலி பெண்களும், கன்னிப் பெண்களும் அம்பிகையை வழி பட மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும்.
மாசி மாத முக்கிய விரத நாட்கள்:
பிப்ரவரி 16 - மாசி 04 - ஏகாதசி
பிப்ரவரி 18 - மாசி 06 - மகா சிவராத்திரி
பிப்ரவரி 20 - மாசி 08 - அமாவாசை
பிப்ரவரி 26 - மாசி 14 - கிருத்திகை
மார்ச் 03 - மாசி 19 - ஏகாதசி
மார்ச் 04 - மாசி 20 - சனி மகா பிரதோஷம்
மார்ச் 06 - மாசி 22 - மாசி மகம்
மார்ச் 07 - மாசி 23 - பெளர்ணமி
மார்ச் 10 - மாசி 26 - மகா சங்கடஹர சதுர்த்தி
🎗 மேலே கொடுக்கப்பட்டுள்ள மாசி மாத சிறப்புகள் பற்றிய பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இரண்டாம் கட்ட வாழ்க்கை தொடக்கமாகும். எனவே, உங்களுக்கேற்ற உகந்த தெய்வத்திற்கு விரதம் இருந்து வழிப்பட்டு உங்களுக்கேற்ற துணையை திருமணம் செய்ய நித்ரா மேட்ரிமோனியில் உடனே இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் துணையோடு ஒளிமயமான வாழ்வைத் தொடங்குங்கள்!!