Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.
Makaram Rahu Ketu Peyarchi Palan 2023 2025
Dhanraj

மகரம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2023-2025


💕 ராகு-கேது தோஷம் என்பது முக்கியமாக ராசி அல்லது லக்னத்திற்கு 2,7 ஆம் இடங்களில் ராகு கேதுக்கள் இருப்பதை குறிப்பிடுகிறது. ராகு கேது என இருவரில் ஒருவர் இரண்டாம் இடத்தில் இருந்தால் மற்றவர் எட்டாம் இடத்தில் இருப்பார். அதுபோல் ஏழாம் இடத்தில் ஒருவர் இருந்தால் மற்றவர் லக்னத்திலோ அல்லது ராசியிலோ இருப்பார். இதுவே ராகு கேது தோஷம் என சொல்லப்படுகிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி 2023 - 2025 மகர ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை அளிக்கப் போகிறது என்பதனைப் பற்றி இப்பதிவில் காணலாம். மகர ராசிக்காரர்களா நீங்கள்? இன்னும் உங்களுக்கு திருமண வரன் அமையவில்லையா? இனி ஏன் கவலை? நமது நித்ரா மணமாலையில் எண்ணற்ற வரன்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன...இன்றே நமது நித்ரா மணமாலையில் வரன் பதிவு செய்யுங்கள்!! அடுத்த சுப முகூர்த்திலேயே உங்கள் துணையுடன் கெட்டிமேளம் தான்!!

ராகு-கேது பார்வை:

💕 சூழ்நிலை எதுவாக இருந்தாலும், தன்னம்பிக்கை தளராத மகர ராசி அன்பர்களே..! இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டுகாலம் சுபத்திற்கு அதிபதியாக இருக்ககும் ராகு பகவான் மகர ராசிக்கு சகோதர ஸ்தானம் என்னும் மூன்றாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் ராசிக்கு பாக்கிய ஸ்தானம் என்னும் ஒன்பதாம் இடத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றனர்.

💕 ராசியின் மூன்றாம் வீட்டில் ராகு நுழைவதால் மனதில் எதையும் சமாளிக்கும் நம்பிக்கையும் புத்துணர்ச்சியும் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். எழுத்துத் துறையில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளால் மாற்றத்தை அனுபவிப்பார்கள். வேலையாட்களின் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். மனை விருத்திக்கான முயற்சிகள் கைகூடும். தைரியமான பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் நடுநிலையுடன் செயல்பட்டு ஆதரவுகளை உருவாக்கிக் கொள்வீர்கள். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

💕 ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் கேது நுழைவதால் ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் மேம்படும். தந்தை வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். மனதில் புதிய தேடல் பிறக்கும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும்.

உடல் ஆரோக்கியம்:

💕 உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் ஏற்படும். அன்றாட பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். உறவுகளின் வழியில் இருந்துவந்த மருத்துவ செலவுகள் குறையும். புதிய மற்றும் துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பொருளாதாரம்:

💕 பொருளாதாரத்தில் தேவைக்கேற்ப வரவு உண்டாகும். முடிந்த அளவு கடன்களை தவிர்க்கவும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. மற்றவர்களுக்கு பொருளாதார ரீதியாக ஆலோசனை கூறும் பொழுது அவர்களின் தன்மைகளை அறிந்த பிறகு செயல்படவும். வர்த்தகம் தொடர்பான முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும்.

உத்தியோகஸ்தர்கள்:

💕 வித்தியாசமான முயற்சிகளின் மூலம் உத்தியோக பணிகளை துரிதமாக முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய தொழில்நுட்ப தொடர்புகளால் திறமைகள் வெளிப்படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளவும். பணி மாற்ற சிந்தனைகள் மேம்படும்.

வியாபாரிகள்:

💕 வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். மறைமுகமான போட்டிகள் குறையும். புதிய உற்பத்திக்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். நிலுவையில் இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். கடை விரிவு பணிகளில் தடுமாற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மற்றவர்களுக்கு நிதி ஆலோசனைகளை வழங்கும்போது, அவர்களின் குணாதிசயங்களை அறிந்து கொண்டு செயல்படுவது நல்லது. தேவைக்கேற்ப பொருட்களை வாங்கிக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள்:

💕 அரசியல்வாதிகளுக்கு எதிலும் திருப்தியற்ற சூழ்நிலை உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் உண்டாகும். மனதளவில் இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

கலைஞர்கள்:

💕 கலைத்துறையில் இருப்பவர்கள் பழக்கவழக்கங்களில் கவனத்துடன் இருக்கவும். சேமிப்பு சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். மூத்த கலைஞர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும். வீண் சந்தேகங்களால் குழப்பம் ஏற்படும்.

பெண்கள்:

💕 பெண்களுக்கு சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் இழுபறியான வரவுகள் கிடைக்கும். தினசரி பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். எடுத்துச் செல்லும் பொருட்களில் கவனம் வேண்டும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். எதிராக இருந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

மாணவர்கள்:

💕 மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிலும் அவசரமின்றி செயல்படவும். தத்துவம் மற்றும் கணித துறைகளில் ஆர்வம் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் நேர்மையுடன் செயல்படவும். பயனற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும்.

நன்மைகள்:

💕 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய துறை சார்ந்த அறிமுகம் உண்டாகும்.

தீமைகள்:

💕 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் எதிர்பார்த்த சில ஆதரவுகள் தாமதமாக கிடைக்கும். தொலை தூரப் பயணங்களில் சிந்தித்துச் செயல்படவும்.

வழிபாடு:

💕 திருவனந்தபுரத்தில் வீற்றிருக்கும் ஜம்புகேஸ்வரரை வழிபடுவதால் காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

💕 ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம், உங்கள் மனதில் உள்ள தேடல்களுக்கு வழி கிடைக்கும்.

💕 மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் ஏற்படும். மகர ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். மகர ராசி அன்பர்களே!! உங்கள் அன்புத் துணையை காண நமது நித்ரா மணமாலையில் இன்றே வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் துணையோடு இன்பமாக வாழ்ந்திடுங்கள்!!

ragu ketu peyarchi 2023 to 2025


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.