குங்குமத்தின் மகிமை
முன்னுரை:
🌷 இந்து தர்ம சாஸ்திரத்தின்படி, மங்களப் பொருள்களில் முதலில் குறிப்பிடுவது குங்குமமே ஆகும். குங்குமமானது பெண்களின் முகத்தில் மங்களத்தைச் சேர்ப்பதோடு, நமது நெற்றியில் இடுவதால் மகாலட்சுமி தேவியின் அருளைப் பெறலாம் என நம்பப்படுகிறது. உங்கள் வாழ்வில் அழகான துணையைக் காண நமது நித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! குங்குமத்தின் மகிமை பற்றி இங்குக் காண்போம்.
குங்குமம்:
🌷 குங்குமப்பூவை நெற்றியில் வைப்பதால் பல நன்மைகள் உள்ளன. பார்ப்பதற்கு மங்களகரமானதாகத் தெரியும். ஆன்மீக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த குங்குமம், அழகு சாதனப் பொருட்களிலும் அதன் இடத்தைப் பெற்றுள்ளது. அழகான ஆடைகளை அணிந்து, புருவங்களுக்கு இடையே நெற்றியில் குங்குமம் இடும் பெண்களைப் பார்த்தால் மகாலட்சுமியாக நம் கண்களுக்குக் காட்சியளிக்கின்றனர்.
குங்குமத்தின் நன்மைகள்:
🌷 படிகாரம் கிருமி நாசினியாக இருப்பதால், தோல் தொடர்பான நோய்கள் வராது. தொற்று கிருமிகள் அருகில் வராது. நெற்றியில் குங்குமத்தை வைப்பதால் மூளை மற்றும் உடலின் பிற பகுதிகளுக்குச் செல்லும் நரம்புகளுக்கு ஆற்றல் கிடைக்கிறது.
🌷 நெற்றி என்பது மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான வெப்பத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தும் பகுதியாக உள்ளது. ஆகவே, இந்த குங்குமத்தை நெற்றியில் தடவினால் சூடு தணிகிறது.
🌷 நெற்றியில் குங்குமம் வைத்து சூரிய நமஸ்காரம் செய்தால் சிறப்பான பலன் கிடைக்கும். நெற்றியில் வைக்கப்படும் குங்குமத்தின் மீது சூரியக் கதிர்கள் படும்போது, குங்குமத்தில் சேர்க்கப்படும் படிகாரம், சுண்ணாம்பு நீர், மஞ்சள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை இணைந்து காந்த சக்தியை உருவாக்குகின்றன.
🌷 சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் பூசி குளிர்ச்சியாக இருக்கிறோம். இதனால், உடல் மற்றும் மன ஆற்றல் வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. முகம் களைகளால் பிரகாசமாக இருக்கும். குங்குமம் இடுவது அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்லாது, ஆரோக்கியத்திற்காகவும் இந்த பழக்கத்தை நம் பெரியவர்கள் வழிமுறைப்படுத்தினர்.
குங்குமம் வைத்துக்கொள்ளும் முறை:
🌷 குங்குமத்தை இரண்டு புருவங்களுக்கு இடையில் வைக்கவும். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் குங்குமத்தைப் பயன்படுத்தலாம்.
🌷 கோவிலில் குங்குமம் வாங்கும் போது வலது உள்ளங்கையில் குங்குமம் வாங்கி நெற்றியில் குங்குமம் இடும் போது வலது மோதிர விரலை வளைத்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைக்க வேண்டும்.
🌷 வலது கை மோதிர விரலால் நெற்றியில் குங்குமம் இட்டால் நமக்குத் தெய்வீக சக்தி கிடைக்கும். பெண்கள் நெற்றி, மாங்கல்யம், உச்சந்தலையின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களில் குங்குமம் வைப்பது சிறந்தது.
🌷 நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு ஸ்டிக்கர் பொட்டு ஒட்டும் பழக்கம் இருந்தாலும், குங்குமத்தின் மகத்துவத்தைச் சொல்லிக் கொடுங்கள். ஸ்டிக்கர் பொட்டு ஒட்டினாலும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கும் கோவில்களுக்கு செல்லும் போதும் நெற்றியில் சிறிது குங்குமம் வைக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுப்பது நல்லது. இன்று சாஸ்திர நடைமுறைகள் அனைத்தும் மூடநம்பிக்கையாக மாறியதால் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம். எனவே, பெரியோர்கள் கற்றுத் தந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் நமது வாழ்வில் நிச்சயம் நல்லது நடக்கும்.
முடிவுரை:
🌷 மேலே கொடுக்கப்பட்டுள்ள குங்குமத்தின் மகிமை பற்றிய பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். நமது வாழ்வில் வாழ்க்கைதுணையானது இந்த ஜென்மத்தில் தீர்மானிக்கப்பட்டது அல்ல. நம் முன்னோர்கள் கூறியது போல நமது துணைவியார் என்பது சென்ற ஜென்மத்தில் நாம் செய்த தர்ம வினைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஆகும். ஏனென்றால் திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் ஆகும். மங்களகரமான இந்த திருமணத்தை நித்ரா மணமாலையில் இலவசமாக பதிவு செய்து உங்களது துணையை காணுங்கள்!!