கும்பம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2023 - 2024
குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து, ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக துலாம் ராசியான பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான லாப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார்.
குரு பார்வை:
எந்த சூழ்நிலையிலும் நிதானமாக செயல்பட்டு, எண்ணியதை நிறைவேற்றிக் கொள்ளும் கும்ப ராசி அன்பர்களே!! குரு சகோதர ஸ்தானத்தில் நிற்பதால் அதிரடியான சில செயல்களின் மூலம் வியாபாரத்தில் இருக்கும் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் நம்பிக்கையுடன் புதிய முடிவினை எடுப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
பலன்கள்:
குரு ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் வெளிநாடு தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
குரு ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்ப பெரியவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
குரு ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். உடன் இருப்பவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும்.
பொருளாதாரம்:
பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். திடீர் செய்திகளின் மூலம் சேமிப்புகள் குறையும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
உடல் ஆரோக்கியம்:
உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். அஜீரணம், உடல் சோர்வு போன்றவை அவ்வப்போது தோன்றி மறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு:
பெண்கள் தன்னம்பிக்கையுடன் எதிலும் செயல்பட வேண்டும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து செல்ல வேண்டிய சூழல் அடிக்கடி உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். வெளி இடங்களுக்கு போகும்போது உடைமைகளில் கவனம் வேண்டும். பிரிந்து போன உறவினர்கள் விரும்பி வருவார்கள். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும்.
மாணவர்களுக்கு:
மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். கடினமான முயற்சிகளின் மூலம் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். அரசு வழியில் எண்ணிய சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கான செயல்களில் ஆர்வம் மேம்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு:
உத்தியோகத்தில் திடீர் பொறுப்புகளின் மூலம் மதிப்புகள் மேம்படும். திட்டமிடாத சில பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். அரசு அதிகாரிகளுக்கு புதிய இடமாற்றங்கள் ஏற்படலாம். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவும். சட்டம் மற்றும் அதிகாரம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். மருத்துவம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு:
வியாபாரத்தில் போட்டிகள் சற்று அதிகமாக இருக்கும். அரசு தொடர்பான வரிகளை உரிய நேரத்தில் செலுத்துவது நல்லது. புதிய பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நபர்களிடத்தில் கவனத்துடன் இருக்கவும். கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். விவசாய பணிகளில் முயற்சிக்கு ஏற்ப ஆதாயமும், செல்வச்சேர்க்கையும் உண்டாகும். வியாபார ரீதியாக கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் சாதகமாகும். வெளியூர் தொடர்பான நபர்களின் மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கலைஞர்களுக்கு:
கலை துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயமான பலன்கள் உண்டாகும். செய்யும் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் கவனம் வேண்டும். அவ்வப்போது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். நவீனத்துவமான முறைகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். நிலுவையில் இருந்துவந்த படைப்புகள் வெளிப்படும்.
அரசியல்வாதிகளுக்கு:
அரசியல்வாதிகள் எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. எதிராக இருப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். அரசு ஒப்பந்தத்தின் மூலம் மறைமுகமான வருமானம் கிடைக்கும். தொண்டர்களை அரவணைத்து செல்வது காரிய அனுகூலத்தை ஏற்படுத்தும்.
நன்மைகள்:
மனதில் நினைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் மேம்படும். செல்வ சேர்க்கை ஏற்படும்.
கவனம்:
எந்த ஒரு செயலிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். உங்கள் மீது சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். செயல்களில் துரிதத்தை விட விவேகம் சிறப்பானதாகும்.
வழிபாடு:
செவ்வாய்க்கிழமைதோறும் ஆஞ்சநேயருக்கு நெய் தீபமேற்றி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடவும். ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வது மேன்மையை ஏற்படுத்தும். மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும். கும்பம் ராசி (அவிட்டம், சதயம், பூரட்டாதி) பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பாராத யோகம் உண்டு. வரன் அமையவில்லை என்று வருத்தமா? இனிமேல் கவலை வேண்டாம் நித்ரா மணமாலையில் உங்களுக்கான வரன்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். பதிவு செய்யுங்க! பலனை அடைவீர்கள்..!!