Free Register
உங்கள் வரனை இலவசமாக பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும். பெண்களுக்கு முற்றிலும் இலவசம்.

கும்பம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2023-2025


🎗 ஜோதிடத்தின் புரியாத புதிராக கருதப்படுவது ராகு - கேதுக்கள் ஆகும். ராகு - கேது என்றாலே மக்களுக்கு ஒரு வகையான பயமும் பதற்றமும் தான் ஏற்படுகிறது. ஆனால், ராகு - கேதுக்கள், இரு துருவங்களாக செயல்பட்டு பூர்வ புண்ணியத்தின் கர்ம வினைகளை, இடத்திற்கு அல்லது வயதிற்கு தகுந்தாற்போல் அதனுடைய பலன்களை அப்படியே நமக்கு கொடுக்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி 2023 - 2025 கும்ப ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை அளிக்கப் போகிறது என்பதனைப் பற்றி காணலாம். நீங்கள் கும்ப ராசிக்காரரா? இன்னும் உங்களுக்கு வரன் அமையவில்லையா? இனி ஏன் கவலைப்பட வேண்டும்? நமது நித்ரா மணமாலையில் உங்களுக்கான வரன்கள் காத்துக் கொண்டிருக்கின்றன...உடனே நமது நித்ரா மணமாலையில் வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் கனவுத் துணையைக் காணுங்கள்!!

ராகு-கேது பார்வை:

🎗 நிதானமாக செயல்பட்டு காரியங்களை சாதிக்கும் திறன் கொண்ட கும்ப ராசிக்காரர்களே..! இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டுகாலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கும்ப ராசிக்கு குடும்ப ஸ்தானம் என்னும் இரண்டாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் ராசிக்கு அஷ்டம ஸ்தானம் என்னும் எட்டாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.

🎗 ராசியின் 2வது வீட்டில் ராகு அமர்ந்திருப்பது பேச்சுத் திறமைக்கு சாதகமான சூழலை உருவாக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் மேம்படும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். முகத்தில் பொலிவு மேம்படும். எதிலும் அடக்கத்துடன் இருந்தால் மேன்மை உண்டாகும். சிந்தனைகளில் நிலைத்தன்மையின்றி செயல்படுவீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும்.

🎗 ராசிக்கு 8-ம் வீட்டில் நுழையும் கேது திடீர் வாய்ப்புகள் மூலம் மாற்றத்தைத் தருவார். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். புதிய இடத்திற்கு செல்வதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மற்றவர்களின் செயலால் மனதில் மாற்றம் ஏற்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அலைச்சல்கள் மேம்படும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். வியாபாரம் சார்ந்த கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும்.

உடல் ஆரோக்கியம்:

🎗 உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். பிள்ளைகளின் ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும்.

பொருளாதாரம்:

🎗 பணவரவுகள் மத்திமமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைக்கவும். ஏற்ற, இறக்கம் இருந்தாலும் சில உதவிகள் சாதகமாகும். எதிர்பாராத சில செலவுகளால் மன நிம்மதி குறையும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். பாகப்பிரிவினைகளில் இருந்த தாமதம் குறையும்.

உத்தியோகஸ்தர்கள்:

🎗 பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடியான சூழல் உண்டாகும். எதிர்பாராத இடமாற்றங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். சக ஊழியர்களிடம் கருத்துக்களைப் பகிரும் பொழுது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் கவனத்துடன் இருக்கவும்.

வியாபாரிகள்:

🎗 வியாபாரப் பணிகளில் மத்திமமான முன்னேற்றமும், வாய்ப்புகளும் கிடைக்கும். பெரிய அளவிலான முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். கூட்டாளிகளிடம் பயனற்ற வாதங்களை தவிர்க்கவும். அரசு சார்ந்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

அரசியல்வாதிகள்:

🎗 அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை சரியாக நிறைவேற்றினால் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்படும். கட்சி நிமிர்த்தமான செலவும், விரயமும் உண்டாகும். மேல்மட்ட அதிகாரிகளுடன் விதண்டாவாதங்களை தவிர்க்கவும். மறைமுக வருவாய்கள் கிடைக்கும்.

கலைஞர்கள்:

🎗 கலைத்துறைகளில் போட்டிகள் அதிகரிக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவும். மெத்தன போக்கின்றி செயல்படுவது நல்லது. பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தாமதத்திற்குப் பிறகு வரவுகள் கூட கிடைக்கும்.

பெண்கள்:

🎗 புத்திரர் வழியில் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இறை தரிசனம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆடம்பரமான செலவுகளை குறைப்பதால் கடன்கள் குறையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளில் தாமதநிலை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதால் உடல் சோர்வடையும்.

மாணவர்கள்:

🎗 கல்வி பணிகளில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற பொழுதுபோக்குகளால் மனதின் பாதைகளில் மாற்றம் உண்டாகும். விதண்டாவாதங்களை குறைத்துக் கொள்ளவும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்துச் செல்வது நல்ல பலன்களைத் தரும். உடன் பழகும் நண்பர்களிடம் கவனம் வேண்டும்.

நன்மைகள்:

🎗 ராகு கேதுவின் சஞ்சாரத்தால் புதிய கலைகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் ஏற்படும். செல்வத்தை பெருக்குவது சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.

தீமைகள்:

🎗 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும்.

வழிபாடு:

🎗 சனிக்கிழமையில் சனிபகவான், விநாயகரை வழிபட கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

🎗 வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.

🎗 மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். சுய ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றங்கள் உண்டாகக்கூடும். கும்ப ராசிக்கான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகின்றோம். கும்ப ராசி அன்பர்களே!! உங்கள் உயிர்த் துணையை காண நமது நித்ரா மணமாலையில் இன்றே வரன் பதிவு செய்யுங்கள்!! உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்திடுங்கள்!!

ragu ketu peyarchi 2023 to 2025


Our Nithra Matrimony App

Nithra Matrimony is one among the best matrimonial service you could find, very simple and easiest one so far to get a better soulmate for your life, and it is user friendly and designed precisely for all the Tamil people who are searching for a partner, they can find out their ally from the matched list reliant on their bias. Use our Nithra Matrimony App to keep track of your beloved spouse hunt.
Christian - Caste
By Profession
By City
By State
By Education
By Marital Status
By Dosham
Second Marriage By Caste
Divorcee By Caste
Divorcee By Location
Second Marriage By Location