காரடையான் நோன்பு விரதம்
🙏 காரடையான் நோன்பு என்பது தமிழ் இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கள் கணவர்கள் மற்றும் வருங்கால கணவர்களின் நலனுக்காக நடத்தப்படும் ஒரு முக்கியமான விரதமாகும். நாம் இந்தப் பதிவில் 2025 காரடையான் நோன்பு எப்போது? என்றும் இதன் பலன்கள் என்வென்றும் பார்க்கலாம். திருமணமான பெண்களுக்கு மட்டுமல்லாமல், திருமணமாகாத பெண்களும் இந்த நோன்பை கடைபிடித்து, தங்களுக்கு நல்ல கணவர் அமைய பிரார்த்தனை செய்யலாம். திருமணமாகாத பெண்கள் தன் வருங்கால கணவரை செலவில்லாமல் கரம் பிடிக்க, நித்ரா மேட்ரிமோனியில் முற்றிலும் இலவசமாக வரன் பதிவு செய்யுங்கள்!
காரடையான் நோன்பு கதை
🙏 சாவித்திரி தன் கணவன் சத்தியவானை யமதர்மனிடம் இருந்து மீட்டு வந்த கதையுடன் இந்நோன்பு இணைக்கப்பட்டுள்ளது. காரடையான் நோன்பு என்பது, பெண்களின் பக்தி, தியாகம் மற்றும் சக்தியை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான விரதமாகும்.
🙏 இந்த விரதம் மாசி மாத இறுதியிலும், பங்குனி மாத தொடக்கத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது. மாசி மாதத்தின் கடைசி நாள் இரவில் தொடங்கி பங்குனி முதல் நாள் காலையில் முடிகிறது. இந்த விரதம் காமாக்ஷி விரதம், கௌரி விரதம், சாவித்திரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
🙏 இந்த நாளில் விரதம் அனுஷ்டிக்கும் பெண்கள் பொதுவாக மஞ்சள் நிற ஆடைகளை அணிவார்கள். மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் சுப தருணத்தில் மஞ்சள் சரடு என்ற புனித நூல் கட்டப்படுகிறது.
காரடையான் நோன்பு 2025 நேரம்
🙏 சூரிய உதயம் : மார்ச் 14, 2025 (வெள்ளிக்கிழமை) காலை 6:40 மணி🙏 சூரிய அஸ்தமனம் : மார்ச் 14, 2025 மாலை 6:31
🙏 காரடையான் நோம்பு விரதம் நேரம் : மார்ச் 14, 6:40 AM - மார்ச் 14, 6:50 PM
🙏 மஞ்சள் சரடு முஹூர்த்தம் : மார்ச் 14, 2025 மாலை 6:50
காரடையான் நோன்பு மந்திரம்
🙏 உருகாத வெண்ணெயும், ஓரடையும் நான் தருவேன்!
ஒருகாலும் என் கணவர் எனை விட்டு நீங்காத அருள்தருவாய்!
🙏 என்ற மந்திரத்தை ஜபித்து சாவித்ரி அன்னையை மனதார பிரார்த்தனை செய்து வேண்டிக்கொள்ளுங்கள். அதன் பின் நோன்பு கயிறு கட்டுபவர்கள் கட்டிக் கொள்ளலாம். இதை கணவன் கையால் கட்டுவது சிறப்பு.
காரடையான் நோன்பு எப்படி கடைப்பிடிப்பது?
🙏 காரடையான் நோன்பு தினத்தன்று அதிகாலையில் எழுந்து, வீட்டை சுத்தம் செய்து, கோலமிட்டு, குளித்து தயாராக வேண்டும்.🙏 பூஜையறையில் அம்பாள் படத்திற்கு முன்பு, மஞ்சள் சரடு, பழங்கள், நைவேத்தியம் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
🙏 காலை முழுவதும் விரதம் இருந்து, மாலை வேளையில் அடை, பாயசம் செய்து நைவேத்தியம் செய்து, பின்னர் விரதத்தை முடிக்க வேண்டும்.
🙏 சிலர், முழு நாள் விரதம் இருக்காமல், மாலை மட்டும் விரதம் இருந்து, இரவில் நைவேத்தியம் செய்து பிறகு சாப்பிடுவார்கள்.
🙏 காரடையான் நோன்பு தினத்தன்று, புது மஞ்சள் சரடு கட்டிக்கொள்வது வழக்கம்.
காரடையான் நோன்பின் சிறப்புகள்
🙏 கணவனின் ஆயுள், ஆரோக்கியம் நீடிக்கும்.🙏 குடும்பத்தில் ஒற்றுமை வலுப்படும்.
🙏 கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் அமைவார்.
🙏 தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.
முடிவுரை
🙏 அன்பு நண்பர்களே! இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நம்புகின்றோம். காரடையான் நோன்பு என்பது ஒரு வளமான பாரம்பரியம் வாய்ந்த முக்கியமான விரதமாகும். காரடையான் நோன்பு திருமணமாகாத பெண்களுக்கும் மிகவும் முக்கியமானது. சாவித்திரியின் பக்தியைப் போல, தங்களுக்கு குணம், கல்வி, குடும்ப பின்னணி எல்லாம் சிறப்பாக இருக்கும் ஒரு நல்ல வாழ்க்கைத் துணை அமைய வேண்டி இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம். நித்ரா மேட்ரிமோனியில் இலவசமாக பதிவு செய்து உங்கள் வாழ்க்கைத் துணையை கண்டறியவும்!