காரடையான் நோன்பு
முன்னுரை:
🧆 திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். திருமணம் என்பது பெண்களின் ஒரு முக்கிய அங்கமாகவே கருதப்படுகிறது. திருமணமாகாத பெண்கள் தங்கள் திருமணத்திற்காகவும், சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியத்தைப் பேணுவதற்காகவும் கடைப்பிடிக்கப்படும் விரதமே காரடையான் நோன்பு ஆகும். உங்கள் வீட்டு இளவரசிக்கொ அல்லது உங்களுக்கோ இன்னும் திருமணம் ஆகவில்லையா? இனி கவலை வேண்டாம்...காரடையான் நோன்பினைக் கடைப்பிடித்து உங்களுக்கேற்ற அல்லது உங்கள் மகளுக்கேற்ற மணவாளனை காணநித்ரா மணமாலையில் பதிவு செய்யுங்கள்!! மேலும், இப்பதிப்பில் காரடையான் நோன்பு பற்றிப் பார்ப்போம்.
காரடையான் நோன்பு:
🧆 விரைவில் திருமணம் செய்து நல்ல கணவனைப் பெற விரும்பும் கன்னிப் பெண்கள் கடைப்பிடிக்கும் விரதமே காரடையான் விரதம். இந்த விரதம் மாசி மாத இறுதியிலும், பங்குனி மாத தொடக்கத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
🧆 இத்திருவிழாவின் போது பெண்கள் திருமாங்கல்யத்தை மாற்றுவார்கள். அதாவது மற்ற விரதங்களுக்கு கைகளில் சரடு மட்டுமே கட்டுவர். இந்த விரதத்தின் போது தாலிக் கயிற்றிற்குப் பதிலாக புதிய கயிற்றைக் கட்டுவார்கள். சிலர் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.
🧆 காரடையான் விரதம் மாங்கல்ய பலன் தரும் விரதம் என்றும் தீர்க்க சுமங்கலி வரம் அருளும் விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் சாவித்திரி விரதம் என்றும் காமாட்சி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.
விரதம் இருப்பது எப்படி?
🧆 காரடையான் நோன்பின் போது வீட்டைச் சுத்தம் செய்து மாக்கோலம் போட வேண்டும். மாவிலை தோரணத்தை வாசல் நிலையிலும், சுவாமி அறை நிலையிலும் கட்டப்பட வேண்டும். பூஜை அறையைச் சுத்தம் செய்து, கோலமிட்டு அலங்கரித்து, காமாட்சி மற்றும் சுவாமியின் உருவங்களுக்குப் பூமாலையினை அணிவிக்க வேண்டும்.
🧆 ஒரு கலசத்தின் மேல் தேங்காய் மற்றும் மாவிலையினை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி அதன் மேல் மஞ்சள் கயிறு கட்ட வேண்டும். காமாட்சி தேவியின் உருவத்தை அருகில் வைத்து சாவித்திரியாக எண்ணி வணங்க வேண்டும். சாவித்திரி தன் கணவர் சத்தியவானுடன் காட்டில் வசித்தபோது, அங்கு கிடைத்த செந்நெல் மற்றும் காராமணி ஆகியவற்றைக் கொண்டு ஆடை தயார் செய்து அன்னைக்கு வெண்ணெயுடன் பிரசாதமாக வழங்கி வழிப்பட்டார். எனவே, சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பெறப்படும் நெற்பயிர்களை கொண்ட அரிசி மாவினால் அடையினை தயார் செய்து படைக்க வேண்டும்.
🧆 வாழை இலையின் மேல் வெற்றிலை, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய் ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்து, மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) போட்டு இலையின் நடுவில் வைத்து வெண்ணெயும் வெல்ல அடையும் வைக்க வேண்டும்.
🧆 விரதக் கயிறுகளை அம்மனுக்கு அர்ச்சனை செய்து பின்னர் விரதம் இருப்பவர்களின் கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். வயதான பெண்கள் இளைய பெண்களுக்கு சரம் கட்ட வேண்டும். பிறகு அதைக் கட்டி அம்மனை வழிபட்ட பின் அடையை உண்ணலாம்.
🧆 விரதத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தீபம் ஏற்றி வைப்பது முக்கியமாகும். அன்று பால், பழம் சாப்பிட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும். பின்னர், பிரசாதத்தினை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ள வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன் பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகளை கொடுக்க வேண்டும்.
காரடையான் நோன்பின் தத்துவம்:
🧆 கணவனுடன் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதே இந்த விரதத்தின் தத்துவம் ஆகும். சுமங்கலிப் பெண்களால் கணவனின் வாழ்வு சிறக்க காரடையான் விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. காரடை என்பது பருவத்தில் விளையும் நெல்லைப் பொடித்து, இனிப்பு அரிசி மாவுடன் கலந்து தயாரிக்கப்படுகிறது.
காரடையான் நோன்பின் பலன்கள் :
🧆 இந்த விரத முறையை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் கடைபிடிப்பதால் கணவன் மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் நீங்கி பாசமும் அன்பும் பெருகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று கூடுவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு திருமண வாழ்க்கை நிறைவாக அமையும். சகலவிதமான செல்வங்களும் நிறைவான வாழ்வும் பெண்களுக்குக் கிடைக்கும். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
🧆 சாவித்ரி, காரடையான் விரதம் எடுத்து வீரம், பக்தி, ஞானம், பொறுமை, நம்பிக்கை ஆகியவற்றுடன் எமதர்மரிடம் போரிட்டு தன் கணவனின் உயிரை மீட்டாள். அதுபோல வாழ்வின் இன்னல்களைக் களைந்து வசந்தமாக மாற தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சியோடும் இந்த விரத வழிபாட்டை நாமும் மேற்கொள்வோம்.
முடிவுரை:
🧆 மேலே குறிப்பிட்டுள்ள பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகின்றோம். திருமணத்தில் இரு வேறு மனங்கள் ஒருசேர சங்கமித்து, இரு உடல் ஓர் உயிராக உருப்பெறுவதே திருமணம் ஆகும். அத்தகைய சிறப்புமிக்க இந்த நிகழ்வினை நமது நித்ரா மேட்ரிமோனியின் மூலம் இலவசமாகப் பதிவு செய்து, உங்களுக்கானவர்களோடு வசந்தமான வாழ்க்கையினை தொடங்குங்கள்!!