கடகம் ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025
ராகு-கேது என்பது நிழல் கிரகங்கள் ஆகும். இவை தாங்கள் இணைந்து இருக்கும் கிரகங்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கின்றன. ராகு கேது கிரகங்கள் பெயர்ச்சி அடையும் காலங்களிலும் அவ்வாறே பலன் தருகின்றன. ராகு-கேது கிரகங்கள் எப்பொழுதும் 108 பாகை வித்தியாசத்தில் இடம் வலமாக சுற்றி வருகின்றன. ராசி ராகு-கேது பெயர்ச்சி 2023 - 2025 கடகம் ராசிக்கு என்னென்ன பலன்களை கொடுக்கப்போகிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். கடக ராசிக்காரர்களே!! இன்னும் திருமணம் கைகூடவில்லையா? வரன் அமையவில்லை என்று கவலையா? இனிமே உங்களுக்கு நல்ல நேரம் தான்...!! நித்ரா மணமாலையில் உங்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத்துணை காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பவே ரெஜிஸ்டர் பண்ணுங்க!!
ராகு-கேது
🪔 வளமான கற்பனையும், எழுச்சியும் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லும் கடக ராசி அன்பர்களே..! இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுபத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் கடக ராசிக்கு பாக்கிய ஸ்தானம் என்னும் ஒன்பதாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் சகோதர ஸ்தானம் என்று அழைக்கக்கூடிய மூன்றாம் பாவகத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.
🪔 ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் ராகுவினால் செய்யும் முயற்சிகளில் மாற்றமான அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். திருத்தலம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தடைபட்டு வந்த குலதெய்வங்களுக்கு பூஜை, வழிபாடுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான குழப்பங்களிலிருந்து தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அடகு வைத்த சில பொருட்களை மீட்டு எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைப்பதற்கான சூழல் உண்டாகும்.
🪔 ராசிக்கு மூன்றாம் வீட்டில் அடி எடுத்து வைக்கும் கேதுவினால் மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். மனதில் இனம்புரியாத புதுவிதமான ஆசைகளும், அறிமுகங்களும் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சூழ்நிலைகள் அமையும். உறவுகளின் வழியில் புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தந்தைவழி தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுக திறமைகளின் மூலம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சில செயல்பாடுகளின் மூலம் எதிர்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
உடல் ஆரோக்கியம்
🪔 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயாரின் உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். காலம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். இரவு பயணத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
பொருளாதாரம்
🪔 சிறு சேமிப்பு மற்றும் சிறிய சீட்டுத் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கிடைக்கும் சிறு வருமானத்தையும் மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
🪔 உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த அலைச்சல்கள் குறையும். எதிர்பார்த்திருந்த உயர் பதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். தகவல் தொடர்புத் துறைகளில் சூழ்நிலைக்கேற்ப செயல்படவும். பணி நிமிர்த்தமான சில நுணுக்கங்களை அறிவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அடிக்கடி சிறு தூரப் பயணங்களின் மூலம் லாபம் ஏற்படும். பத்திரிகை தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உருவாகும்.
வியாபாரிகள்
🪔 வியாபார பணிகளில் வேலையாட்களுடனான ஒத்துழைப்புகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். மொபைல் மற்றும் புதிய தொழில்நுட்பம் தொடர்பான தயாரிப்புகளில் முதலீடுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ஒப்பந்தம் தொடர்பான வியாபாரங்கள் கைகூடும். கால்நடைகள் சார்ந்த வியாபாரத்தில் லாபம் உண்டாகும். விவேகமான செயல்பாடுகள் மூலம் கடினமான பணிகளையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். கூட்டு வியாபாரத்தில் புரிதலும், ஒத்துழைப்பும் உண்டாகும். நறுமணப் பொருட்கள் சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும்.
அரசியல்வாதிகள்
🪔 சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும், ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சிறு சிறு பணிகளிலும் கவனத்துடன் செயல்படவும். கட்சி மேலிடம் பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.
கலைஞர்கள்
🪔 கலைத்துறையில் இருப்பவர்களுக்குத் திறமைகளை வெளிப்படுத்தி, மகிழ்ச்சியான வாழ்வையும், செல்வாக்கையும் மேம்படுத்துவதற்கான அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் மீது இருந்த சிறு சிறு வதந்திகள் மறையும். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நுணுக்கமான பல விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். ஓவியம் மற்றும் இலக்கியம் சார்ந்த பணிகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
பெண்கள்
🪔 மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். கணிப்பொறி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். கௌரவப் பதவிகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் மனம் திறந்து பேசுவது புரிதலுக்கு வழிவகுக்கும்.
மாணவர்கள்
🪔 புதிய மாற்றங்களின் மூலம் நல்ல மதிப்பெண்களும், புரிதலும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் இருந்துவந்த ஒருவிதமான சோர்வு மனப்பான்மைகள் குறையும். மேல்நிலை கல்வியில் இருந்துவந்த தடைகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். விளையாட்டு செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும்.
நன்மைகள்
🪔 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் மனதில் தன்னம்பிக்கையும் செயல்பாடுகளில் புதிய கண்ணோட்டமும் உண்டாகும்.
தீமைகள்
🪔 நடைபெற இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியால் உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். ஒப்பந்தப் பணிகளில் நிதானத்துடன் செயல்படவும்.
வழிபாடு
🪔 திருநாகேஸ்வரத்தில் வீற்றிருக்கும் நாகநாதரை வழிபட செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி ஒத்துழைப்பு மேம்படும்.
🪔 ராகவேந்திரரை வியாழக்கிழமை தோறும் வழிபாடு செய்துவர சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும்.
மேற்கூறிய பலன்கள் யாவும் பொதுவான பலன்கள் ஆகும். அவரவர் ஜாதகத்தில் நடைபெறும் தசா புத்தியின் படி பலன்கள் மாறும். மேலே உள்ள பலன்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கின்றோம். கடகம் ராசியில் பிறந்தவர்களா நீங்கள்? வரன் தேடி கலைத்து விட்டீர்களா? உங்களுக்கான சிறந்த இலவச வரன் சேவையை நித்ரா மணமாலை வழங்குகிறது. உடனே இலவசமாக வரன் பதிவு பண்ணுங்க! உங்க சந்தோஷத்தை ஷேர் பண்ண பொருத்தமான வாழ்க்கைத் துணையோட இணையுங்கள்!!